»   »  தீ நகர் உதயதாரா

தீ நகர் உதயதாரா

Subscribe to Oneindia Tamil

கொக்கி மூலம் கதாநாயகனாக உயர்ந்த கரண் அடுத்து தீ நகர் என்ற படத்தில்நாயகனாக கலக்கப் போகிறார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி, கமல்ஹாசன் மூலம்தமிழுக்கும் வந்தவர் கரண். குணச்சித்திர, வில்லன் ரோல்களில் நீண்ட காலம்வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

திடீரென ஒரு நாள் திரும்பிப் பார்த்த அவர், தன்னை விட அலங்கோலமாக இருந்தபலரும் ஹீரோக்களாக கலக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து கடுப்பாகி, இனிமேல்நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று விட்டார் ஒரு ஸ்டேட்மென்ட்.

அப்படி சொல்லி பல மாதங்களாகியும் ஒரு வாய்ப்பும் வரவில்லை. கரணும் அலட்டிக்கொள்ளவில்லை. இந் நிலையில் கொக்கி படக் கதையுடன் இயக்குனர் பிரபு சாலமன்கரணை அணுகினார். இப்படிப்பட்ட கதைக்குத்தானய்யா காத்துக் கொண்டிருந்தேன்என்று சந்தோஷமான கரண், கொக்கி மூலம் நாயகனாக அவதாரம் எடுத்தார்.


அங்கே இங்கே பைனான்ஸ் வாங்கி படத்தையும் அவரே தயாரித்தார். கொக்கிசிறப்பாக ஓடி கரணுக்கு பணத்தையும் பெயரையும் தந்துவிட்டது.

இதனால் கரணைத் தேடி வாய்ப்புக்கள் வந்து கொண்டுள்ளன. அந்த வகையில் தீ நகர்என்ற படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். சுபாஷிடம் இயக்குனராக இருந்தவரானதிருமலை என்பவர்தான் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.


கரணுக்கு ஜோடி போடுபவர் உதயதாரா. மையல் கொள்ள வைக்கும் அழகுடன்இருக்கும் உதயதாரா இப்போது கண்ணும் கண்ணும் என்ற படத்தில் பிரசன்னாவுடன்நடித்து வருகிறார்.

தீ நகர், கேரளத்து உதயதாராவுக்கு 2வது படம்.


இவர்கள் தவிர சொர்ணமால்யாவும் படத்தில் இருக்கிறார். படத்தில் சொர்ணாவுக்குமுக்கியமான கேரக்டராம்.

படத்தோட கதை ரொம்ப சிம்பிள். பட்டதாரி இளைஞன் சமூகத்தில் பலபிரச்சினைகளை சந்திக்கிறான். இவற்றை தன்னுடன் படித்த கல்லூரி நண்பர்களோடுசேர்ந்து சரி செய்ய முயலுகிறான். இதுதான் தீ நகர் படத்தின் கதையாம்.


படத்தோடு டைட்டிலே மட்டுமல்ல, படத்திலும் தீ பறக்கும் என்கிறார் கரண்.

பார்ப்போம்.

Read more about: udayatarakaran in thee nagar
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil