»   »  திரிஷாவின் திடீர் மாற்றம்! சரமாரியாக சர்ச்சைகளில் சிக்கி திக்குமுக்காடி வரும் திரிஷா, கண் போன பின் சூரிய நமஸ்காரம் என்பது போல கொஞ்சம்கொஞ்சமாக தன்னை மாற்றி வருகிறார்.அட்டகாசமான தமிழச்சியான திரிஷா, யாரைப் பார்த்தாலும், ஆங்கிலத்தில்தான் பொளந்து கட்டுவார். எப்போவாச்சும் தமிழ்அவர் வாயில் எட்டிப் பார்க்கும். மறந்தும் தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே வாய் ஜாலம் காட்டுவது திரிஷாவின் வாடிக்கை.ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் திரிஷா ஆங்கிலத்தில் அளந்து கொண்டே போனார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இயக்குநர்டி.ராஜேந்தர், தான் பேசும்போது திரிஷாவை கடுமையாக விமரிசித்தார்.தமிழ்ப் பொண்ணே இப்படி ஆங்கிலத்தில் பேசினால், மும்பையிலிருந்து வரும் நடிகைகள் எப்படி தமிழில் பேச முன்வருவார்கள்என்று சூடு கொடுத்தார்.ஆனால் திரிஷா இந்த விமர்சனங்களையெல்லாம் கண்டு கொண்டதே இல்லை. அவர் பாட்டுக்குஅவருக்குப் பிடித்த பாஷையில்தான் பேசிக் கொண்டிருந்தார்.இந்த சலசலப்பு அடங்குவதற்குள் ஆபாச குளியல் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.இதனால் கொஞ்ச நாள் அப்செட் ஆகியிருந்தார். கொஞ்ச நாளுக்கு முன்பு இன்னொரு சர்ச்சையில் சிக்கினார் திரிஷா. தோழர், தோழியருடன், சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் சப்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு டான்ஸ் ஆடினார் திரிஷா, போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர் எனசெய்தி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால் தான் டான்ஸ் எல்லாம் ஆடவில்லை என்று மறுத்தார் திரிஷா. ஆனால் சென்னை போலீஸ் கமிஷனரே இதைஉறுதிப்படுத்தினார். ஒரு வழியாக இந்த சர்ச்சை முடிந்து அமைதி திரும்பியது.இப்படி வரிசையாக சிக்கல்களில் சிக்கி வந்தால் ஒரு நாளைக்கு தனது பெயர் டோட்டல் டேமேஜ் ஆகி விடும் என்பதைதிரிஷாவுக்கு அவருக்கு நெருங்கிய திரையுலக நண்பர்கள் எடுத்துரைக்கவே இப்போது தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில்குதித்துள்ளார் திரிஷா.முடிந்தவரை ஆங்கிலத்தைத் தவிர்க்க இப்போது முயலுகிறார், அதேபோல செய்தியாளர்களிடம் பேசும்போது மிகுந்த கவனமாகபேசுகிறார். கூடுமான வரை சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டால் அருகில் இருக்கும் அம்மாவைக் கை காட்டி விடுகிறார்.சீனியர் நடிகர், நடிகையர், இயக்குநர்கள் யாராவது வந்தால் அவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்கிறார்.இதை விட முக்கியமாக, சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாத வகையில் தனது நண்பர்களோடு சேர்ந்து அவுட்டிங் போகிறார்.ரொம்பவே அடக்கமாக மாறி வருகிறார் திரிஷா. சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சூர்யா, திரிஷா இணைந்து நடிக்கும் ஆறு படத்தின் படப்பிடிப்பு நடந்தது.வழக்கமாக அல்டாப் அழகியாக காணப்படும் திரிஷா, அன்று மிக மிக அடக்கமாக, அமைதியாக, காணப்பட்டார்.அடடா, திரிஷா மாறி விட்டாரே என்று சந்தோஷப்படும் நிருபர்கள் அவரை நெருங்கி ஏன் மேடம் நீங்கள் மட்டும் அடிக்கடிசர்ச்சையில் சிக்குகிறீர்கள் என்று கேட்டால், நடிப்பு எனது தொழில், மேக்கப்பை அகற்றி விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டுவெளியேறி விட்டால், மற்ற பெண்களைப் போலத்தான் நானும். எனது வயதுக்கே உரிய துறுதுறுப்பு என்னிடம் உள்ளது. இதுசிலருக்குப் பிடிக்கவில்லை.எனது நண்பர்களுடன் நான் வெளியில் போனால் இவர்களுக்கு என்ன? வேண்டும் என்றே சிலர் என்னைப் பற்றி தவறானசெய்திகளைப் பரப்பி கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள். அதனால்தான் இப்போதெல்லாம் தேவையில்லாமல் யாரிடமும்பேசுவதில்லை என்று புலம்பித் தள்ளுகிறாராம்.மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான்!

திரிஷாவின் திடீர் மாற்றம்! சரமாரியாக சர்ச்சைகளில் சிக்கி திக்குமுக்காடி வரும் திரிஷா, கண் போன பின் சூரிய நமஸ்காரம் என்பது போல கொஞ்சம்கொஞ்சமாக தன்னை மாற்றி வருகிறார்.அட்டகாசமான தமிழச்சியான திரிஷா, யாரைப் பார்த்தாலும், ஆங்கிலத்தில்தான் பொளந்து கட்டுவார். எப்போவாச்சும் தமிழ்அவர் வாயில் எட்டிப் பார்க்கும். மறந்தும் தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே வாய் ஜாலம் காட்டுவது திரிஷாவின் வாடிக்கை.ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் திரிஷா ஆங்கிலத்தில் அளந்து கொண்டே போனார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இயக்குநர்டி.ராஜேந்தர், தான் பேசும்போது திரிஷாவை கடுமையாக விமரிசித்தார்.தமிழ்ப் பொண்ணே இப்படி ஆங்கிலத்தில் பேசினால், மும்பையிலிருந்து வரும் நடிகைகள் எப்படி தமிழில் பேச முன்வருவார்கள்என்று சூடு கொடுத்தார்.ஆனால் திரிஷா இந்த விமர்சனங்களையெல்லாம் கண்டு கொண்டதே இல்லை. அவர் பாட்டுக்குஅவருக்குப் பிடித்த பாஷையில்தான் பேசிக் கொண்டிருந்தார்.இந்த சலசலப்பு அடங்குவதற்குள் ஆபாச குளியல் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.இதனால் கொஞ்ச நாள் அப்செட் ஆகியிருந்தார். கொஞ்ச நாளுக்கு முன்பு இன்னொரு சர்ச்சையில் சிக்கினார் திரிஷா. தோழர், தோழியருடன், சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் சப்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு டான்ஸ் ஆடினார் திரிஷா, போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர் எனசெய்தி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால் தான் டான்ஸ் எல்லாம் ஆடவில்லை என்று மறுத்தார் திரிஷா. ஆனால் சென்னை போலீஸ் கமிஷனரே இதைஉறுதிப்படுத்தினார். ஒரு வழியாக இந்த சர்ச்சை முடிந்து அமைதி திரும்பியது.இப்படி வரிசையாக சிக்கல்களில் சிக்கி வந்தால் ஒரு நாளைக்கு தனது பெயர் டோட்டல் டேமேஜ் ஆகி விடும் என்பதைதிரிஷாவுக்கு அவருக்கு நெருங்கிய திரையுலக நண்பர்கள் எடுத்துரைக்கவே இப்போது தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில்குதித்துள்ளார் திரிஷா.முடிந்தவரை ஆங்கிலத்தைத் தவிர்க்க இப்போது முயலுகிறார், அதேபோல செய்தியாளர்களிடம் பேசும்போது மிகுந்த கவனமாகபேசுகிறார். கூடுமான வரை சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டால் அருகில் இருக்கும் அம்மாவைக் கை காட்டி விடுகிறார்.சீனியர் நடிகர், நடிகையர், இயக்குநர்கள் யாராவது வந்தால் அவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்கிறார்.இதை விட முக்கியமாக, சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாத வகையில் தனது நண்பர்களோடு சேர்ந்து அவுட்டிங் போகிறார்.ரொம்பவே அடக்கமாக மாறி வருகிறார் திரிஷா. சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சூர்யா, திரிஷா இணைந்து நடிக்கும் ஆறு படத்தின் படப்பிடிப்பு நடந்தது.வழக்கமாக அல்டாப் அழகியாக காணப்படும் திரிஷா, அன்று மிக மிக அடக்கமாக, அமைதியாக, காணப்பட்டார்.அடடா, திரிஷா மாறி விட்டாரே என்று சந்தோஷப்படும் நிருபர்கள் அவரை நெருங்கி ஏன் மேடம் நீங்கள் மட்டும் அடிக்கடிசர்ச்சையில் சிக்குகிறீர்கள் என்று கேட்டால், நடிப்பு எனது தொழில், மேக்கப்பை அகற்றி விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டுவெளியேறி விட்டால், மற்ற பெண்களைப் போலத்தான் நானும். எனது வயதுக்கே உரிய துறுதுறுப்பு என்னிடம் உள்ளது. இதுசிலருக்குப் பிடிக்கவில்லை.எனது நண்பர்களுடன் நான் வெளியில் போனால் இவர்களுக்கு என்ன? வேண்டும் என்றே சிலர் என்னைப் பற்றி தவறானசெய்திகளைப் பரப்பி கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள். அதனால்தான் இப்போதெல்லாம் தேவையில்லாமல் யாரிடமும்பேசுவதில்லை என்று புலம்பித் தள்ளுகிறாராம்.மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சரமாரியாக சர்ச்சைகளில் சிக்கி திக்குமுக்காடி வரும் திரிஷா, கண் போன பின் சூரிய நமஸ்காரம் என்பது போல கொஞ்சம்கொஞ்சமாக தன்னை மாற்றி வருகிறார்.

அட்டகாசமான தமிழச்சியான திரிஷா, யாரைப் பார்த்தாலும், ஆங்கிலத்தில்தான் பொளந்து கட்டுவார். எப்போவாச்சும் தமிழ்அவர் வாயில் எட்டிப் பார்க்கும். மறந்தும் தமிழில் பேசாமல் ஆங்கிலத்திலேயே வாய் ஜாலம் காட்டுவது திரிஷாவின் வாடிக்கை.

ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் திரிஷா ஆங்கிலத்தில் அளந்து கொண்டே போனார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த இயக்குநர்டி.ராஜேந்தர், தான் பேசும்போது திரிஷாவை கடுமையாக விமரிசித்தார்.


தமிழ்ப் பொண்ணே இப்படி ஆங்கிலத்தில் பேசினால், மும்பையிலிருந்து வரும் நடிகைகள் எப்படி தமிழில் பேச முன்வருவார்கள்என்று சூடு கொடுத்தார்.ஆனால் திரிஷா இந்த விமர்சனங்களையெல்லாம் கண்டு கொண்டதே இல்லை. அவர் பாட்டுக்குஅவருக்குப் பிடித்த பாஷையில்தான் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த சலசலப்பு அடங்குவதற்குள் ஆபாச குளியல் காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.இதனால் கொஞ்ச நாள் அப்செட் ஆகியிருந்தார்.

கொஞ்ச நாளுக்கு முன்பு இன்னொரு சர்ச்சையில் சிக்கினார் திரிஷா. தோழர், தோழியருடன், சென்னை கிழக்குக் கடற்கரைச்சாலையில் சப்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டு டான்ஸ் ஆடினார் திரிஷா, போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர் எனசெய்தி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தான் டான்ஸ் எல்லாம் ஆடவில்லை என்று மறுத்தார் திரிஷா. ஆனால் சென்னை போலீஸ் கமிஷனரே இதைஉறுதிப்படுத்தினார். ஒரு வழியாக இந்த சர்ச்சை முடிந்து அமைதி திரும்பியது.

இப்படி வரிசையாக சிக்கல்களில் சிக்கி வந்தால் ஒரு நாளைக்கு தனது பெயர் டோட்டல் டேமேஜ் ஆகி விடும் என்பதைதிரிஷாவுக்கு அவருக்கு நெருங்கிய திரையுலக நண்பர்கள் எடுத்துரைக்கவே இப்போது தன்னை மாற்றிக் கொள்ளும் முயற்சியில்குதித்துள்ளார் திரிஷா.

முடிந்தவரை ஆங்கிலத்தைத் தவிர்க்க இப்போது முயலுகிறார், அதேபோல செய்தியாளர்களிடம் பேசும்போது மிகுந்த கவனமாகபேசுகிறார். கூடுமான வரை சிக்கலான கேள்விகள் கேட்கப்பட்டால் அருகில் இருக்கும் அம்மாவைக் கை காட்டி விடுகிறார்.சீனியர் நடிகர், நடிகையர், இயக்குநர்கள் யாராவது வந்தால் அவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்கிறார்.


இதை விட முக்கியமாக, சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாத வகையில் தனது நண்பர்களோடு சேர்ந்து அவுட்டிங் போகிறார்.ரொம்பவே அடக்கமாக மாறி வருகிறார் திரிஷா.

சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சூர்யா, திரிஷா இணைந்து நடிக்கும் ஆறு படத்தின் படப்பிடிப்பு நடந்தது.வழக்கமாக அல்டாப் அழகியாக காணப்படும் திரிஷா, அன்று மிக மிக அடக்கமாக, அமைதியாக, காணப்பட்டார்.

அடடா, திரிஷா மாறி விட்டாரே என்று சந்தோஷப்படும் நிருபர்கள் அவரை நெருங்கி ஏன் மேடம் நீங்கள் மட்டும் அடிக்கடிசர்ச்சையில் சிக்குகிறீர்கள் என்று கேட்டால், நடிப்பு எனது தொழில், மேக்கப்பை அகற்றி விட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டுவெளியேறி விட்டால், மற்ற பெண்களைப் போலத்தான் நானும். எனது வயதுக்கே உரிய துறுதுறுப்பு என்னிடம் உள்ளது. இதுசிலருக்குப் பிடிக்கவில்லை.

எனது நண்பர்களுடன் நான் வெளியில் போனால் இவர்களுக்கு என்ன? வேண்டும் என்றே சிலர் என்னைப் பற்றி தவறானசெய்திகளைப் பரப்பி கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள். அதனால்தான் இப்போதெல்லாம் தேவையில்லாமல் யாரிடமும்பேசுவதில்லை என்று புலம்பித் தள்ளுகிறாராம்.

மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியதுதான்!

Read more about: changing face of trisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil