ஜோதிகாவின் உடன்பிறப்பே...முழு ஆல்பம் இன்று வெளியீடு
சென்னை : ஜோதிகாவின் 50 வது படமாக உருவாகி உள்ளது உடன்பிறப்பே. இரா.சரவணன் இயக்கி உள்ள இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ளது.
அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தில் சசிக்குமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிகா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சசிக்குமாரின் பாசமுள்ள தங்கையாக ஜோதிகா நடித்துள்ளார். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

நாளை ஓடிடி ரிலீஸ்
ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 ம் தேதியான நாளை இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் 4 படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியிடப்படும் என சூர்யா ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
இதன்படி செப்டம்பர் மாதம் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபரில் உடன்பிறப்பே படமும், நவம்பரில் ஜெய்பீம் படமும், டிசம்பரில் ஓ மை டாக் படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இதுவரை வெளியான உடன்பிறப்பே படத்தின் போஸ்டர், டிரைலர், ஃபஸ்ட் சிங்கிள் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.

10 மில்லியன் பார்வைகள்
இந்த படத்தின் அண்ணே யாரண்ணே என துவங்கும் ஃபஸ்ட் சிங்கிள், ஒத்தபன காற்றே என துவங்கும் செகண்ட் சிங்கிள் ஆகியன லட்சக்கணக்கில் பார்வைகளை அள்ளி உள்ளனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட உடன்பிறப்பே படத்தின் டிரைலர் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

ஆல்பம் ரிலீஸ்
தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதிகளில் படமாக்கப்பட்ட உடன்பிறப்பே படம் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் ஒட்டுமொத்த பாடல் ஆல்பத்தையும் படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. மனதை வருடுவதாக இந்த ஆல்பம் இருக்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்
சகோதர பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மற்றொரு கிழக்கு சீமையிலே படமாக முத்திரை பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் மற்ற பாடல்கள், படத்தின் கதை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தெலுங்கிலும் ரிலீஸ்
இந்த படம் தெலுங்கில் ரத்த சம்பந்தம் என்ற பெயரில் நாளை ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











