»   »  சமத்து உதயதாரா!

சமத்து உதயதாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிளாமரில் கில்லி தண்டா விளையாடி வரும் நாயகிகளுக்கு மத்தியில் உதயதாரா படுவித்தியாசமாக இருக்கிறார்.

கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ள மலையாள உதயதாரா,நட்சத்திர வானில் படு பிரகாசமாக மின்ன ஆரம்பித்துள்ளார். முதல் படம்வெளியாவதற்குள்ளேயே அடுத்தடுத்து நிறையப் படங்களில் புக் ஆகஆரம்பித்துள்ளார் உதயதாரா.

கரணுடன் தீ நகர் உள்ளிட 4 படங்களில் புக் ஆகியுள்ளார் உதயதாரா. தனது பாதைஎப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக வரையறுத்துள்ள உதயதாரா தன்னைத்தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் ஒரே ஒரு கண்டிஷன் போடுகிறாராம் உதயதாரா.

படத்தில் கிளாமர் சுத்தமாக இருக்கப்படாது என்பதுதான் அந்த கண்டிஷன்.

இதனால் குழம்பிப் போகும் தயாரிப்பாளர்களிடம், ஆடை துறைந்துதான் கவர்ச்சிகாட்ட வேண்டும் என்பதில்லை. பார்வையிலும், சிரிப்பிலும், நடையிலும் கூடகவர்ச்சியை வெளிப்படுத்த முடியும். அதுபோல காட்சிகள் வைத்துக் கொள்ளுங்கள்,எனக்கு அப்ஜெக்ஷன் இல்லை என்கிறாராம் உதயதாரா.

கிளாமர் வேண்டாம் என்று உதயதாரா கூறுவதற்கு காரணம், முதல் படமான கண்ணும்கண்ணும் படத்தில் உதயதாராவுக்கு கிளாமர் காட்சிகள் அதிகம் இல்லையாம். அப்படிஇருந்தும் நான்கு படங்கள் தன்னைத் தேடி வந்ததால், கிளாமர் இல்லாமலேயேசரிக்கட்டி விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் உதயதாரா.

கண்ணும் கண்ணும் படத்தில் நடிக்க வந்தபோது உதயதாராவுக்கு தமிழ் சுட்டுப்போட்டாக் கூட வராதாம். ஆனால் இப்போதோ, அம்மணியின் வாயிலிருந்து தமிழ்வார்த்தைகள் முத்து போல உதிர ஆரம்பித்துள்ளதாம். படம் முடிவதற்குள் எழுதப்படிக்க கற்றுக் கொண்டு விடுவேன் என்கிறார் உற்சாகமாக.

சமத்து!...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil