வித்யா பாலன், கணவருக்கு இடையே புகுந்த புதுமுக நடிகை?
மும்பை: நடிகை வித்யா பாலனுக்கும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே பிரச்சனையாக உள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.
பாலிவுட் நடிகை வித்யா பாலன் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் வித்யாவுக்கு மவுசு குறையவில்லை.
அவர் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

கர்ப்பம்
வித்யா கடந்த சில மாதங்களாக புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

வித்யா
தாயாக மனதளவில் தான் இன்னும் தயாராகவில்லை என்றும், தான் கர்ப்பமாக இல்லை என்றும் வித்யா தெரிவித்தார்.

புதுமுக நடிகை
வித்யா தனது படவேலைகளில் பிசியாக வெளியூர், வெளிநாடு என்று சென்று கொண்டிருந்த வேளையில் சித்தார்த்துக்கும் ஒரு புதுமுக நடிகைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

கண்காணிப்பு
சித்தார்த்தின் புது நட்பு பற்றி அறிந்த வித்யா தனது வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வீட்டில் இருந்து அவரை கண்காணித்து வருகிறாராம்.

சண்டை
புதுமுக நடிகை விவகாரம் தொடர்பாக சித்தார்த்துக்கும், வித்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறதாம்.

தாய்வீடு
வித்யாவின் திருமண வாழ்வில் பிரச்சனை என்று கூறப்படும் நேரத்தில் அவர் அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்.

சித்தார்த்
சித்தார்த் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தானவர். தனது பால்யகால தோழியை முதலில் மணந்த சித்தார்த் அவரை பிரிந்த பிறகு 2008ம் ஆண்டில் பெண் தயாரிப்பாளர் ஒருவரை மணந்தார். அந்த பெண் தயாரிப்பாளருக்கும், சித்தார்த்துக்கும் கடந்த 2011ம் ஆண்டு விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











