’த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் எடுத்தவரு.. இப்போ த்ரிஷாவை வச்சே படம் எடுக்கப் போறாரா?

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், கயல் ஆனந்தி நடித்த 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் சிம்பு, பிரபுதேவா, விஷால் மற்றும் அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது.

Trisha Good Bad Ugly Ajith Kumar

புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

மீண்டும் அஜித்துடன் த்ரிஷா?: மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்திலும் த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே த்ரிஷா நடிக்கப் போகிறாரா என சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

ஸ்ரீலீலா இருக்காரா?: குட் பேட் அக்லி படத்தில் முன்னதாக டோலிவுட் நடிகை ஸ்ரீலீலா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது த்ரிஷாவின் பெயர் அடிபட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்ரீலீலா அந்த படத்தில் இருக்காரா? அல்லது 2 ஹீரோயின்களா? என்பது குறித்த அப்டேட்கள் சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் ரிலீஸ்: விடாமுயற்சி திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியில் லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், அதன் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஆதிக் ரவிச்சந்திரன் அறிவித்ததை போலவே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசாந்த் நீல் படம்: அஜித் ஜெட் வேகத்தில் தனது சினிமா கரியரை மாற்ற தொடங்கியிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்ட படம் ஒன்றிலும் அவர் நடிக்கப் போவது உறுதி என்றே கூறுகின்றனர். அதன் அதிகாரப்பூர்வ அப்டேட் மட்டும் வெளியாகி விட்டால் அஜித் ரசிகர்கள் செம ஹேப்பி ஆகிவிடுவார்கள்.

பிரபாஸுடன் த்ரிஷா: நடிகை த்ரிஷாவும் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த த்ரிஷா கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அவர் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்கவுள்ள நிலையில், பிரபாஸ் உடன் ஸ்ப்ரிட் படத்திலும் த்ரிஷா இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. மேலும், பாலிவுட்டில் சல்மான் கான் படத்திலும் த்ரிஷா கமிட் ஆகியுள்ளதாக கூறுகின்றனர். மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்த ஐடென்டிடி படம், தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வம்பரா என ஏகப்பட்ட லைன் அப்கள் த்ரிஷா கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X