திரிஷா நடித்த படம் உலக சாதனை.. யப்பா வேற லெவல் என்ன சாதனை தெரியுமா?.. ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: திரிஷா இப்போது மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். இடையில் சின்ன சறுக்கலை சந்தித்த அவர் 96, பொன்னியின் செல்வன், லியோ என வரிசையாக நடித்தார். கடைசியாக அவர் அஜித்துக்கு ஜோடியாக விடாமுயற்சி படத்தில் நடித்தார். அடுத்ததாக மீண்டும் அவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகிறது. அதுமட்டுமின்றி கமல் ஹாசன், சூர்யா ஆகியோரின் படங்களிலும் கமிட்டாகிய்யிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரத்தில் தோன்றி பிறகு ஹீரோயினாக அறிமுகமானவர் திரிஷா. அறிமுகமான முதல் படத்திலிருந்தே தனது அழகாலும், திறமையாலும் கவனத்தை ஈர்த்து தனக்கென தனியிடத்தை பிடித்தார். அதனையடுத்து முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்த அவர் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தினார். இதன் காரணமாக தமிழ், தெலுங்கு மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். மேலும் திரிஷா இல்லாத படங்களே இல்லை என்ற நிலைமைதான் உருவானது.

சறுக்கலை சந்தித்த திரிஷா: தொடர்ந்து பல படங்களில் நடித்த அவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. சூழல் இப்படி இருக்க அவருக்கு 96 படம் நல்ல கம்பேக்காக அமைந்தது. அதில் அவர் ஏற்றிருந்த ஜானு கதாபாத்திரம் ரசிகர்களை மீண்டும் அவர் பக்கம் திருப்பியது. ரசிகர்களை மட்டுமில்லை சினிமா இயக்குநர்களையும்தான். அந்தவகையில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அசத்தினார் திரிஷா.
விஜய்யுடன் இணைந்த திரிஷா: பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் திரிஷாவின் நடிப்பு கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த அவர்; விஜய்யுடன் பல வருடங்களுக்கு பிறகு லியோ படத்தில் இணைந்து நடித்தார். அந்தப் படத்தில் இரண்டு பேரின் கெமிஸ்ட்ரியும் அட்டகாசமாக இருந்தது. அந்தப் படத்துக்கு பிறகு விஜய் நடித்த GOAT படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார். அதுவரை திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் ஐந்தாவது முறை கூட்டணி: லியோ, GOAT படங்களுக்கு பிறகு கடைசியாக அவர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அடுத்ததாக மீண்டும் அவர் அஜித்துக்கு ஜோடியாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. இதுவரை அஜித்துடன் அவர் சேர்ந்து ஜி, கிரீடம், மங்காத்தா, விடாமுயற்சி, குட் பேட் அக்லி என மொத்தம் ஐந்து படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் ஹாசனுடனும் கூட்டணி: குட் பேட் அக்லி படத்தை தவிர்த்து தமிழில் அவர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு நடிக்கும் படமான தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதேபோல் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்திலும் திரிஷாதான் ஹீரோயின். மேலும் சில தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது. இப்படி திரிஷா மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருப்பது அவருடைய ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உலக சாதனை படைத்த திரிஷா நடித்த படம்: இந்நிலையில் திரிஷா நடித்த திரைப்படம் ஒன்று உலக சாதனை படைத்திருக்கிறது. அதாவது திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக திரிஷா நடித்த படம்தான் அத்தடு. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படமானது இதுவரை 1500 முறைக்கும் மேல் டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கிறதாம். இதில்தான் அந்தப் படம் உலக சாதனை படைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











