என் நடிப்பை சந்தானம் பாராட்டினார்: டிவி தொகுப்பாளினி ஜெனிப்ரியா

By Mayura Akilan

டிவி தொகுப்பாளினிகள் சீரியலுக்கும், சினிமாவிற்கும் வருவது புதிய விசயமில்லை. அந்த வரிசையில் இணைந்துள்ளார் ஜெனிப்ரியா.

இசையருவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜெனிப்ரியா தற்போது சிம்பு, ஹன்சிகா நடிக்கும் வாலு படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்து வருகிறார்.

இவரது நடிப்பைப் பார்த்து சந்தானம் பாராட்டினாராம். இதனால் குஷியான பெண்ணுக்கு சிம்ரன் மூலம் இன்ப அதிர்ச்சி கிடைத்துள்ளதாம்

வாலு படம் வெளிவந்ததும் பெரிதாக பேசப்படுவேன் என்று கூறும் ஜெனிப்ரியா தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்திருப்பதாக கூறுகிறார். மேற்கொண்டு படியுங்களேன்.

பாரதிராஜா அறிமுகம்

பாரதிராஜா அறிமுகம்

பாரதிராஜா சார் ஆரம்பிச்ச ‘தமிழ்த் திரை' டி.வி-க்கு வந்தேன். அப்படியே ஜெயா, வசந்த், கலைஞர், சன், இசையருவினு எல்லா சேனல்கள்லயும் சீரியல், காம்பியரிங், செலிப்ரிட்டி இன்டர்வியூனு ஒரே பிஸி.

இன்னிசை ஞானியில் பிரபலம்

இன்னிசை ஞானியில் பிரபலம்

இசையருவி சேனலின் ‘இன்னிசை ஞானி' நிகழ்ச்சிதான் என்னை டி.வி மீடியாவில் பிரபலமாக்கியது என்கிறார். சீரியல், சினிமா வாய்ப்பு வரவே இசையருவிக்கு சின்ன பிரேக் விட்டிருக்கிறேன் என்கிறார்.

சீரியல் டூ சினிமா

சீரியல் டூ சினிமா

இப்போது ‘வம்சம்' சீரியலில் நடித்து வரும் ஜெனிப்ரியா தற்போது சினிமாவிலும் பிரபலமாகிவருகிறார். இவர் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மாணவியாம்.

சந்தானத்தின் ஜோடி

சந்தானத்தின் ஜோடி

‘துள்ளல்' படத்துல ஓபனிங் சாங்குக்கு டான்ஸ் பண்ணினேன். இப்போ ‘வால்' படத்துல சந்தானம் சாருக்கு ஜோடியாக நடித்து வருகிறேன்.

பாராட்டிய சந்தானம்

பாராட்டிய சந்தானம்

வாலு பட ஷூட்டிங்ல என்னோட பெர்மாமென்ஸ் பார்த்துட்டு ரொம்ப பாராட்டினார். சினிமாவில் சின்ன ஆளு பெரிய ஆளெல்லாம் கிடையாது திறமை இருந்தா ஜெயிக்கலாமுன்னு சந்தானம் சார் சொன்னார். அதான் நம்பிக்கையோட இருக்கேன் என்கிறார்.

ஹீரோயினாக அறிமுகம்

ஹீரோயினாக அறிமுகம்

‘காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை' படத்துல ஹீரோயினாவும் நடிச்சிட்டிருக்கேன்.

சின்ரன் படத்தில் வாய்ப்பு

சின்ரன் படத்தில் வாய்ப்பு

ஒரு நிகழ்ச்சி ஒன்றிற்காக சிம்ரன் மேடத்தை சந்திச்சேன். நான் ஒரு படம் தயாரிக்கப்போறேன் அதுல நீ முக்கியமான கேரக்டர்ல நடிக்கப்போறேன்னு சொல்லியிருக்கார் என்று புன்னகைப் பூக்க சொல்கிறார் ஜெனிப்ரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X