»   »  திரிஷாவின் செல்லத் தோழி திரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் அதிக அளவில் தோழிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தெலுங்கில் அவருக்கு நிறையதோழிகள் இருக்கிறார்களாம். எல்லாப் பேரும் சக நடிகைகள் என்பது தான் இங்கே விசேஷம்.நடிகர்கள் நண்பர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் முன்னணியில் இருக்கும் நடிகைகள் நட்பு பாராட்டுவதுதமிழில் ரொம்ப அபூர்வமான சமாச்சாரம். தமிழில் இப்போது நம்பர் ஒன் போஸ்ட்டுக்கு கடும் போட்டியே நிலவி வருகிறது.ஆசின், நயனதாரா, திரிஷா, சினேகா என ஏகப்பட்ட பேர் க்யூவில் நிற்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி ஆசின் தான் லீடிங்.இருந்தாலும் நயனதாராவும் கை நிறையப் படங்களுடன் கலக்கி வருகிறார். திரிஷாவும் தீவிரமாக களத்தில் குதித்து விட்டார்.இந்த நடிகைகள் எல்லாம் நடிப்பில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் ஒருவருக்கொருவரை போட்டியாகவேபார்க்கிறார்கள். இதனால் இவர்களிடையே நல்ல நட்பு இல்லை. இவர்களில் திரிஷா மட்டும் சற்றே விதி விலக்கு. யாராவதுநெருங்கிப் பழகினால் உடனே ஃப்ரண்ட் ஆகி விடுவார். ஆனால் யாரும் பழகுவதில்லை என்பதால் தெலுங்கில் தான் அவருக்குஜாஸ்தி தோழிகள். தெலுங்கில் கலக்கி இப்போது தமிழையும் தூள் பரத்த வரும் ஷ்ரேயா, திரிஷாவின் தோழிகளில் ஒருவராம். இருவரும் தெலுங்கில்கடும் போட்டியாளர்களாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால், திரிஷா எனக்கு நெருங்கிய தோழி தெரியுமா என்றுமேட்டரை போட்டுடைத்தார் ஷ்ரேயா.அதேபோல சமீபத்தில் இன்னொரு தோழியும் கிடைத்துள்ளார் திரிஷாவுக்கு. அவர் சார்மி. இவரும், திரிஷாவின்போட்டியாளர்களில் ஒருவர் தான். திரிஷா நடிப்பு பாதி, கிளாமர் மீதி என்ற ரீதியில் கலக்கினால், 100 சதவீத கவர்ச்சி என்றவேகத்தில் போய்க் கொண்டிருப்பவர் சார்மி. எப்படி இந்த நட்பு என்று திரிஷாவிடம் கேட்டால், நானும், சார்மியும் தமிழிலிருந்து தெலுங்குக்குப் போனவர்கள். அந்தஅடிப்படையில் இருவருமே தோழிகளாகி விட்டோம். சார்மி வெளிப்படையாக பழகக் கூடியவர். நானும் அப்படித் தான்.இருவரிடம் இருக்கும் பல ஒற்றுமையான சுபாவங்கள் தான் எங்களது நட்புக்குக் காரணம் என்கிறார் திரிஷா.நடிப்பில் தான் நாங்கள் போட்டியாளர்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் நல்ல தோழிகள் என்று தன் பங்குக்கு திரிஷாவைப்புகழ்கிறார் சார்மி. சமீபத்தில் கூட தெலுங்கில் பிரபு தேவா இயக்கிய பவுர்னமி படத்தில் நடித்த திரிஷாவுக்கு சிறந்த நடிகை விருதுகொடுத்தார்கள். அந்த நிகழ்ச்சியில் திரிஷாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் அவரது சார்பில் சார்மி தான் விருதைவாங்கிக் கொண்டாராம்.அடடே, அநியாயத்துக்கு நல்ல புள்ளைகளா இருக்காங்களே!

திரிஷாவின் செல்லத் தோழி திரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் அதிக அளவில் தோழிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தெலுங்கில் அவருக்கு நிறையதோழிகள் இருக்கிறார்களாம். எல்லாப் பேரும் சக நடிகைகள் என்பது தான் இங்கே விசேஷம்.நடிகர்கள் நண்பர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் முன்னணியில் இருக்கும் நடிகைகள் நட்பு பாராட்டுவதுதமிழில் ரொம்ப அபூர்வமான சமாச்சாரம். தமிழில் இப்போது நம்பர் ஒன் போஸ்ட்டுக்கு கடும் போட்டியே நிலவி வருகிறது.ஆசின், நயனதாரா, திரிஷா, சினேகா என ஏகப்பட்ட பேர் க்யூவில் நிற்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி ஆசின் தான் லீடிங்.இருந்தாலும் நயனதாராவும் கை நிறையப் படங்களுடன் கலக்கி வருகிறார். திரிஷாவும் தீவிரமாக களத்தில் குதித்து விட்டார்.இந்த நடிகைகள் எல்லாம் நடிப்பில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் ஒருவருக்கொருவரை போட்டியாகவேபார்க்கிறார்கள். இதனால் இவர்களிடையே நல்ல நட்பு இல்லை. இவர்களில் திரிஷா மட்டும் சற்றே விதி விலக்கு. யாராவதுநெருங்கிப் பழகினால் உடனே ஃப்ரண்ட் ஆகி விடுவார். ஆனால் யாரும் பழகுவதில்லை என்பதால் தெலுங்கில் தான் அவருக்குஜாஸ்தி தோழிகள். தெலுங்கில் கலக்கி இப்போது தமிழையும் தூள் பரத்த வரும் ஷ்ரேயா, திரிஷாவின் தோழிகளில் ஒருவராம். இருவரும் தெலுங்கில்கடும் போட்டியாளர்களாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால், திரிஷா எனக்கு நெருங்கிய தோழி தெரியுமா என்றுமேட்டரை போட்டுடைத்தார் ஷ்ரேயா.அதேபோல சமீபத்தில் இன்னொரு தோழியும் கிடைத்துள்ளார் திரிஷாவுக்கு. அவர் சார்மி. இவரும், திரிஷாவின்போட்டியாளர்களில் ஒருவர் தான். திரிஷா நடிப்பு பாதி, கிளாமர் மீதி என்ற ரீதியில் கலக்கினால், 100 சதவீத கவர்ச்சி என்றவேகத்தில் போய்க் கொண்டிருப்பவர் சார்மி. எப்படி இந்த நட்பு என்று திரிஷாவிடம் கேட்டால், நானும், சார்மியும் தமிழிலிருந்து தெலுங்குக்குப் போனவர்கள். அந்தஅடிப்படையில் இருவருமே தோழிகளாகி விட்டோம். சார்மி வெளிப்படையாக பழகக் கூடியவர். நானும் அப்படித் தான்.இருவரிடம் இருக்கும் பல ஒற்றுமையான சுபாவங்கள் தான் எங்களது நட்புக்குக் காரணம் என்கிறார் திரிஷா.நடிப்பில் தான் நாங்கள் போட்டியாளர்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் நல்ல தோழிகள் என்று தன் பங்குக்கு திரிஷாவைப்புகழ்கிறார் சார்மி. சமீபத்தில் கூட தெலுங்கில் பிரபு தேவா இயக்கிய பவுர்னமி படத்தில் நடித்த திரிஷாவுக்கு சிறந்த நடிகை விருதுகொடுத்தார்கள். அந்த நிகழ்ச்சியில் திரிஷாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் அவரது சார்பில் சார்மி தான் விருதைவாங்கிக் கொண்டாராம்.அடடே, அநியாயத்துக்கு நல்ல புள்ளைகளா இருக்காங்களே!

Subscribe to Oneindia Tamil
திரிஷாவுக்கு தமிழ் சினிமாவில் அதிக அளவில் தோழிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தெலுங்கில் அவருக்கு நிறையதோழிகள் இருக்கிறார்களாம். எல்லாப் பேரும் சக நடிகைகள் என்பது தான் இங்கே விசேஷம்.

நடிகர்கள் நண்பர்களாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் முன்னணியில் இருக்கும் நடிகைகள் நட்பு பாராட்டுவதுதமிழில் ரொம்ப அபூர்வமான சமாச்சாரம். தமிழில் இப்போது நம்பர் ஒன் போஸ்ட்டுக்கு கடும் போட்டியே நிலவி வருகிறது.ஆசின், நயனதாரா, திரிஷா, சினேகா என ஏகப்பட்ட பேர் க்யூவில் நிற்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி ஆசின் தான் லீடிங்.இருந்தாலும் நயனதாராவும் கை நிறையப் படங்களுடன் கலக்கி வருகிறார். திரிஷாவும் தீவிரமாக களத்தில் குதித்து விட்டார்.

இந்த நடிகைகள் எல்லாம் நடிப்பில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் ஒருவருக்கொருவரை போட்டியாகவேபார்க்கிறார்கள். இதனால் இவர்களிடையே நல்ல நட்பு இல்லை. இவர்களில் திரிஷா மட்டும் சற்றே விதி விலக்கு. யாராவதுநெருங்கிப் பழகினால் உடனே ஃப்ரண்ட் ஆகி விடுவார். ஆனால் யாரும் பழகுவதில்லை என்பதால் தெலுங்கில் தான் அவருக்குஜாஸ்தி தோழிகள்.

தெலுங்கில் கலக்கி இப்போது தமிழையும் தூள் பரத்த வரும் ஷ்ரேயா, திரிஷாவின் தோழிகளில் ஒருவராம். இருவரும் தெலுங்கில்கடும் போட்டியாளர்களாக நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால், திரிஷா எனக்கு நெருங்கிய தோழி தெரியுமா என்றுமேட்டரை போட்டுடைத்தார் ஷ்ரேயா.

அதேபோல சமீபத்தில் இன்னொரு தோழியும் கிடைத்துள்ளார் திரிஷாவுக்கு. அவர் சார்மி. இவரும், திரிஷாவின்போட்டியாளர்களில் ஒருவர் தான். திரிஷா நடிப்பு பாதி, கிளாமர் மீதி என்ற ரீதியில் கலக்கினால், 100 சதவீத கவர்ச்சி என்றவேகத்தில் போய்க் கொண்டிருப்பவர் சார்மி.

எப்படி இந்த நட்பு என்று திரிஷாவிடம் கேட்டால், நானும், சார்மியும் தமிழிலிருந்து தெலுங்குக்குப் போனவர்கள். அந்தஅடிப்படையில் இருவருமே தோழிகளாகி விட்டோம். சார்மி வெளிப்படையாக பழகக் கூடியவர். நானும் அப்படித் தான்.இருவரிடம் இருக்கும் பல ஒற்றுமையான சுபாவங்கள் தான் எங்களது நட்புக்குக் காரணம் என்கிறார் திரிஷா.

நடிப்பில் தான் நாங்கள் போட்டியாளர்கள், ஆனால் தனிப்பட்ட முறையில் நல்ல தோழிகள் என்று தன் பங்குக்கு திரிஷாவைப்புகழ்கிறார் சார்மி. சமீபத்தில் கூட தெலுங்கில் பிரபு தேவா இயக்கிய பவுர்னமி படத்தில் நடித்த திரிஷாவுக்கு சிறந்த நடிகை விருதுகொடுத்தார்கள். அந்த நிகழ்ச்சியில் திரிஷாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் அவரது சார்பில் சார்மி தான் விருதைவாங்கிக் கொண்டாராம்.

அடடே, அநியாயத்துக்கு நல்ல புள்ளைகளா இருக்காங்களே!

Read more about: trishas pet friend

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil