twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    த்ரிஷாவுக்கு பெண் ரசிகைகள் பாலாபிஷேகம்! குஷ்புவுக்கு கோவில் கட்டிய தமிழர்கள் இன்று த்ரிஷாவின் கட் அவுட்டுக்குபாலாபிஷேகம் செய்து தமிழர்களின் பாரம்பரியத்தை நிலை நிறுத்தியுள்ளனர்.குஷ்பு ஓஹோவென்று புகழின் உச்சியில் இருந்த நேரம் அது. நடிகர்களுக்குஇணையாக குஷ்புவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர் அப்போது. இவர்களில்குஷ்பு மீது ஓவர் பாசம் வைத்திருந்த ரசிகர்கள் சிலர் கூடி திருச்சி அருகே குஷ்புவுக்குகோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர்.இந்தியாவையே பரபரப்பில் ஆழ்த்தியது அந்த நகழ்ச்சி. அப்படி உச்சத்தில்வைத்திருந்த குஷ்புவை அதே தமிழர்கள்தான் கொஞ்ச காலத்திற்கு முன்பு கீழேபோட்டு மிதித்தனர், பெண்களின் கற்பு குறித்து குஷ்பு குண்டக்க மண்டக்கபேசியபோது.இப்போது மீண்டும் அந்தக் காலத்திற்கு சிலர் திரும்பியுள்ளனர். நடிகை த்ரிஷாவுக்குரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் இதை ஆரம்பித்தது ஆண்கள் அல்ல, பெண்கள். தென்னிந்திய கனவுதேவதை த்ரிஷா ரசிகைகள் மன்றம் என்ற பெயரில் உருவாகியுள்ள அந்த மன்றம்.அந்த மன்றத்தின் சார்பில் சென்னையில் த்ரிஷாவின் கட் அவுட், பேனர்களுக்குபாலாபிஷேகம் நடத்தி ஆண்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லைஎன்பதை நிரூபித்துள்ளனர்.த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி தென்னிந்திய கனவு தேவதை த்ரிஷாரசிகைகள் மன்றம், வடபழனியில் உள்ள கமலா திரையரங்குக்கு திரண்டு வந்தனர்.தியேட்டருக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த த்ரிஷாவின் விளம்பரப் பலகைகள், கட்அவுட்களுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.த்ரிஷாவுக்கு நடந்த இந்த பாலாபிஷேகம் அப்பகுதியில் சென்றோரை ஆச்சரியத்தில்விழி விரிய வைத்தது.இந்த பாலாபிஷேகம் குறித்த மன்ற அமைப்பாளர் ஜெஸ்ஸி கூறுகையில்,நடிகர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவர்கள் பட ரிலீஸின்போது கட்அவுட்களுக்கு அபிஷேகம் செய்வது, பாலாபிஷேகம் செய்வது என்று தங்களதுபிரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.அதேபோலத்தான் நாங்களும் எங்களுக்குப் பிடித்த த்ரிஷாவுக்கு இவ்வாறுபாலாபிஷேகம் செய்து அன்பை வெளிப்படுத்தியுள்ளோம். இனி த்ரிஷாவின் படங்கள்ரிலீஸாகும்போது தியேட்டர்களில் கட் அவுட் வைப்பது, பேனர் வைப்பது,பாலாபிஷேகம் செய்வது என்று கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்.த்ரிஷா தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். அவரதுநடிப்பை நாங்கள் வெகுவாக ரசிக்கிறோம். அவர் மீது பாசமாகவும், அன்பாகவும்உள்ளோம். இதை விளம்பரத்திற்காக நாங்கள் செய்யவில்லை.அவரது பிறந்த நாளான 4ம் தேதியன்று (இன்று) மடிப்பாக்கம் மற்றும் அடையாரில்உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லஙகளுக்குச் சென்றுஅன்னதானம் செய்கிறோம். எதிர்காலத்தில் ரத்ததானம் செய்யவுள்ளோம் என்றார்ஜெஸ்ஸி.அப்ப த்ரிஷாவுக்குப் பிடித்தமான கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்றுவிசேஷத்தை எதிர்பார்க்கலாமா?

    By Staff
    |

    குஷ்புவுக்கு கோவில் கட்டிய தமிழர்கள் இன்று த்ரிஷாவின் கட் அவுட்டுக்குபாலாபிஷேகம் செய்து தமிழர்களின் பாரம்பரியத்தை நிலை நிறுத்தியுள்ளனர்.

    குஷ்பு ஓஹோவென்று புகழின் உச்சியில் இருந்த நேரம் அது. நடிகர்களுக்குஇணையாக குஷ்புவுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர் அப்போது. இவர்களில்குஷ்பு மீது ஓவர் பாசம் வைத்திருந்த ரசிகர்கள் சிலர் கூடி திருச்சி அருகே குஷ்புவுக்குகோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தனர்.


    இந்தியாவையே பரபரப்பில் ஆழ்த்தியது அந்த நகழ்ச்சி. அப்படி உச்சத்தில்வைத்திருந்த குஷ்புவை அதே தமிழர்கள்தான் கொஞ்ச காலத்திற்கு முன்பு கீழேபோட்டு மிதித்தனர், பெண்களின் கற்பு குறித்து குஷ்பு குண்டக்க மண்டக்கபேசியபோது.

    இப்போது மீண்டும் அந்தக் காலத்திற்கு சிலர் திரும்பியுள்ளனர். நடிகை த்ரிஷாவுக்குரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதை ஆரம்பித்தது ஆண்கள் அல்ல, பெண்கள். தென்னிந்திய கனவுதேவதை த்ரிஷா ரசிகைகள் மன்றம் என்ற பெயரில் உருவாகியுள்ள அந்த மன்றம்.


    அந்த மன்றத்தின் சார்பில் சென்னையில் த்ரிஷாவின் கட் அவுட், பேனர்களுக்குபாலாபிஷேகம் நடத்தி ஆண்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லைஎன்பதை நிரூபித்துள்ளனர்.

    த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி தென்னிந்திய கனவு தேவதை த்ரிஷாரசிகைகள் மன்றம், வடபழனியில் உள்ள கமலா திரையரங்குக்கு திரண்டு வந்தனர்.தியேட்டருக்கு எதிரே வைக்கப்பட்டிருந்த த்ரிஷாவின் விளம்பரப் பலகைகள், கட்அவுட்களுக்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

    த்ரிஷாவுக்கு நடந்த இந்த பாலாபிஷேகம் அப்பகுதியில் சென்றோரை ஆச்சரியத்தில்விழி விரிய வைத்தது.


    இந்த பாலாபிஷேகம் குறித்த மன்ற அமைப்பாளர் ஜெஸ்ஸி கூறுகையில்,நடிகர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள் உள்ளன. அவர்கள் பட ரிலீஸின்போது கட்அவுட்களுக்கு அபிஷேகம் செய்வது, பாலாபிஷேகம் செய்வது என்று தங்களதுபிரியத்தை வெளிப்படுத்துகின்றனர்.

    அதேபோலத்தான் நாங்களும் எங்களுக்குப் பிடித்த த்ரிஷாவுக்கு இவ்வாறுபாலாபிஷேகம் செய்து அன்பை வெளிப்படுத்தியுள்ளோம். இனி த்ரிஷாவின் படங்கள்ரிலீஸாகும்போது தியேட்டர்களில் கட் அவுட் வைப்பது, பேனர் வைப்பது,பாலாபிஷேகம் செய்வது என்று கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்.

    த்ரிஷா தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார். அவரதுநடிப்பை நாங்கள் வெகுவாக ரசிக்கிறோம். அவர் மீது பாசமாகவும், அன்பாகவும்உள்ளோம். இதை விளம்பரத்திற்காக நாங்கள் செய்யவில்லை.


    அவரது பிறந்த நாளான 4ம் தேதியன்று (இன்று) மடிப்பாக்கம் மற்றும் அடையாரில்உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லஙகளுக்குச் சென்றுஅன்னதானம் செய்கிறோம். எதிர்காலத்தில் ரத்ததானம் செய்யவுள்ளோம் என்றார்ஜெஸ்ஸி.

    அப்ப த்ரிஷாவுக்குப் பிடித்தமான கிழக்குக் கடற்கரைச் சாலையில் இன்றுவிசேஷத்தை எதிர்பார்க்கலாமா?

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X