மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன்.. அப்படி திரிஷாவுக்கு என்னதான் ஆச்சு?.. இப்படி ஒரு போஸ்ட்டா?

சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் பிருந்தா என்ற வெப் சீரிஸ் வெளியானது. மேலும் GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் குட் பேட் அக்லி, தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கும் சூழலில் அவர் போட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

ஒரு நடிகை சினிமாவில் 10 வருடங்கள் தொடர்ந்து டாப் 5 இடங்களுக்குள் இருப்பது பெரிய விஷயம். ஆனால் திரிஷாவோ ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேலாக டாப் பொசிஷனிலேயே இருக்கிறார். லேசா லேசா படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானார் அவர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு, அழகும் ரசிகர்களையும் கோலிவுட் இயக்குநர்களையும் அவர் பக்கம் திருப்பியது. அதன் காரணமாக வரிசையாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

trisha goat vidaamuyarchi

தொடர்ந்து டாப் ஹீரோயின்: அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் தமிழில் ஜோடி போட்டுவிட்டார் திரிஷா. முக்கியமாக விஜய்யுடன் அவர் நடித்த கில்லி, விக்ரமுடன் அவர் நடித்த சாமி உள்ளிட்ட திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன. இதனால் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் அவர். தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.

சின்ன சறுக்கல்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் சில படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் 96 திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் ஹிட்டாக திரிஷா ஜானுவாக கொண்டாடப்பட்டார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் 2 பாகங்கள், லியோ, ராங்கி என வரிசையாக படங்களில் நடித்து மீண்டும் பிஸியாகிவிட்டார்.

அடுத்தடுத்த படங்கள்: தற்போது அவர் கைவசம் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் இருக்கின்றன. மேலும் ஹிந்தியிலும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. கடைசியாக அவரது நடிப்பில் பிருந்தா வெப் சீரிஸ் வெளியானது. மேலும் GOAT படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சென்சேஷனலும் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷாவின் போஸ்ட்: இதற்கிடையே அவர் சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருப்பவர். அதன்படி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் போஸ்ட்டில் அவர், "நான் மனிதர்களை தவிர்த்துவிடுகிறேன். நாய்களை நேசிக்கிறேன். என்னுடைய நாய் மற்ற நாய்களை தவிர்த்துவிடுகிறது. மனிதர்களை நேசிக்கிறது. நாம் இணைந்து நேசமான சமூகத்தை உருவாக்குவோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X