»   »  மீண்டும் "சாமியுடன் ஜோடி சேரும் "மாமி! சாமிக்குப் பிறகு சீயானும், மாமி த்ரிஷாவும் மீண்டும் ஜோடி போட்டு கலக்கப் போகிறார்கள். படத்தைத் தயாரிக்கப் போவதுஏ.எம்.ரத்னம். அறிமுகமான புதிதில் அவ்வளவாக அறியப்படாமல் இருந்தவர் தான் இந்த திரிஷா. ஆனால் சாமி படத்தில் சீயான் விக்ரமுடன்ஜோடி சேர்ந்து, மாமி வேடத்தில் கலக்கிய பிறகு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியானார். சாமியில் அவர் போட்ட ஆட்டமும், அடித்த லூட்டியும் த்ரிஷாவுக்கு பெத்த பேரை வாங்கிக் கொடுத்தன. சாமியில் கிடைத்தபெயரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கோலிவுட்டில் தன்னுடைய இடத்தை நங்கூரமிட்டு நச்சென்று பதித்துக் கொண்டத்ரிஷா, கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். சிம்ரன் இடத்தைப் பிடித்த த்ரிஷா, ஆட்டத்தில் மட்டுமல்லாது கில்லியில் நடிப்பிலும் கலக்கினார். கோலிவுட்டில் என்ன தான்குட்டிக்கரணம் அடித்தாலும் டப்பு ரொம்பத் தேறாது என்பதால், தெலுங்குக்குத் தாவினார். வர்ஷம் படத்தில் அவரது கவர்ச்சிக் குளியலைப் பார்த்து மிரண்டு போன மணவாடுகளுக்கு திரிஷா மோகம் பற்றிக் கொண்டது.விளைவு, இப்போது அங்கும் ஒண்ணாவது இடத்தில் இருக்கிறார். தெலுங்கிலேயே நடித்துக் கொண்டிருந்தால் தமிழ் ரசிகர்கள் மறந்து விடுவார்களே என்ற நினைத்த மாமி, அடித்துப் பிடித்து ஒருசூப்பர் வாய்ப்பை பெற்று விட்டார். இப்போது சாமிக்குப் பிறகு மறுபடியும் விக்ரமுடன் ஜோடி சேரவுள்ளார் த்ரிஷா. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகிறது இப்படம். விக்ரம் தற்போது நடித்து வரும் மஜா படம் முடிந்த பிறகு இந்தப் புதியபடத்தின் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்களாம். விக்ரமுடன் மீண்டும் நடிப்பதைப் போல விஜய்யுடனும் ஒரு புதிய படத்தில் புக் ஆகியுள்ளாராம் த்ரிஷா. தெலுங்கில்முன்னணியில் இருந்து வந்தாலும் தமிழை மறக்காமல் அவ்வப்போது தமிழிலும் நடித்து வரும் த்ரிஷா, இனிமேல்வருடத்திற்கு 2 தமிழ்ப் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். த்ரிஷா பற்றிய இன்னொரு விஷயம். தெலுங்கில் படு வேகமாக போய்க் கொண்டிருப்பதால் சென்னையிலிருந்துஹைதராபாத்திற்கே நிரந்தரமாக செட்டிலாகி விடலாமா என்று முதலில் யோசித்து வந்தாராம். ஹைதராபாத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியான பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வீடு கூட விலை பேசிமுடிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த டீலை அப்படியே கைவிட்டு விட்டாராம். என்ன தான் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் வேற ஏதாவது ஒரு குதிரை வந்து மார்க்கெட்டைப் பிடித்துவிட்டால் மீண்டும் தமிழுக்குத் தான் வர வேண்டும். எனவே வீட்டை மாற்ற வேண்டாம் என்று த்ரிஷாவுக்கு நெருங்கியவர்கள்கொடுத்த ஆலோசனை தான், இந்த பின்வாங்கலுக்கு காரணம் என்கிறார்கள். எனவே சென்னையிலிருந்தபடியே தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய முடிவெடுத்து விட்டார் த்ரிஷா. கவர்ச்சி சவாரியைப் பார்க்க ரசிகர்களும் ரெடிதானுங்கோவ்!

மீண்டும் "சாமியுடன் ஜோடி சேரும் "மாமி! சாமிக்குப் பிறகு சீயானும், மாமி த்ரிஷாவும் மீண்டும் ஜோடி போட்டு கலக்கப் போகிறார்கள். படத்தைத் தயாரிக்கப் போவதுஏ.எம்.ரத்னம். அறிமுகமான புதிதில் அவ்வளவாக அறியப்படாமல் இருந்தவர் தான் இந்த திரிஷா. ஆனால் சாமி படத்தில் சீயான் விக்ரமுடன்ஜோடி சேர்ந்து, மாமி வேடத்தில் கலக்கிய பிறகு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியானார். சாமியில் அவர் போட்ட ஆட்டமும், அடித்த லூட்டியும் த்ரிஷாவுக்கு பெத்த பேரை வாங்கிக் கொடுத்தன. சாமியில் கிடைத்தபெயரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கோலிவுட்டில் தன்னுடைய இடத்தை நங்கூரமிட்டு நச்சென்று பதித்துக் கொண்டத்ரிஷா, கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார். சிம்ரன் இடத்தைப் பிடித்த த்ரிஷா, ஆட்டத்தில் மட்டுமல்லாது கில்லியில் நடிப்பிலும் கலக்கினார். கோலிவுட்டில் என்ன தான்குட்டிக்கரணம் அடித்தாலும் டப்பு ரொம்பத் தேறாது என்பதால், தெலுங்குக்குத் தாவினார். வர்ஷம் படத்தில் அவரது கவர்ச்சிக் குளியலைப் பார்த்து மிரண்டு போன மணவாடுகளுக்கு திரிஷா மோகம் பற்றிக் கொண்டது.விளைவு, இப்போது அங்கும் ஒண்ணாவது இடத்தில் இருக்கிறார். தெலுங்கிலேயே நடித்துக் கொண்டிருந்தால் தமிழ் ரசிகர்கள் மறந்து விடுவார்களே என்ற நினைத்த மாமி, அடித்துப் பிடித்து ஒருசூப்பர் வாய்ப்பை பெற்று விட்டார். இப்போது சாமிக்குப் பிறகு மறுபடியும் விக்ரமுடன் ஜோடி சேரவுள்ளார் த்ரிஷா. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகிறது இப்படம். விக்ரம் தற்போது நடித்து வரும் மஜா படம் முடிந்த பிறகு இந்தப் புதியபடத்தின் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்களாம். விக்ரமுடன் மீண்டும் நடிப்பதைப் போல விஜய்யுடனும் ஒரு புதிய படத்தில் புக் ஆகியுள்ளாராம் த்ரிஷா. தெலுங்கில்முன்னணியில் இருந்து வந்தாலும் தமிழை மறக்காமல் அவ்வப்போது தமிழிலும் நடித்து வரும் த்ரிஷா, இனிமேல்வருடத்திற்கு 2 தமிழ்ப் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம். த்ரிஷா பற்றிய இன்னொரு விஷயம். தெலுங்கில் படு வேகமாக போய்க் கொண்டிருப்பதால் சென்னையிலிருந்துஹைதராபாத்திற்கே நிரந்தரமாக செட்டிலாகி விடலாமா என்று முதலில் யோசித்து வந்தாராம். ஹைதராபாத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியான பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வீடு கூட விலை பேசிமுடிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த டீலை அப்படியே கைவிட்டு விட்டாராம். என்ன தான் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் வேற ஏதாவது ஒரு குதிரை வந்து மார்க்கெட்டைப் பிடித்துவிட்டால் மீண்டும் தமிழுக்குத் தான் வர வேண்டும். எனவே வீட்டை மாற்ற வேண்டாம் என்று த்ரிஷாவுக்கு நெருங்கியவர்கள்கொடுத்த ஆலோசனை தான், இந்த பின்வாங்கலுக்கு காரணம் என்கிறார்கள். எனவே சென்னையிலிருந்தபடியே தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய முடிவெடுத்து விட்டார் த்ரிஷா. கவர்ச்சி சவாரியைப் பார்க்க ரசிகர்களும் ரெடிதானுங்கோவ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சாமிக்குப் பிறகு சீயானும், மாமி த்ரிஷாவும் மீண்டும் ஜோடி போட்டு கலக்கப் போகிறார்கள். படத்தைத் தயாரிக்கப் போவதுஏ.எம்.ரத்னம்.

அறிமுகமான புதிதில் அவ்வளவாக அறியப்படாமல் இருந்தவர் தான் இந்த திரிஷா. ஆனால் சாமி படத்தில் சீயான் விக்ரமுடன்ஜோடி சேர்ந்து, மாமி வேடத்தில் கலக்கிய பிறகு தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியானார்.

சாமியில் அவர் போட்ட ஆட்டமும், அடித்த லூட்டியும் த்ரிஷாவுக்கு பெத்த பேரை வாங்கிக் கொடுத்தன. சாமியில் கிடைத்தபெயரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு கோலிவுட்டில் தன்னுடைய இடத்தை நங்கூரமிட்டு நச்சென்று பதித்துக் கொண்டத்ரிஷா, கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார்.

சிம்ரன் இடத்தைப் பிடித்த த்ரிஷா, ஆட்டத்தில் மட்டுமல்லாது கில்லியில் நடிப்பிலும் கலக்கினார். கோலிவுட்டில் என்ன தான்குட்டிக்கரணம் அடித்தாலும் டப்பு ரொம்பத் தேறாது என்பதால், தெலுங்குக்குத் தாவினார்.

வர்ஷம் படத்தில் அவரது கவர்ச்சிக் குளியலைப் பார்த்து மிரண்டு போன மணவாடுகளுக்கு திரிஷா மோகம் பற்றிக் கொண்டது.விளைவு, இப்போது அங்கும் ஒண்ணாவது இடத்தில் இருக்கிறார்.

தெலுங்கிலேயே நடித்துக் கொண்டிருந்தால் தமிழ் ரசிகர்கள் மறந்து விடுவார்களே என்ற நினைத்த மாமி, அடித்துப் பிடித்து ஒருசூப்பர் வாய்ப்பை பெற்று விட்டார். இப்போது சாமிக்குப் பிறகு மறுபடியும் விக்ரமுடன் ஜோடி சேரவுள்ளார் த்ரிஷா.

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகிறது இப்படம். விக்ரம் தற்போது நடித்து வரும் மஜா படம் முடிந்த பிறகு இந்தப் புதியபடத்தின் ஷூட்டிங்கைத் தொடங்குகிறார்களாம்.


விக்ரமுடன் மீண்டும் நடிப்பதைப் போல விஜய்யுடனும் ஒரு புதிய படத்தில் புக் ஆகியுள்ளாராம் த்ரிஷா. தெலுங்கில்முன்னணியில் இருந்து வந்தாலும் தமிழை மறக்காமல் அவ்வப்போது தமிழிலும் நடித்து வரும் த்ரிஷா, இனிமேல்வருடத்திற்கு 2 தமிழ்ப் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

த்ரிஷா பற்றிய இன்னொரு விஷயம். தெலுங்கில் படு வேகமாக போய்க் கொண்டிருப்பதால் சென்னையிலிருந்துஹைதராபாத்திற்கே நிரந்தரமாக செட்டிலாகி விடலாமா என்று முதலில் யோசித்து வந்தாராம்.

ஹைதராபாத்தின் மிக முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதியான பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வீடு கூட விலை பேசிமுடிக்கப்பட்டு விட்டதாம். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த டீலை அப்படியே கைவிட்டு விட்டாராம்.

என்ன தான் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் வேற ஏதாவது ஒரு குதிரை வந்து மார்க்கெட்டைப் பிடித்துவிட்டால் மீண்டும் தமிழுக்குத் தான் வர வேண்டும். எனவே வீட்டை மாற்ற வேண்டாம் என்று த்ரிஷாவுக்கு நெருங்கியவர்கள்கொடுத்த ஆலோசனை தான், இந்த பின்வாங்கலுக்கு காரணம் என்கிறார்கள்.

எனவே சென்னையிலிருந்தபடியே தமிழ், தெலுங்கு என இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய முடிவெடுத்து விட்டார் த்ரிஷா.

கவர்ச்சி சவாரியைப் பார்க்க ரசிகர்களும் ரெடிதானுங்கோவ்!

Read more about: trisha in new film vikram

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil