சமந்தாவுக்கு நான் மட்டும் குறைச்சலா? பிகினி போட்டியில் குதித்த திரிஷா!
பெங்களூர்: திரிஷா நடித்து வெளியாக உள்ள முதல் கன்னட படத்திலேயே அம்மணி பிகினியில் உலா வரப்போவதாக கூறுகின்றனர் சாண்டல்வுட் வட்டாரத்தினர். தமிழ் திரைப்படங்களில் திரிஷா இழுத்து போர்த்தி, கண்ணியமாக நடித்துவரும் நிலையில், கன்னட ரசிகர்களுக்கு மட்டும் மனதை தாராளமாக்கியுள்ளார் திரிஷா என்று 'மாத்தனாடுகிறார்கள்', கர்நாடக ரசிகர்கள்.

அஞ்சான் சமந்தா
அஞ்சான் படத்தில் சமந்தா பிகினி அணிந்த பரபரப்பு ஓய்வதற்குள், திரிஷா பிகினிதான் திரையுலகில் இப்போது ஹாட் டாப்பிக்காக மாறிப்போயுள்ளது. அஞ்சான் படத்தில் சில நொடிகளை சமத்து பெண் சமந்தா பிகினியில் வந்தாலும், அதுதான் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

முதல் கன்னட படம்
திரிஷா முதன்முறையாக பவர் *** என்ற கன்னடப்படத்தில் நடித்துள்ளார். படம் பெயரே ஒரு மார்க்கமாக இருப்பதைபோல, திரிஷாவும் இதில் கவர்ச்சி காண்பித்துள்ளதாக கிசுகிசுக்கின்றனர் சாண்டல்வுட் (கன்னட திரையுலகம்) வட்டாரத்தில்.

இம்மாதம் ரிலீஸ்
இந்த திரைப்படத்தில், மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வரும் 28ம்தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இதுவரை நீச்சல் ஆடையில் திரிஷா நடித்திருந்தாலும், பிகினி எனப்படும் டூபீசில் அவர் நடித்தது இல்லை என்று கூறப்படுகிறது.

பிகினி திருப்பு முனை?
திரையுலகில் நீண்ட நாட்களாக ஹீரோயினாக கோலோச்சிவரும் திரிஷாவுக்கு பிகினி மற்றொரு திருப்புமுனையாக அமையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











