வாக்கிங் சென்றபோது சுற்றி வளைத்த நாய்கள்.. ஒரே நொடிதான்.. பாய்ந்து கடித்ததில் டிவி நடிகை படுகாயம்!

By

சென்னை: தெரு நாய்கள் விரட்டிக் கடித்ததில் பிரபல சீரியல் நடிகை படுகாயமடைந்தார்.

Recommended Video

MaKaPa Pets in LockDown | It's Carzy Quarantine | LockDown

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடுகிறது.

சவாலாக இருக்கிறது

சவாலாக இருக்கிறது

அங்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இங்கும் அந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அரசுக்கும் சுகாரத்துறைக்கும் கடும் சவாலாக இருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பாதிப்பு குறைவுதான்.

ஊரடங்கு

ஊரடங்கு

இருந்தாலும் இதன் காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர், நடிகைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கின்றனர்.

நாயுடன் வாக்கிங்

நாயுடன் வாக்கிங்

இந்நிலையில் டிவி.நடிகை ஒருவர் வாக்கிங் சென்று நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளார். பிரபல இந்தி சீரியல் நடிகை ஆஞ்சல் குரானா. ஏராளமான இந்தி தொடர்களில் நடித்துள்ளார். தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன், தனது செல்ல நாய் லியோவுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

கடித்து விட்டன

அப்போது மூன்று தெருநாய்கள், லியோவை விரட்டியபடி வந்தன. சிறிது நேரத்திலேயே ஆஞ்சலையும் லியோவையும் அந்த நாய்கள் சுற்றிவிட்டன. இதனால் பயத்தில் லியோவை தூக்கி வைத்துக் கொண்டார், ஆஞ்சல். உடனே அந்த நாய்கள் ஆஞ்சலை கடித்துவிட்டன. கதறினார். இருந்தும் அந்த நாய்கள் விடவில்லை. அவரது இடது பக்க இடுப்பு மற்றும் வலது கால் மூட்டில் பலமாகக் கடித்துவிட்டன.

லியோவை கடிக்கவில்லை

லியோவை கடிக்கவில்லை

சிறிது நேரத்தில் அவை ஓடியதை அடுத்து, மருத்துவமனை சென்று ஊசி போட்டிருக்கிறார் ஆஞ்சல். இந்த சம்பவம் பற்றி அவர் கூறும்போது, லாக் டவுன் காரணமாக சாலைகளில் யாருமில்லை. திடீரென்று தெரு நாய்கள் குரைத்தபடி ஓடிவந்தன. லியோவை தூக்கிக் கொண்டேன். அதற்குள் என்னை கடித்துவிட்டன. நல்ல வேளை என் லியோவுக்கு ஒன்றும் ஆகாததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X