»   »  பீமாவும் த்ரிஷாவும் அந்த இந்தா என்று இழுத்துக் கொண்டிருந்த பீமா படத்தின் சூட்டிங் ஒருவழியாகத் தொடங்கிவிட்டது.லிங்குசாமி இயக்கத்தில் ஏ.எம். தயாரிப்பில் உருவாகும் அதிரடி ஆக்ஷன் மசாலா படம் தான் பீமா. விக்ரம் தான்ஹீரோ என்பது போன வருடமே முடிவாகிவிட, ஹீரோயின் சான்ஸ் தான் யாருக்கு என்பதில் பெரும் குழப்பம்நிலவியது. இந்தி-தெலுங்கு நடிகை கேத்ரினா கைப், மாடல் தீபிகா படுகோன், நம்ம ஆஸின் என பல பேரைபரிசீலித்துவிட்டு கடைசியாக சாமி பட மாமி த்ரிஷாவையே ஹீரோயினாக்கிவிட்டார்கள்.ரொம்ப கஷ்டப்பட்டு விக்ரமை விரட்டி விரட்டி இந்த சான்ஸை பிடித்தார் த்ரிஷா என்கிறார்கள். காக்க காக்ககேமராமேன் ஆர்.டி. ராஜசேகர் தான் படத்தின் ஒளிப்பதிவாளர்.இந்தப் படத்துக்காக பாடி பில்ட் செய்யச் சொல்லிவிட்டார் லிங்கு. இதனால் பறவைக் காய்ச்சல் பயத்தால்சிக்கனை ஒதுக்கிவிட்டு வெறும் மட்டனாக உள்ளே தள்ளி உடம்மை ஒரு சுத்து ஏத்தி வைத்திருக்கிறார் விக்ரம்.படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. அந்நியனில் விக்ரமை இயக்கிய ஷங்கர், விக்ரமின் நண்பரானஇயக்குனர் தரணி உள்ளிட்ட விஐபிக்கள் இதில் பங்கேற்றனர். வெள்ளை சிக்ஸ் பாக்கெட் பேண்ட்ஸ், வெள்ளை பனியனில் வந்திருந்தார் விக்ரம். டைட் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ்டி-சர்ட்டில் வந்திருந்தார் த்ரிஷா. கூடவே அவரது இளம் அம்மா.. உமா சுரிதாரில்.படத்தில் வில்லனாக நடிக்கப் போவது நானா படேகராம். ஹைதராபாத், விசாகபட்டிணம் பக்கமாக சூட்டிங்நடத்தப் போகிறார்களாம். முதலில் பிளான் பண்ணியது இலங்கையில், இப்போது அந்தத் திட்டமில்லையாம்.தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்குரிலீசாகிவிடுமாம். இப்போது ரவியோடு சம்திங் சம்திங் உனக்கு எனக்கும் படத்தில் நடிக்கும் த்ரிஷா அடுத்து கமலின்தசாவதாரத்திலும் அவதாரம் காட்டப் போவது உங்களுக்குத் தெரியும்.மேலும் ஹீரோயின் கிடைக்காமல் தவித்து வரும பிரஷாந்த் தான் நடித்து வரும் பெட்ரோல் படத்திலும்த்ரிஷாவையே புக் செய்யச் சொல்லிவிட்டாராம்.ஹைதராபாத்தில் சில பங்களாக்களை வாங்கிப் போட்டுள்ள த்ரிஷா, சென்னை ஆழ்வார்பேட்டை சென்டாப்ரோட்டில் சில கோடிகள் செலவில் ஒரு பிரமாண்ட பங்களாவை எழுப்பியுள்ளார். இதன் கிரஹப் பிரவேசத்துக்குயாரையும் அழைக்காமல் அமைதியாய் நடத்தி முடித்துவிட்டார்களாம்.

பீமாவும் த்ரிஷாவும் அந்த இந்தா என்று இழுத்துக் கொண்டிருந்த பீமா படத்தின் சூட்டிங் ஒருவழியாகத் தொடங்கிவிட்டது.லிங்குசாமி இயக்கத்தில் ஏ.எம். தயாரிப்பில் உருவாகும் அதிரடி ஆக்ஷன் மசாலா படம் தான் பீமா. விக்ரம் தான்ஹீரோ என்பது போன வருடமே முடிவாகிவிட, ஹீரோயின் சான்ஸ் தான் யாருக்கு என்பதில் பெரும் குழப்பம்நிலவியது. இந்தி-தெலுங்கு நடிகை கேத்ரினா கைப், மாடல் தீபிகா படுகோன், நம்ம ஆஸின் என பல பேரைபரிசீலித்துவிட்டு கடைசியாக சாமி பட மாமி த்ரிஷாவையே ஹீரோயினாக்கிவிட்டார்கள்.ரொம்ப கஷ்டப்பட்டு விக்ரமை விரட்டி விரட்டி இந்த சான்ஸை பிடித்தார் த்ரிஷா என்கிறார்கள். காக்க காக்ககேமராமேன் ஆர்.டி. ராஜசேகர் தான் படத்தின் ஒளிப்பதிவாளர்.இந்தப் படத்துக்காக பாடி பில்ட் செய்யச் சொல்லிவிட்டார் லிங்கு. இதனால் பறவைக் காய்ச்சல் பயத்தால்சிக்கனை ஒதுக்கிவிட்டு வெறும் மட்டனாக உள்ளே தள்ளி உடம்மை ஒரு சுத்து ஏத்தி வைத்திருக்கிறார் விக்ரம்.படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. அந்நியனில் விக்ரமை இயக்கிய ஷங்கர், விக்ரமின் நண்பரானஇயக்குனர் தரணி உள்ளிட்ட விஐபிக்கள் இதில் பங்கேற்றனர். வெள்ளை சிக்ஸ் பாக்கெட் பேண்ட்ஸ், வெள்ளை பனியனில் வந்திருந்தார் விக்ரம். டைட் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ்டி-சர்ட்டில் வந்திருந்தார் த்ரிஷா. கூடவே அவரது இளம் அம்மா.. உமா சுரிதாரில்.படத்தில் வில்லனாக நடிக்கப் போவது நானா படேகராம். ஹைதராபாத், விசாகபட்டிணம் பக்கமாக சூட்டிங்நடத்தப் போகிறார்களாம். முதலில் பிளான் பண்ணியது இலங்கையில், இப்போது அந்தத் திட்டமில்லையாம்.தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்குரிலீசாகிவிடுமாம். இப்போது ரவியோடு சம்திங் சம்திங் உனக்கு எனக்கும் படத்தில் நடிக்கும் த்ரிஷா அடுத்து கமலின்தசாவதாரத்திலும் அவதாரம் காட்டப் போவது உங்களுக்குத் தெரியும்.மேலும் ஹீரோயின் கிடைக்காமல் தவித்து வரும பிரஷாந்த் தான் நடித்து வரும் பெட்ரோல் படத்திலும்த்ரிஷாவையே புக் செய்யச் சொல்லிவிட்டாராம்.ஹைதராபாத்தில் சில பங்களாக்களை வாங்கிப் போட்டுள்ள த்ரிஷா, சென்னை ஆழ்வார்பேட்டை சென்டாப்ரோட்டில் சில கோடிகள் செலவில் ஒரு பிரமாண்ட பங்களாவை எழுப்பியுள்ளார். இதன் கிரஹப் பிரவேசத்துக்குயாரையும் அழைக்காமல் அமைதியாய் நடத்தி முடித்துவிட்டார்களாம்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
அந்த இந்தா என்று இழுத்துக் கொண்டிருந்த பீமா படத்தின் சூட்டிங் ஒருவழியாகத் தொடங்கிவிட்டது.

லிங்குசாமி இயக்கத்தில் ஏ.எம். தயாரிப்பில் உருவாகும் அதிரடி ஆக்ஷன் மசாலா படம் தான் பீமா. விக்ரம் தான்ஹீரோ என்பது போன வருடமே முடிவாகிவிட, ஹீரோயின் சான்ஸ் தான் யாருக்கு என்பதில் பெரும் குழப்பம்நிலவியது.

இந்தி-தெலுங்கு நடிகை கேத்ரினா கைப், மாடல் தீபிகா படுகோன், நம்ம ஆஸின் என பல பேரைபரிசீலித்துவிட்டு கடைசியாக சாமி பட மாமி த்ரிஷாவையே ஹீரோயினாக்கிவிட்டார்கள்.

ரொம்ப கஷ்டப்பட்டு விக்ரமை விரட்டி விரட்டி இந்த சான்ஸை பிடித்தார் த்ரிஷா என்கிறார்கள். காக்க காக்ககேமராமேன் ஆர்.டி. ராஜசேகர் தான் படத்தின் ஒளிப்பதிவாளர்.

இந்தப் படத்துக்காக பாடி பில்ட் செய்யச் சொல்லிவிட்டார் லிங்கு. இதனால் பறவைக் காய்ச்சல் பயத்தால்சிக்கனை ஒதுக்கிவிட்டு வெறும் மட்டனாக உள்ளே தள்ளி உடம்மை ஒரு சுத்து ஏத்தி வைத்திருக்கிறார் விக்ரம்.

படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

படத்தின் பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தது. அந்நியனில் விக்ரமை இயக்கிய ஷங்கர், விக்ரமின் நண்பரானஇயக்குனர் தரணி உள்ளிட்ட விஐபிக்கள் இதில் பங்கேற்றனர்.

வெள்ளை சிக்ஸ் பாக்கெட் பேண்ட்ஸ், வெள்ளை பனியனில் வந்திருந்தார் விக்ரம். டைட் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ்டி-சர்ட்டில் வந்திருந்தார் த்ரிஷா. கூடவே அவரது இளம் அம்மா.. உமா சுரிதாரில்.

படத்தில் வில்லனாக நடிக்கப் போவது நானா படேகராம். ஹைதராபாத், விசாகபட்டிணம் பக்கமாக சூட்டிங்நடத்தப் போகிறார்களாம். முதலில் பிளான் பண்ணியது இலங்கையில், இப்போது அந்தத் திட்டமில்லையாம்.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்குரிலீசாகிவிடுமாம்.

இப்போது ரவியோடு சம்திங் சம்திங் உனக்கு எனக்கும் படத்தில் நடிக்கும் த்ரிஷா அடுத்து கமலின்தசாவதாரத்திலும் அவதாரம் காட்டப் போவது உங்களுக்குத் தெரியும்.

மேலும் ஹீரோயின் கிடைக்காமல் தவித்து வரும பிரஷாந்த் தான் நடித்து வரும் பெட்ரோல் படத்திலும்த்ரிஷாவையே புக் செய்யச் சொல்லிவிட்டாராம்.

ஹைதராபாத்தில் சில பங்களாக்களை வாங்கிப் போட்டுள்ள த்ரிஷா, சென்னை ஆழ்வார்பேட்டை சென்டாப்ரோட்டில் சில கோடிகள் செலவில் ஒரு பிரமாண்ட பங்களாவை எழுப்பியுள்ளார். இதன் கிரஹப் பிரவேசத்துக்குயாரையும் அழைக்காமல் அமைதியாய் நடத்தி முடித்துவிட்டார்களாம்.

Read more about: vikramtrishas bheema is on

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil