»   »  ரஜினிக்கு ஜோடி: த்ரிஷா தீவிர ஆசை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடியாக நடிக்க ஆசையாக உள்ளதாகவும், சிவாஜி படம் மூலம் அந்த ஆசை நிறைவேறினால்பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார் த்ரிஷா.ஏவி.எம். தயாரிப்பில் உருவாகவுள்ள ரஜினியின் சிவாஜி படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற மில்லியன்டாலர் கேள்வி கோலிவுட்டிலும், ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.ஐஸ்வர்யா ராயை ஜோடியாக்க முயற்சி நடக்கிறது. அது சரிப்படாவிட்டால் நடிகை மல்லிகா ஷெராவத், த்ரிஷா அல்லதுநயனதாரா நடிக்கலாம் என்று பேசப்படுகிறது.ரஜினிக்கான ஜோடி பட்டியலில் தனது பெயரும் இருப்பதால் த்ரிஷா ரொம்பவே மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.இந் நிலையில் படத்தைத் தயாரிக்கப் போகும் ஏவி.எம். நிறுவனத்திற்கு திடீரென செய்தியாளர்களை வரவழைத்தார் த்ரிஷா.இதனால், அவர்தான் அடுத்த ஹீரோயின் என்று நினைத்த செய்தியாளர்கள் அங்கு படையெடுத்தனர்.ஏவி.எம். ஸ்டுடியோவில் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய த்ரிஷா,சிவாஜி படத்தில் ரஜினி சாருக்கு ஜோடியாக நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பல பெயர்கள்பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதில் என் பெயரும் உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.இருப்பினும் இதுவரை நான்தான் ஹீரோயின் என்பது உறுதி செய்யப்படவில்லை. அந்த வாய்ப்பு கிடைத்தால் ரொம்பசந்தோஷம். யாருக்குத்தான் ரஜினியுடன் ஜோடி சேர கசக்கும்? எனது நீண்ட நாள் ஆசையும் அதுதான். ஒரே ஒரு படத்திலாவதுரஜினியுடன் நடித்து விட வேண்டும் என்று லட்சியத்துடன் உள்ளேன்.சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை உடனே ஏற்றுக் கொள்வேன். இருப்பினும் இதுவரையாரும் இதுதொடர்பாக என்னை அணுகவில்லை என்பதுதான் உண்மை.விஜய்யுடன் நான் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள். இதனால் விஜய்-த்ரிஷா ஜோடி வெற்றி ஜோடி என்றபெயரைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் எங்களது ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.நான் தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூற முடியாது. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமேநடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தமிழில் 3 படங்களில் புக் ஆகியுள்ளேன். தமிழுக்குத்தான் முதலிடம், முக்கியத்துவம்எல்லாம்.தமிழைப் போலவே தெலுங்கிலும் நான் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் இரு மொழிகளிலும் எனக்கு நிறையப்படங்கள் வந்துள்ளன என்றார் த்ரிஷா.அது சரி, எப்போதுமே ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்களே, தமிழ் மீது அப்படி என்ன பாரபட்சம் என்று ஒரு நிருபர் கேட்டபோது,அய்யோ அப்படியெல்லாம் இல்லை. தாய் மொழியை யாராவது புறக்கணிப்பார்களா? வேகமாக பேசும்போது ஆங்கிலம்இடையில் புகுந்து விடுகிறது.என்னை அறியாமல் பேசி விடுகிறேன். இப்போது அதை சரி செய்து வருகிறேன். கூடுமானவரை தமிழிலேயே பேசமுயற்சிக்கிறேன் என்றார் த்ரிஷா.

ரஜினிக்கு ஜோடி: த்ரிஷா தீவிர ஆசை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடியாக நடிக்க ஆசையாக உள்ளதாகவும், சிவாஜி படம் மூலம் அந்த ஆசை நிறைவேறினால்பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார் த்ரிஷா.ஏவி.எம். தயாரிப்பில் உருவாகவுள்ள ரஜினியின் சிவாஜி படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற மில்லியன்டாலர் கேள்வி கோலிவுட்டிலும், ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.ஐஸ்வர்யா ராயை ஜோடியாக்க முயற்சி நடக்கிறது. அது சரிப்படாவிட்டால் நடிகை மல்லிகா ஷெராவத், த்ரிஷா அல்லதுநயனதாரா நடிக்கலாம் என்று பேசப்படுகிறது.ரஜினிக்கான ஜோடி பட்டியலில் தனது பெயரும் இருப்பதால் த்ரிஷா ரொம்பவே மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.இந் நிலையில் படத்தைத் தயாரிக்கப் போகும் ஏவி.எம். நிறுவனத்திற்கு திடீரென செய்தியாளர்களை வரவழைத்தார் த்ரிஷா.இதனால், அவர்தான் அடுத்த ஹீரோயின் என்று நினைத்த செய்தியாளர்கள் அங்கு படையெடுத்தனர்.ஏவி.எம். ஸ்டுடியோவில் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய த்ரிஷா,சிவாஜி படத்தில் ரஜினி சாருக்கு ஜோடியாக நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பல பெயர்கள்பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதில் என் பெயரும் உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.இருப்பினும் இதுவரை நான்தான் ஹீரோயின் என்பது உறுதி செய்யப்படவில்லை. அந்த வாய்ப்பு கிடைத்தால் ரொம்பசந்தோஷம். யாருக்குத்தான் ரஜினியுடன் ஜோடி சேர கசக்கும்? எனது நீண்ட நாள் ஆசையும் அதுதான். ஒரே ஒரு படத்திலாவதுரஜினியுடன் நடித்து விட வேண்டும் என்று லட்சியத்துடன் உள்ளேன்.சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை உடனே ஏற்றுக் கொள்வேன். இருப்பினும் இதுவரையாரும் இதுதொடர்பாக என்னை அணுகவில்லை என்பதுதான் உண்மை.விஜய்யுடன் நான் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள். இதனால் விஜய்-த்ரிஷா ஜோடி வெற்றி ஜோடி என்றபெயரைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் எங்களது ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.நான் தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூற முடியாது. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமேநடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தமிழில் 3 படங்களில் புக் ஆகியுள்ளேன். தமிழுக்குத்தான் முதலிடம், முக்கியத்துவம்எல்லாம்.தமிழைப் போலவே தெலுங்கிலும் நான் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் இரு மொழிகளிலும் எனக்கு நிறையப்படங்கள் வந்துள்ளன என்றார் த்ரிஷா.அது சரி, எப்போதுமே ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்களே, தமிழ் மீது அப்படி என்ன பாரபட்சம் என்று ஒரு நிருபர் கேட்டபோது,அய்யோ அப்படியெல்லாம் இல்லை. தாய் மொழியை யாராவது புறக்கணிப்பார்களா? வேகமாக பேசும்போது ஆங்கிலம்இடையில் புகுந்து விடுகிறது.என்னை அறியாமல் பேசி விடுகிறேன். இப்போது அதை சரி செய்து வருகிறேன். கூடுமானவரை தமிழிலேயே பேசமுயற்சிக்கிறேன் என்றார் த்ரிஷா.

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் ஜோடியாக நடிக்க ஆசையாக உள்ளதாகவும், சிவாஜி படம் மூலம் அந்த ஆசை நிறைவேறினால்பெரும் மகிழ்ச்சி அடைவேன் என்கிறார் த்ரிஷா.

ஏவி.எம். தயாரிப்பில் உருவாகவுள்ள ரஜினியின் சிவாஜி படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற மில்லியன்டாலர் கேள்வி கோலிவுட்டிலும், ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஐஸ்வர்யா ராயை ஜோடியாக்க முயற்சி நடக்கிறது. அது சரிப்படாவிட்டால் நடிகை மல்லிகா ஷெராவத், த்ரிஷா அல்லதுநயனதாரா நடிக்கலாம் என்று பேசப்படுகிறது.


ரஜினிக்கான ஜோடி பட்டியலில் தனது பெயரும் இருப்பதால் த்ரிஷா ரொம்பவே மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.

இந் நிலையில் படத்தைத் தயாரிக்கப் போகும் ஏவி.எம். நிறுவனத்திற்கு திடீரென செய்தியாளர்களை வரவழைத்தார் த்ரிஷா.இதனால், அவர்தான் அடுத்த ஹீரோயின் என்று நினைத்த செய்தியாளர்கள் அங்கு படையெடுத்தனர்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் வைத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய த்ரிஷா,

சிவாஜி படத்தில் ரஜினி சாருக்கு ஜோடியாக நான் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பல பெயர்கள்பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அதில் என் பெயரும் உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

இருப்பினும் இதுவரை நான்தான் ஹீரோயின் என்பது உறுதி செய்யப்படவில்லை. அந்த வாய்ப்பு கிடைத்தால் ரொம்பசந்தோஷம். யாருக்குத்தான் ரஜினியுடன் ஜோடி சேர கசக்கும்? எனது நீண்ட நாள் ஆசையும் அதுதான். ஒரே ஒரு படத்திலாவதுரஜினியுடன் நடித்து விட வேண்டும் என்று லட்சியத்துடன் உள்ளேன்.

சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை உடனே ஏற்றுக் கொள்வேன். இருப்பினும் இதுவரையாரும் இதுதொடர்பாக என்னை அணுகவில்லை என்பதுதான் உண்மை.

விஜய்யுடன் நான் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்கள். இதனால் விஜய்-த்ரிஷா ஜோடி வெற்றி ஜோடி என்றபெயரைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும் எங்களது ஜோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

நான் தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூற முடியாது. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமேநடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் தமிழில் 3 படங்களில் புக் ஆகியுள்ளேன். தமிழுக்குத்தான் முதலிடம், முக்கியத்துவம்எல்லாம்.


தமிழைப் போலவே தெலுங்கிலும் நான் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்ததால் இரு மொழிகளிலும் எனக்கு நிறையப்படங்கள் வந்துள்ளன என்றார் த்ரிஷா.

அது சரி, எப்போதுமே ஆங்கிலத்திலேயே பேசுகிறீர்களே, தமிழ் மீது அப்படி என்ன பாரபட்சம் என்று ஒரு நிருபர் கேட்டபோது,அய்யோ அப்படியெல்லாம் இல்லை. தாய் மொழியை யாராவது புறக்கணிப்பார்களா? வேகமாக பேசும்போது ஆங்கிலம்இடையில் புகுந்து விடுகிறது.

என்னை அறியாமல் பேசி விடுகிறேன். இப்போது அதை சரி செய்து வருகிறேன். கூடுமானவரை தமிழிலேயே பேசமுயற்சிக்கிறேன் என்றார் த்ரிஷா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil