»   »  திரிஷாவின் புத்துணர்ச்சி திரிஷா படு சந்தோஷமாக உள்ளார். அம்மணியின் புத்துணர்ச்சிக்கு காரணம் விக்ரம்!

திரிஷாவின் புத்துணர்ச்சி திரிஷா படு சந்தோஷமாக உள்ளார். அம்மணியின் புத்துணர்ச்சிக்கு காரணம் விக்ரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரிஷா படு சந்தோஷமாக உள்ளார். அம்மணியின் புத்துணர்ச்சிக்கு காரணம் விக்ரம்!தமிழ், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகையாக ஒரே நேரத்தில்சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும் பறந்து பறந்து நடித்து தூள் கிளப்பி வந்த திரிஷாஇடையில் சுணங்கிப் போனார்.

தமிழை முற்றிலும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு தெலுங்குப் படங்களுக்குஅதிக முக்கியத்துவம் கொடுததார்.

டப்பு அங்கு அதிகம் என்பது ஒரு காரணம். மேலும் அந்த ஊர் விவிஐபிக்களின் நட்புஇன்னொரு காரணம்.


ஆனால் அடுத்தடுத்து மூன்று படங்கள் வந்தும் கூட அவை ஹிட் ஆகாததால்,திரிஷாவின் மார்க்கெட் தெலுங்கில் ஊசலாட்டத்திற்குப் போனது.

தெலுங்கில் தனது பிடி நழுவி வருவதை உணர்ந்த அவர் தமிழுக்கு மீண்டும்தாவினார்.

இடையில் ரஜினியுடன் சிவாஜியில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது போல இருந்தது.ஆனால் திடீரென ஷிரியா உள்ளே புகுந்து வாய்ப்பைத் தட்டிப் போய் விட்டார்.கடுப்பாகிப் போன திரிஷா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்க ஒப்புக்கொண்டு தன்னைத் தானே ஆறுதல்படுத்திக் கொண்டார்.


இப்போது மீண்டும் தமிழில் ஒரு கலக்கு கலக்க வருகிறார் திரிஷா. பீமா மூலம்விக்ரடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள திரிஷா, சாமியைப் போல பீமாவும் சூப்பர்ஹிட் படமாகும், நானும் சூப்பராக பேசப்படுவேன் என்று சந்தோஷமாக கூறுகிறார்.

விக்ரமுடன் நடித்தாலே ரொம்ப ஜாலியாக இருக்கும். ரொம்ப நட்பாக பழகுவார்கென்னி (அதாங்க விக்ரமோட செல்லப் பெயர்!). என்னை விட எனது அம்மாதான்விக்ரமோட ரொம்ப குளோஸ்.

இருவரும் படு ஜாலியாக பேசிக் கொள்வார்கள். என்னைப் பற்றி ரொம்ப ஜாலியாககாமெண்ட் அடிப்பார் விக்ரம். அதை வைத்து எனது அம்மாவும் என்னை டீஸ்செய்வார். அந்த அளவுக்கு ஜாலியா ஆள் விக்ரம்.


சாமியில் நான் அவருடன் நடித்தபோதுதான் ரொம்ப ஃப்ரண்ட் ஆனேன். இப்போதுமீண்டும் அவருடன் பீமாவில் நடிப்பது எனக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துள்ளது,ரொம்ப ரிலாக்ஸ்டாக ஃபீல் செய்கிறேன்.

இடையில் சில தப்பான படங்களில் நடித்து விட்டேன். அதற்காகவருத்தப்படவில்லை, ஆனால் தவிர்த்திருக்கலாமோ என்று நினைக்கிறேன். பீமாமூலம் மீண்டும் தமிழில் விஸ்வரூபம் எடுப்பேன்.

விக்ரமும் ரொம்பவே பேசப்படுவார் என்கிறார் திரிஷா.

சந்தோஷம் அதிகமாகி கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு ஓடிடாதீங்கோ!

Read more about: trisha and vikram in bheema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil