அவருடன் நெருக்கமாக இருக்கக்கூடாது.. யாரை சொல்கிறார் திரிஷா?.. என்ன ஆச்சோ தெரியவில்லையே?

சென்னை: திரிஷாவின் நடிப்பில் லியோ திரைப்படமும், பிருந்தா வெப் சீரிஸும் கடைசியாக வெளியாகின. அவற்றில் பிருந்தா வெப் சீரிஸ் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. லியோ சுத்தமாக சொதப்பிவிட்டது. அடுத்ததாக அவர் தக் லைஃப், விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இரண்டு படங்கள் மீதும் ஒட்டுமொத்த கோலிவுட்டும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. இந்தச் சூழலில் திரிஷா போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர். ஒரு நடிகை சில வருடங்கள் டாப் இடத்தில் இருப்பதே பெரிய விஷயமாக இருக்கும் சூழலில்; திரிஷாவோ கடந்த பல வருடங்களாகவே அந்த இடத்தை தக்க வைத்திருக்கிறார். இடையில் அவர் சின்ன சின்ன சறுக்கல்களை சந்தித்தாலும் 96 படத்தின் மூலம் தரமான கம்பேக்கை கொடுத்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த ஜானு கதாபாத்திரம் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கட்டிப்போட்டது என்றே சொல்லலாம்.

trisha vidaamuyarchi thug life

லியோவில் லிப் லாக்: 96க்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் குந்தவை கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அந்தப் படங்களுக்கு பிறகு விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தார். அவர்கள் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்ததற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து நடித்தாலும் அவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி குறையவே இல்லை. மேலும் லிப் லாக் எல்லாம் அடித்து அசத்தினார் திரிஷா.

பிஸி திரிஷா: லியோ படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் திரிஷாவின் நடிப்பும் அழகும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்தப் படத்துக்கு பிறகு பிருந்தா என்ற வெப் சிரீஸில் நடித்தார் அவர். அந்த வெப் சீரிஸில் காவல் துறை அதிகாரியாக நடித்து அசத்திய திரிஷாவை பார்த்து; வயதானாலும் அழகு இன்னும் குறையவில்லையே என்று ரசிகர்கள் உச் கொட்டினர். அந்த சீரிஸ் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. இதனையடுத்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

பெரிய ஹீரோக்களுடன்: ஒருபக்கம் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளில் கவனம் செலுத்திவரும் அவர்; மறுபக்கம் பெரிய ஹீரோக்களுடனும் மீண்டும் ஜோடி போட ஆரம்பித்திருக்கிறார். அதன்படி கமல் ஹாசனுடன் தக் லைஃப், அஜித்துடன் விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதுமட்டுமின்றி ஹிந்தியிலும், தெலுங்கிலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கிறார். இப்படி கரியரில் பிஸியாக இருந்தாலும் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களிலும் அவர் ஆக்டிவ்வாக இருந்துவருகிறார்.

இன்ஸ்டா போஸ்ட்: அந்தவகையில் அவர் போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒருமுறை புத்திசாலி ஒருவர் என்னிடம் உன்னை மனமுடைய செய்தவர் அவர்தான் என தெரிந்தும் அவருடன் நெருக்கமாகவு, நட்புடனும் பழகும் ஒருவருடன் எந்தக் காலத்திலும் பழகக்கூடாது என கூறினார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் திரிஷா இந்தப் போஸ்ட்டின் மூலம் யாரை சொல்கிறார் என்று தீவிர ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X