Nayanthara: விசில் சின்னம் வந்தாச்சு.. நயன்தாரா நிகழ்ச்சிக்குள்ளும் புகுந்த TVK! எல்லாம் ப்ரீ பிளானா பாஸ்?

சென்னை: நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவர். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக உள்ள படங்கள் என்று எதிர்பார்க்கப்படுவது, மூக்குத்தி அம்மன் 2, டாக்ஸிக், பேட்ரியாட் உள்ளிட்ட படங்கள் தான். இந்த மூன்று படங்களுமே பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் நயன்தாரா கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றுள்ளார். அங்கு, நடந்த ஒரு சம்பவம் அவரை அரசியல் செய்திகளுக்குள் சிக்க வைத்துள்ளது.

நயன்தாரா பொதுவாகவே அதிகப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். மிகவும் சொற்ப நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்வார் என்றும், அதுவும் சில கட்டுப்பாடுகளை வைத்துத்தான் அவர் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில், இவர் சமீபத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல், மாணர்கள் குழுமியிருந்த அரங்கில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு நயன்தாரா வந்த விதம் சினிமாட்டிக்காக இருந்தது. அதாவது, மேடைக்கு கீழ் பகுதியில் இருந்து ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார் நயன்தாரா. அதன் பின்னர் கீழ் இருந்து மேடையின் மேல்பகுதிக்கு செல்வது போன்று அமைக்கப்பட்டிருந்த லிஃப்ட் மூலம் மேடைக்கு வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

TVK Whistle Symbol Campaign Happened College Function Which was Nayanthara As Chief Guest

விசில் சின்னம்: இது ஒரு புறம் இருக்க, நயன்தாரா கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் இடம்பெற்ற பாடலான விசில் போடு பாடல் ஒலிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டு இருந்த மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். இது மட்டும் இல்லாமல், அவர்கள் கையில் வைத்திருந்த விசிலையும் அடித்து ஆரவாரம் செய்தனர். மேலும் அக்கல்லூரியின் உரிமையாளரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் இந்தியா முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களை கண்காணிக்கும் யுஜிசியை டேக் செய்து, ஒரு கல்லூரி விழாவில் அரசியல் கட்சியை புரோமோட் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

நயன்தாரா: அதே நேரத்தில் நயன்தாரா கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் இது போல நடந்திருப்பதால், பலரும் இது நயன்தாராவுக்கு தெரிந்து நடந்ததா? நயன்தாராவும் விஜய் கட்சியில் இணைந்து விட்டாரா? என்று எல்லாம் கேள்வி கேட்டு வருகிறார்கள். நயன்தாரா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இது நடைபெற்று இருந்தாலும், நயன்தாரா இருக்கும் போது இந்தச் சம்பவம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X