நழுவிய வாய்ப்புகள்... காதலன் தந்த ஏமாற்றம்.. - ஜியா கானின் கடைசி நிமிடங்கள்!

By Shankar

மும்பை: நடிகை ஜியா கான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 5 மணி நேரங்களில் நடந்த பரபரப்பான நிகழ்வுகள் வெளிவந்துள்ளன. அவரது தற்கொலை முடிவுக்கு காரணம் காதல் தோல்விதான் என்று தெரிய வந்துள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய 'கஜினி' இந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த 'நிஷாப்த்', 'ஹவுஸ் புல்' போன்ற இந்தி படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஜியா கான். 25 வயதே நிரம்பிய இவர் திடீரென தூக்கில் தொங்கி பிணமானது பாலிவுட்டை அதிர வைத்துள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதித்ய பஞ்சோலி மகன் சூரஜ்

ஆதித்ய பஞ்சோலி மகன் சூரஜ்

ஜியா கான் கடைசியாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சுராஜ் பஞ்சோலியுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.

நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் அவரது மகன் சூரஜ் பஞ்சோலி ஆகியோரிடம் மும்பை போலீசார் நேற்று நடத்திய விசாரணையில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரக்தி

விரக்தி

தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்னர் ஜியா கான் விரக்தி நிலையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. அவரது வாழ்வின் இறுதி நிமிடங்களில் மிகுந்த மன உளைச்சலுக்கு அவர் உள்ளாகியிருந்தார் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

கடந்த ஓராண்டு காலமாக சூரஜ்-ஜுடன்தான் ஜியா கான் நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் அவரோ புதிய தோழியுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஜியா கானை சூரஜ் சில நாட்களாக புறக்கணித்து வந்துள்ளார்.

தமிழ்ப் பட வாய்ப்பு

தமிழ்ப் பட வாய்ப்பு

கடந்த 1ம் தேதி புதிய தமிழ் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஜியா கானை டிஸ்கஷனுக்கு அழைத்திருந்தார்களாம். ஆனால் கடைசி நேர்ததில் அந்த வாய்ப்பு நழுவிவிட்டதாம்.

இரண்டு நாள் முழுக்க சூரஜ்ஜுடன்...

இரண்டு நாள் முழுக்க சூரஜ்ஜுடன்...

பட வாய்ப்பு போன விரக்தியில் அன்று மாலை 7 மணியளவில் மும்பை திரும்பிய அவர் இரவு 9 மணிக்கு காந்திராம் சாலையில் உள்ள சூரஜ் வீட்டுக்குப் போய், இரவு முழுவதும் அவருடனே இருந்துள்ளார்.

ஜூன் - 2-ம் தேதி பகல் முழுவதும் அவருடன் இருந்துவிட்டு, இரவு 9 மணியளவில் ஜுஹு பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் சூரஜ்ஜுடன் சாப்பிட்டார். சூரஜ் தனது காரில் ஜியா கானை அவரது வீட்டில் இறக்கிவிட்டுச் சென்றார்.

எஸ்எம்எஸ்...

எஸ்எம்எஸ்...

ஆனால் அடுத்த நாளே இருவருக்கும் ஏதோ பிரச்சினை. ஜூன் - 3ம் தேதி சூரஜ்ஜுடன் 10 முறைக்கு மேல் செல்போனில் பேசி, ஏகப்பட்ட மெசேஜ்களையும் ஜியா கான் அனுப்பியுள்ளார்.

3 புதிய படங்களில்...

3 புதிய படங்களில்...

மாலை 7 மணிக்கு மீண்டும் போன் செய்து தனக்கு 3 புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக சூரஜ்ஜிடம் கூறிகிறார். இரவு 9 மணியளவில் புதிய படவாய்ப்புக்கு வாழ்த்து தெரிவித்த சூரஜ், தனது உதவியாளரிடம் பூச்செண்டு கொடுத்தனுப்பியுள்ளார்.

அதன்பிறகு, ஜியா கானின் செல்போன் அழைப்புகளை சூரஜ் நிராகரித்துள்ளார்.

இதை வெளியே வீசு...

இதை வெளியே வீசு...

9.15 மணிக்கு சூரஜ் தந்தனுப்பிய பூச்செண்டை வீட்டு காவலாளியிடம் தந்து அதை வெளியே வீசும்படி ஜியா கான் கோபத்துடன் கூறிவிட்டாராம்.

9.30 மணிக்கு சூரஜ்ஜின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்க முயற்சித்துள்ளார். தந்தை ஆதித்யா பஞ்சோலியிடம் சூரஜ் மிக மும்முரமாக பேசிக்கொண்டிருப்பதாக உதவியாளர் கூறிவிட்டதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார் ஜியா கான்.

இரவு 10.53க்கு மீண்டும் சூரஜ்ஜிற்கு போன் செய்து 2 நிமிடங்கள் அவருடன் பேசியுள்ளார்.

லண்டனுக்குப் போய்விடுவேன்

லண்டனுக்குப் போய்விடுவேன்

இதே நிலை நீடித்தால் நான் லண்டனுக்கு போய் விடுவேன் என்று இரவு 11.07க்கு சூரஜ்ஜிற்கு எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார்.

11.07-லிருந்து 11.22 வரை தனக்கு போன் செய்யும்படி சூரஜ் அனுப்பிய 3 எஸ்எம்எஸ்களுக்கு ஜியா கான் பதில் அளிக்கவில்லை.

பிணமாகத் தொங்கினார்

பிணமாகத் தொங்கினார்

வெளியே சென்றிருந்த ஜியா கானின் தாயார் ரபியா கான் 11.23-க்கு வீட்டுக்குள் நுழைந்தபோது, படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் ஜியா கான் பிணமாக தொங்கும் காட்சியைத்தான் பார்த்துள்ளார்.

போலீசார் நேற்று நடத்திய விசாரணையில் ஜியா கானின் தற்கொலை மரணம் காதல் தோல்வியால்தான் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சூரஜை விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X