அடுத்தவர்களுக்கு மன உளைச்சல் கொடுக்க தயாராகிவிட்டாரா திரிஷா?.. ஆரம்பித்த புது பிரச்னை

சென்னை: தமிழின் முன்னணி நடிகையாக கடந்த பல வருடங்களாக இருப்பவர் திரிஷா. அவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளியாகின. அந்த மூன்று படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. மேலும் தெலுங்கிலும் விஸ்வம்பரா படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் திரிஷா பகிர்ந்திருக்கும் ரீல்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில்ட் ட்ரெண்டாகியிருக்கிறது.

இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கிய ஜோடி படத்தில் சிறு கேரக்டரில் நடித்த திரிஷா லேசா லேசா, மௌனம் பேசியதே ஆகிய இரண்டு படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட்டானார். அவற்றில் லேசா லேசா வெளியாக தாமதமானது. எனவே முதலில் வெளியான மௌனம் பேசியதே படம்தான் அவருடைய முதல் படமாக கருதப்படுகிறது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி திரிஷாவுக்கு நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்து, அடுத்தடுத்து வாய்ப்புகள் வர வழிவகுத்தது.

முன்னணி ஹீரோயின் திரிஷா: அதன்படி தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட திரிஷா விஜய், அஜித், சூர்யா, சிம்பு, விக்ரம், ரவி மோகன் என பலருடனும் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் மகேஷ் பாபு, பாலகிருஷ்ணா, பிரபாஸ் என பலருடன் நடித்து பட்டையை கிளப்பினார். இருப்பினும் தமிழில் ரஜினி, கமலுடன் நடிக்கமுடியாமல் இருந்தார். அதுவும் மன்மதன் அம்பு, தூங்காவனம், பேட்ட ஆகிய படங்களின் மூலம் நிறைவேறியது.

Trisha s Instagram Story Goes Trending on Social Media Here are Details
Photo Credit:

மீண்டும் எழுந்த திரிஷா: இதற்கிடையே திரிஷாவுக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது. அப்படிப்பட்ட நிலைமையில்தான் பிரேம் இயக்கத்தில் 96 படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த ஜானு கதாபாத்திரம் பலரது ஃபேவரைட்டாக மாற்றியது. விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி, அபியும் நானும் அபி ஆகிய கேரக்டர்கள் எப்படி கொண்டாட்டப்பட்டதோ அதேபோல் ஜானுவும் கொண்டாடப்பட்டார். 96 படத்துக்கு பிறகு மீண்டும் ஃபார்முக்கு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து அசத்தினார்.

பிஸியான நடிகை: 96, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அவர் மீண்டும் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அஜித்துடன் வரிசையாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்தார். அவ்விரண்டு படங்களிலுமே திரிஷாவின் கேரக்டர் பெரிதாகவே பேசப்பட்டது. ஆனால் படம் தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக கமலுடன் அவர் நடித்திருக்கும் தக் லைஃப் படமும் தோல்வியையே அவருக்கு பரிசாக கொடுத்தது.

திரிஷா பகிர்ந்திருக்கும் ரீல்ஸ்: இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது சாமியார் தோற்றத்தில் கடற்கரையில் இருக்கும் ஒருவரிடம் பெண் ஒருவர் நீங்கள் மன உளைச்சலாக இருக்கும்போது என்ன் செய்வீர்கள் என்று கேட்பது போன்றும்; அதற்கு அந்த மனிதர், 'நான்தான் மற்றவர்களுக்கு மன உளைச்சலை கொடுப்பேன். சமநிலை முக்கியம்" என கூறுவது போன்ற ஒரு ரிலீஸ் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

அந்த ரீல்ஸைத்தான் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக வைத்திருக்கிறார். முன்னதாக விஜய்யின் பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து திரிஷா வாழ்த்து தெரிவித்திருந்தார். அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது அதனையும், இந்த ரீல்ஸையும் இணைத்து ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X