அட நம்ம திரிஷாவா இவங்க.. எப்படி இருக்காங்க பாருங்க.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் அவர் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக அவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.மேலும் ஒரு ஹிந்தி படத்திலும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது பாஸ்போர்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

திரிஷா தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர். துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமா திரையில் தலை காட்டியவர்; பிறகு ஹீரோயினாக உயர்ந்தார். அதன்படி அவர் நடித்த படங்களில் அவரது திறமையும், அழகும் அவரை முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்துக்கு அழைத்து சென்றது. குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் அவரது மார்க்கெட் கணிசமாக உயர்ந்தது.

trisha tamil cinema kollywood


இடையில் சறுக்கிய திரிஷா: தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரிசையாக நடித்து வந்த அவர் ஹிந்தியிலும் தலை காட்டினார். ஆனால் அங்கு அவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதன் காரணமாக திரிஷாவின் கரியர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும்; அவர் சினிமாவிலிருந்து டீசண்ட்டாக ஒதுங்கிவிடலாம் என்றும் பலரும் ஓபனாகவே சொல்ல ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டு வந்த திரிஷா: ஆனால் அவர்கள் கூறியதற்கு நேர் மாறாக காட்சிகள் நகர்ந்தன. ஒளிப்பதிவாளர் பிரேம் இயக்கிய தனது முதல் படமான 96 படத்தில் ஜானு என்ற கேரக்டரில் திரிஷா நடித்திருந்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஒவ்வொரு சீனிலும் அவர் தனது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி ஸ்கோர் செய்தார். அதனையடுத்து மீண்டும் திரிஷாவின் கரியர் பீக்கிற்கு சென்றது. முக்கியமாக டாப் 2 இடத்துக்குள் வந்து மீண்டும் அமர்ந்துகொண்டார்.

லியோ, GOAT: 96க்கு பிறகு வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் வந்தன. அந்தவகையில் கடைசியாக அவர் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்திருந்தார். ஏற்கனவே திரையில் இந்த ஜோடி ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட்டாக இருந்தது. லியோ படத்திலும் அந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அதுமட்டுமின்றி விஜய்க்கு லிப் லாக்கும் செய்திருந்தார் திரிஷா. லியோ படத்தை முடித்துவிட்டு GOAT படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருந்தார் அவர்.

அடுத்த படங்கள்: இப்போது அவரது கைவசம் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் ஆகிய படங்கள் இருக்கின்றன. இவை மட்டுமின்றி ஹீரோயின் செண்ட்ரிக் உள்ள சில படங்களிலும் அவர் கமிட்டாகியிருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் திரிஷாவின் பாஸ்போர்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் திரிஷா சின்ன பெண் போல் காட்சியளிக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம திரிஷாவா இவங்க அடையாளமே தெரியலையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X