For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  த்ரிஷா, ஜோதிகா லடாய் தெலுங்கில் சூப்பர் ஸ்டாரினியாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு நாளுக்கு நாள் அங்கு ரசிகர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. போகிற போக்கில் நம்மூரில் குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல ஆந்திராவில் த்ரிஷாவுக்கு கோவில் கட்டி கும்பிட்டால் கூடஆச்சரியமில்லை என்கிறார் ஒரு தெலுங்கு வாலா.இப்போதைக்கு பரபரப்பான செய்திகளுக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால், எல்லோரது கையும் த்ரிஷாவை நோக்கித் தான்நீளுகிறது. இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே.முதலில் குளியலறை வீடியோ காட்சி, தனது தந்தையை வீட்டை விட்டு துரத்தியது, தற்கொலைக்கு முயன்றது... இப்படிபரபரப்பை ஏற்படுத்தி வந்த த்ரிஷா, சமீபத்தில் நட்ட நடு ராத்திரியில், குடிபோதையில் டான்ஸ் ஆடி உச்சக்கட்ட பரபரப்பைஏற்படுத்தினார்.ஏன் இப்படி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் உங்களது பெயர் அடிபடுகிறது என்று கேட்டால், இது என்னுடைய பெயர் மற்றும்புகழை கெடுக்க சிலர் செய்யும் சதி என்கிறார் அம்மணி.சரி, இதைப் பற்றி த்ரிஷாவின் ஆல் இன் ஆல் அவரது அம்மாவிடம் கேட்டால், அவரும் இதையே தான் சொல்கிறார்.த்ரிஷாவுக்கு ஏதோ போதாத காலம் என்று வைத்துக் கொள்ளுவோம். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.ஒரு புறம் த்ரிஷாவுக்கு இது சோதனையான காலம் என்றால் மறுபுறம் இந்த சோகத்தை மறக்கும் விதத்தில் டாலிவுட்டில்(அதாங்க ஆந்திராவில்) அவரது கொடி தான் பறக்கிறது. அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து மேலே, மேலே சென்றுகொண்டிருக்கிறார்.இதனால் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் இவர் இருப்பது ஹைதராபாத்தில் தான். எப்பவாவது சின்ன கேப் கிடைக்கும்போது தான் சென்னைப் பக்கம் தலையை காட்டுகிறார். இப்படி சமீபத்தில் தலையைக் காட்டிய போது தான் நடுராத்திரி டான்ஸ்விவகாரத்தில் சிக்கினார்.த்ரிஷாவை தெலுங்கு ரசிகர்கள் தலைக்கு மேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஒரு காலத்தில் நம்மூரில் நதியா அலைவீசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதைப் போல இப்போது ஆந்திராவில் த்ரிஷா அலை.சமீப காலத்தில் எந்தவொரு நடிகைக்கும் தெலுங்கில் இப்படி ஒரு கிரேஸ் வந்ததில்லையாம். கூடிய சீக்கிரத்தில் த்ரிஷாவுக்குதெலுங்குவாலாக்கள் கோவில் கட்டி கும்பிட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டாம்.சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்ற த்ரிஷாவுக்குகூடிய கூட்டத்தைப் பார்த்து இன்னொரு முன்னணி நடிகையே வாயைப் பிளந்து விட்டாராம்.அவர் யார் என்று தானே கேட்கிறீர்கள். நம்ம ஜோதிகா தான் இப்படி வாயைப் பிளந்தவர். விருது வழங்கும் இடத்திற்கு த்ரிஷாகாரில் வந்து இறங்கிய அதே சமயத்தில் ஜோவும் அரங்கத்திற்குள் எண்டர் ஆகியிருக்கிறார்.உடனே அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தலை தெறிக்க ஓடி வர நம்மைப் பார்த்துத் தான் எல்லோரும் ஓடிவருகிறார்கள் என்று ஜோ சந்தோஷப்பட்டிருக்கிறார்.ஆனால் அனைவரும் த்ரிஷாவை மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டிருக்கிறார்கள். ஜோவை யாருமே கண்டுகொள்ளவில்லையாம். இதனால் பார்ட்டி நொந்து நூடுல்ஸாகி விட்டதாம்.இருந்தாலும் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், இங்கே உங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்றுஆச்சரியப்படுவது போல கேட்டுள்ளார்.அதற்கு த்ரிஷா என்ன சொன்னார் தெரியுமா? இங்கே மட்டுமல்ல, அங்கேயும் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.இந்தப் பதிலை கேட்ட ஜோவின் முழி எப்படி இருந்திருக்கும்? ஒரு நிமிஷம் சந்திரமுகியின் கிளைமாக்ஸை ஞாபகப்படுத்திப்பார்த்துக் கொள்ளவும்!

  By Staff
  |

  தெலுங்கில் சூப்பர் ஸ்டாரினியாக வலம் வந்து கொண்டிருக்கும் த்ரிஷாவுக்கு நாளுக்கு நாள் அங்கு ரசிகர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.

  போகிற போக்கில் நம்மூரில் குஷ்புவுக்கு கோவில் கட்டியது போல ஆந்திராவில் த்ரிஷாவுக்கு கோவில் கட்டி கும்பிட்டால் கூடஆச்சரியமில்லை என்கிறார் ஒரு தெலுங்கு வாலா.

  இப்போதைக்கு பரபரப்பான செய்திகளுக்கு சொந்தக்காரர் யார் என்று கேட்டால், எல்லோரது கையும் த்ரிஷாவை நோக்கித் தான்நீளுகிறது. இதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே.

  முதலில் குளியலறை வீடியோ காட்சி, தனது தந்தையை வீட்டை விட்டு துரத்தியது, தற்கொலைக்கு முயன்றது... இப்படிபரபரப்பை ஏற்படுத்தி வந்த த்ரிஷா, சமீபத்தில் நட்ட நடு ராத்திரியில், குடிபோதையில் டான்ஸ் ஆடி உச்சக்கட்ட பரபரப்பைஏற்படுத்தினார்.

  ஏன் இப்படி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் உங்களது பெயர் அடிபடுகிறது என்று கேட்டால், இது என்னுடைய பெயர் மற்றும்புகழை கெடுக்க சிலர் செய்யும் சதி என்கிறார் அம்மணி.

  சரி, இதைப் பற்றி த்ரிஷாவின் ஆல் இன் ஆல் அவரது அம்மாவிடம் கேட்டால், அவரும் இதையே தான் சொல்கிறார்.த்ரிஷாவுக்கு ஏதோ போதாத காலம் என்று வைத்துக் கொள்ளுவோம். இனிமேல் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

  ஒரு புறம் த்ரிஷாவுக்கு இது சோதனையான காலம் என்றால் மறுபுறம் இந்த சோகத்தை மறக்கும் விதத்தில் டாலிவுட்டில்(அதாங்க ஆந்திராவில்) அவரது கொடி தான் பறக்கிறது. அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து மேலே, மேலே சென்றுகொண்டிருக்கிறார்.

  இதனால் ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் இவர் இருப்பது ஹைதராபாத்தில் தான். எப்பவாவது சின்ன கேப் கிடைக்கும்போது தான் சென்னைப் பக்கம் தலையை காட்டுகிறார். இப்படி சமீபத்தில் தலையைக் காட்டிய போது தான் நடுராத்திரி டான்ஸ்விவகாரத்தில் சிக்கினார்.

  த்ரிஷாவை தெலுங்கு ரசிகர்கள் தலைக்கு மேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள். ஒரு காலத்தில் நம்மூரில் நதியா அலைவீசியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதைப் போல இப்போது ஆந்திராவில் த்ரிஷா அலை.

  சமீப காலத்தில் எந்தவொரு நடிகைக்கும் தெலுங்கில் இப்படி ஒரு கிரேஸ் வந்ததில்லையாம். கூடிய சீக்கிரத்தில் த்ரிஷாவுக்குதெலுங்குவாலாக்கள் கோவில் கட்டி கும்பிட்டால் கூட ஆச்சரியப்பட வேண்டாம்.

  சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்ற த்ரிஷாவுக்குகூடிய கூட்டத்தைப் பார்த்து இன்னொரு முன்னணி நடிகையே வாயைப் பிளந்து விட்டாராம்.

  அவர் யார் என்று தானே கேட்கிறீர்கள். நம்ம ஜோதிகா தான் இப்படி வாயைப் பிளந்தவர். விருது வழங்கும் இடத்திற்கு த்ரிஷாகாரில் வந்து இறங்கிய அதே சமயத்தில் ஜோவும் அரங்கத்திற்குள் எண்டர் ஆகியிருக்கிறார்.

  உடனே அங்கு கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் தலை தெறிக்க ஓடி வர நம்மைப் பார்த்துத் தான் எல்லோரும் ஓடிவருகிறார்கள் என்று ஜோ சந்தோஷப்பட்டிருக்கிறார்.

  ஆனால் அனைவரும் த்ரிஷாவை மொய்த்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டிருக்கிறார்கள். ஜோவை யாருமே கண்டுகொள்ளவில்லையாம். இதனால் பார்ட்டி நொந்து நூடுல்ஸாகி விட்டதாம்.

  இருந்தாலும் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல், இங்கே உங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்றுஆச்சரியப்படுவது போல கேட்டுள்ளார்.

  அதற்கு த்ரிஷா என்ன சொன்னார் தெரியுமா? இங்கே மட்டுமல்ல, அங்கேயும் எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.

  இந்தப் பதிலை கேட்ட ஜோவின் முழி எப்படி இருந்திருக்கும்? ஒரு நிமிஷம் சந்திரமுகியின் கிளைமாக்ஸை ஞாபகப்படுத்திப்பார்த்துக் கொள்ளவும்!

  Read more about: trisha vs jyothika
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X