ஜில் ஜில் த்ரிஷா! தமிழ், தெலுங்கு என இரட்டைக் குதிரையில் படு ஸ்பீடாக சவாரி செய்து கொண்டிருக்கும் த்ரிஷா சம்பளவிஷயத்தில் எகிறிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம், சர்ச்சைகள் எக்குத் தப்பாக இருப்பது போல மறுபக்கம் சம்பளத்திலும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறார் த்ரிஷா. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் த்ரிஷாவுக்கு பெரும் டிமாண்ட் உள்ளது.த்ரிஷா நடிக்க முன்வந்தால் சம்பளத்தைக் கொட்டிக் கொடுக்க இரண்டு படவுலக தயாரிப்பாளர்களும்பொட்டிகளுடன் ரெடியாக உள்ளனர்.தெலுங்கில் அவர் நடித்த 3 படங்கள் தொடர் ஹிட் ஆகிவிட த்ரிஷாவுக்கு அங்கு பயங்கர மார்க்கெட்டைஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. கடைசியாக வெளியான அத்தடு பெரும் ஹிட் படமாகியுள்ளதால், அங்கு தனதுசம்பளத்தை கணிசமாக ஏத்தி விட்டாராம் த்ரிஷா.சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு அடுத்த படியாக த்ரிஷாவுக்குத் தான் அங்கு சம்பளம் அள்ளித் தரப்படுகிறது.தெலுங்கில் வலுவாக காலூன்றி விட்டதால் தற்போது தமிழிலும் தனது பலத்தை அதிகரித்துக் கொள்ள முடிவுசெய்துள்ளார் த்ரி.இப்போது சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி என இரு படங்களில் புக் ஆகியுள்ளார். விக்ரமுடனும் ஒருபடத்தில் நடிக்க முயற்சித்து வருகிறார்.தமிழில் அவர் இன்னும் தனது சம்பளத்தை பெரிதாக உயர்த்தவில்லை. ஆனால் ஆறு, ஆதி படங்கள் சூப்பர் ஹிட்ஆனால், தனது சம்பளத்தை ஏத்த முடிவு செய்துள்ளாராம். இதன் காரணமாகவே தன்னைத் தேடி வரும் வேறுபுதிய படங்கள் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லையாம்.விக்ரமுடன் மட்டும் நடிக்க சான்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்.சம்பளத்தில் படு கறார் பேர்வழியாக இருப்பவர் த்ரிஷாவை விட அவரது அம்மாதானாம். பேசிய சம்பளத்தைகரெக்டாக கறந்து விடுகிறாராம். ஆனால் கொடுத்த காசுக்கு கொஞ்சம் கூட வஞ்சம் இல்லாமல் நடிப்பிலும்தெலுங்கில் கிளாமரிலும் புகுந்து விளையாடி விடுவதால், த்ரிஷாவைப் புக் செய்ய அலைமோதுகிறார்கள்.அதேபோல, த்ரிஷாவிடம் இன்னொரு நல்ல பழக்கம். எக்காரணம் கொண்டு இவர் கால்ஷீட் குழப்பங்களைஏற்படுத்துவதில்லை, மேலும் தேவையில்லாத லொள்ளுகளையும் செய்வதில்லை.தனது தேவைகளை முதலிலேயே தெளிவாக சொல்லி விடுகிறார். அதை பூர்த்தி செய்வோர் படங்களில் மட்டுமேநடிக்கிறார்.இப்போதைய தகவலின்படி ஆந்திராவில் த்ரிஷாவின் சம்பளம் ரூ. 1 கோடிக்கு கொஞ்சம் குறைவாம்.அம்மாடியோவ்.சமீபத்தில் ஆதி படத்திற்காக 50 லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீரில் விஜய்யும், த்ரிஷாவும் நனைவது போன்றகாட்சி சென்னையில் படமாக்கப்பட்டது.எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க, ரமணா இயக்கத்தில் உருவாகும் படம் ஆதி. விஜய்யின் மனைவி சங்கீதா காமிராவை முடுக்கிவைக்க முதல் காட்சியே படு கிளுகிளுப்பாக படமாக்கப்பட்டது. விஜய், த்ரிஷா இருவரும் மழையில் ஆடிப் பாடுவது போன்றகாட்சியில் த்ரிஷா அணிந்திருந்த உடையும், அது படமாக்கப்பட்ட விதமும் படு ஜில் ஜில்.இந்தப் படத்திற்காக சென்னையில் பல ஸ்டுடியோக்களில் ஏகப்பட்ட பொருட் செலவில் பல செட்டுகள் போடப்பட்டுவருகின்றன. பாடல் காட்சிகளை லண்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளில் படமாக்கவுள்ளார்களாம். காரணம், த்ரிஷாவுக்குரொம்ப பிடித்த நாடு நியூசிலாந்தாம்.

By Staff

தமிழ், தெலுங்கு என இரட்டைக் குதிரையில் படு ஸ்பீடாக சவாரி செய்து கொண்டிருக்கும் த்ரிஷா சம்பளவிஷயத்தில் எகிறிக் கொண்டிருக்கிறார்.

ஒரு பக்கம், சர்ச்சைகள் எக்குத் தப்பாக இருப்பது போல மறுபக்கம் சம்பளத்திலும் சலசலப்பை ஏற்படுத்திவருகிறார் த்ரிஷா. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் த்ரிஷாவுக்கு பெரும் டிமாண்ட் உள்ளது.

த்ரிஷா நடிக்க முன்வந்தால் சம்பளத்தைக் கொட்டிக் கொடுக்க இரண்டு படவுலக தயாரிப்பாளர்களும்பொட்டிகளுடன் ரெடியாக உள்ளனர்.

தெலுங்கில் அவர் நடித்த 3 படங்கள் தொடர் ஹிட் ஆகிவிட த்ரிஷாவுக்கு அங்கு பயங்கர மார்க்கெட்டைஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. கடைசியாக வெளியான அத்தடு பெரும் ஹிட் படமாகியுள்ளதால், அங்கு தனதுசம்பளத்தை கணிசமாக ஏத்தி விட்டாராம் த்ரிஷா.


சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு அடுத்த படியாக த்ரிஷாவுக்குத் தான் அங்கு சம்பளம் அள்ளித் தரப்படுகிறது.

தெலுங்கில் வலுவாக காலூன்றி விட்டதால் தற்போது தமிழிலும் தனது பலத்தை அதிகரித்துக் கொள்ள முடிவுசெய்துள்ளார் த்ரி.

இப்போது சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி என இரு படங்களில் புக் ஆகியுள்ளார். விக்ரமுடனும் ஒருபடத்தில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

தமிழில் அவர் இன்னும் தனது சம்பளத்தை பெரிதாக உயர்த்தவில்லை. ஆனால் ஆறு, ஆதி படங்கள் சூப்பர் ஹிட்ஆனால், தனது சம்பளத்தை ஏத்த முடிவு செய்துள்ளாராம். இதன் காரணமாகவே தன்னைத் தேடி வரும் வேறுபுதிய படங்கள் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லையாம்.

விக்ரமுடன் மட்டும் நடிக்க சான்ஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்.


சம்பளத்தில் படு கறார் பேர்வழியாக இருப்பவர் த்ரிஷாவை விட அவரது அம்மாதானாம். பேசிய சம்பளத்தைகரெக்டாக கறந்து விடுகிறாராம். ஆனால் கொடுத்த காசுக்கு கொஞ்சம் கூட வஞ்சம் இல்லாமல் நடிப்பிலும்தெலுங்கில் கிளாமரிலும் புகுந்து விளையாடி விடுவதால், த்ரிஷாவைப் புக் செய்ய அலைமோதுகிறார்கள்.

அதேபோல, த்ரிஷாவிடம் இன்னொரு நல்ல பழக்கம். எக்காரணம் கொண்டு இவர் கால்ஷீட் குழப்பங்களைஏற்படுத்துவதில்லை, மேலும் தேவையில்லாத லொள்ளுகளையும் செய்வதில்லை.

தனது தேவைகளை முதலிலேயே தெளிவாக சொல்லி விடுகிறார். அதை பூர்த்தி செய்வோர் படங்களில் மட்டுமேநடிக்கிறார்.

இப்போதைய தகவலின்படி ஆந்திராவில் த்ரிஷாவின் சம்பளம் ரூ. 1 கோடிக்கு கொஞ்சம் குறைவாம்.அம்மாடியோவ்.


சமீபத்தில் ஆதி படத்திற்காக 50 லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீரில் விஜய்யும், த்ரிஷாவும் நனைவது போன்றகாட்சி சென்னையில் படமாக்கப்பட்டது.

எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க, ரமணா இயக்கத்தில் உருவாகும் படம் ஆதி. விஜய்யின் மனைவி சங்கீதா காமிராவை முடுக்கிவைக்க முதல் காட்சியே படு கிளுகிளுப்பாக படமாக்கப்பட்டது. விஜய், த்ரிஷா இருவரும் மழையில் ஆடிப் பாடுவது போன்றகாட்சியில் த்ரிஷா அணிந்திருந்த உடையும், அது படமாக்கப்பட்ட விதமும் படு ஜில் ஜில்.

இந்தப் படத்திற்காக சென்னையில் பல ஸ்டுடியோக்களில் ஏகப்பட்ட பொருட் செலவில் பல செட்டுகள் போடப்பட்டுவருகின்றன. பாடல் காட்சிகளை லண்டன், நியூசிலாந்து போன்ற நாடுகளில் படமாக்கவுள்ளார்களாம். காரணம், த்ரிஷாவுக்குரொம்ப பிடித்த நாடு நியூசிலாந்தாம்.

Read more about: trisha and vijay in aadhi
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X