தூத்துக்குடி ‘மக்காக்கள்’ தொடங்கிய தமன்னா ரசிகர் மன்றம்!

அந்தக் காலத்தில் குஷ்புவுக்குக் கோவில் கட்டியவர்கள் தமிழக ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன்பு திரிஷாவுக்கு மன்றம் தொடங்கினர். பின்னர் நமீதாவுக்கும் மன்றம் வந்தது. ஆந்திர இடுப்பழகி இலியானாவுக்கும் மதுரையில் ரசிகர்கள் மன்றம் தொடங்கி அசத்தினர்.
இப்போது 'தென்றல்' தமன்னாவுக்கும் ரசிகர் மன்றம் வந்து விட்டது. தமிழில் முன்னணி நடிகையாகியுள்ள தமன்னாவுக்கு தூத்துக்குடியில் ரசிகர் மன்றம் தொடங்கியுள்ளனர். இது பத்தில் ஒரு மன்றம் இல்லையாம். இதுதான் தலைமை மன்றமாம்.
தமன்னா நடித்துள்ள பையா படம் ரிலீஸாகும் தியேட்டரில் பிரமாண்ட கட் அவுட்டை வைத்து பாலாபிஷேகமும் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தங்கத்தாமரை தமன்னா என்ற புதுப் பட்டப் பெயரையும் சூட்டி அழகு பார்த்துள்ளனர்.
அடுத்து கோவில் ஏதாவது கட்டுவார்களா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











