திரிஷாவின் ரீ யூனியன்.. செம க்யூட்டா இருக்காங்களே.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: திரிஷாவின் நடிப்பில் கடைசியாக தக் லைஃப் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்திருக்கிறார். இது தவிர்த்து இன்னும் சில ஹீரோக்களுடனும் படங்களில் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.

சினிமாவில் 20 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக கோலோச்சிக்கொண்டிருப்பவர் திரிஷா. அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்த சூழலில்; திடீரென அவரது மார்க்கெட் சரிந்ததுதான். ஆனால் அவரோ சுதாரித்துக்கொண்டு தனது நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த 96 திரைப்படம் திரிஷாவுக்கு பெரிய கம்பேக்கை கொடுத்தது.

மீண்டும் முன்னணி ஹீரோயின்: தமிழ்நாட்டின் கனவுக்கன்னி, முன்னணி ஹீரோயின் என்று பட்டம் பெற்ற அவரை மீண்டும் அந்த இடத்தை நோக்கி நகர்த்த ஆரம்பித்தது 96 திரைப்படம்தான். அப்படம் கொடுத்த வெற்றி திரிஷாவுக்கு பெரிய எனர்ஜியை கொடுத்தது. எனவே கதை தேர்வில் தெளிவாக இருந்து பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 96ல் எப்படி ஜானுவாக கலக்கினாரோ; அதேபோல் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலுமே குந்தவையாக கலக்கிவிட்டார்.

Trisha s Latest Instagram Re Union Photo goes trending
Photo Credit:

வரிசையாக படங்கள்: பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு மேலும் லைம் லைட்டை கொடுக்க; முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு மீண்டும் வந்துவிட்டார். அந்தவகையில் விஜய்யுடன் லியோ, அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, கமலுடன் தக் லைஃப் ஆகிய படங்கள் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்தவை. இவற்றில் எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய படங்கள்: அதிலும் தக் லைஃப் படத்தில் திரிஷாவின் கேரக்டர் ரொம்பவே விமர்சனங்களை சந்தித்தது. முத்த மழை பாடலில் எல்லாம் எக்ஸ்பிரஷனே இல்லையே என்று கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள். அவர் இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு திரைப்படத்தில் நடித்துவருகிறார். இப்படமாவது தனக்கு ஹிட் படமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் திரிஷா.

திரிஷாவின் ரீ யூனியன்: சினிமாவெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் ஜாலியாக ஊர் சுற்றுவது, தோழிகளுடன் அரட்டை அடிப்பது, அடிக்கடி சந்திப்பது என திரிஷா இருக்கிறார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார். அந்தவகையில் இப்போது தனது தோழிகளை சந்தித்திருக்கிறார். தயாரிப்பாளர் அர்ச்சனா, திரிஷா உள்ளிட்டோர் சந்தித்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்திருக்கிறார் திரிஷா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X