'லெஜன்ட் சரவணா ஸ்டோர்' அதிபர் பட ஹீரோயினுக்கு அமீரக அரசு வழங்கிய கவுரவம்.. என்னன்னு பாருங்க!
மும்பை: 'லெஜன்ட் சரவணா ஸ்டோர்' அதிபர் பட ஹீரோயினான நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு சலுகை வழங்கியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி ரவுட்டேலா. சிங் சாப் தி கிரேட் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த ஊர்வசி ரவுட்டேலா, ஏராளமான அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார்.

விர்ஜின் பானுபிரியா
தொடர்ந்து பாக் ஜானி, சனம் ரே, கிரோ கிராண்ட் மஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹேட் ஸ்டோரி 4, பாகல் பான்டி ஆகிய படங்களில் நடித்தார் ரவுட்டேலா. கடைசியாக விர்ஜின் பானுபிரியா என்ற படத்தில் நடித்தார்.

லெஜன்ட் சரவணா
இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. தற்போது பிளாக் ரோஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி. இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகி வருகிறது. இதேபோல் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா.

4 கோடிக்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஊர்வசி ரவுட்டேலாவை 4 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடிக்கடி கலக்கல் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வரும் ஊர்வசி ரவுட்டேலா அந்த போட்டோக்களை இணையத்தில் ஷேர் செய்து தெறிக்கவிட்டு வருகிறார்.
Recommended Video

அமீரக அரசு கோல்டன் விசா
இந்நிலையில் அமீரக அரசு ஊர்வசி ரவுட்டேலாவுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விஐபிக்கள் 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.

புதுப்பித்துக் கொள்ளும் வசதி
இந்த விசா புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது. இந்த விசாவை நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு. ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், பிருத்விராஜ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











