twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கவலையளிக்கின்றது: த்ரிஷா!

    |

    Recommended Video

    மோஹினி பிரஸ் மீட்டில் பாலியல் குற்றங்களை பற்றி பேசிய த்ரிஷா- வீடியோ

    சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை நினைத்து கவலைப்படுவதாக த்ரிஷா தெரிவித்துள்ளார்.

    த்ரிஷா விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர உள்ள 96 திரைப்பட டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரிஷாவின் இளமை அழகை பார்த்த ரசிகர்கள் எப்போதுமே த்ரிஷா த்ரிஷாதான் என ஹைஃபை கொடுக்க ஆரம்பித்தனர்.

    Trisha worried about child abuse!

    இந்த நிலையில், த்ரிஷா நடித்துள்ள மோகினி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்வில் த்ரிஷா பேசும்போது, மோகினி, வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அவர் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் மோகினி எனவும் தெரிவித்தார். 90% வெளிநாட்டில் படமாகியுள்ளதாகவும், இப்படத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றி பேசியுள்ளோம் எனவும் கூறினார்.

    குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைப் பற்றி பேசிய த்ரிஷா, செய்தித் தாள்களில் குழந்தைகளுக்கு எதிரான அநீதிகள் பற்றிய செய்தி தான் அதிகமாக உள்ளது. அந்த செய்திகளை படிக்கும்போது மனதுக்கு வருத்தமாக உள்ளது, அதைப்படித்தால் நாள் முழுவதும் அதைப் பற்றிய நினைப்பே இருக்கும் என தெரிவித்தார்.

    பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லை தொடர்பான செய்திகளை படிக்கும்போது மிகவும் வருந்துவேன் என்றும், இதுபோன்ற சம்பவங்களை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் த்ரிஷா குறிப்பிட்டார்.

    இப்படத்தில் த்ரிஷா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை மாதேஷ் இயக்கியுள்ளார். ஜூலை 27ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

    English summary
    Trisha starrer Mohini movie press meet was held in Chennai. Trisha did dual role in this movie as Vaishnavi and Mohini.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X