»   »  என்ன கொடுமை ‘ஸ்ருதி’ இது?

என்ன கொடுமை ‘ஸ்ருதி’ இது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலேயே பிறந்து வளர்ந்த நடிகை ஸ்ருதி, இப்போது தான் முதன்முறையாக பக்கத்து ஊரான புதுச்சேரியை நேரில் சென்று பார்த்துள்ளாராம். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதி. பாடகி, இசையமைப்பாளர், நடிகை எனப் பன்முகத் திறமை கொண்ட ஸ்ருதி, தற்போது கமலுடன் சபாஷ் நாயுடு, சூர்யாவுடன் சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Unbelievable ! What Shruti Haasan did for the very first time

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார் ஸ்ருதி.

இந்நிலையில், முதன்முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் புதுச்சேரிக்கு நேரில் சென்றுள்ளாராம். இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், 'சென்னையிலேயே பிறந்து வளர்ந்த நான் இப்போது தான் முதன்முறையாக புதுச்சேரிக்கு செல்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதெல்லாம் பெருமையா.. இல்லை.. கொடுமைம்மா.. கொடுமை!

English summary
A really surprising info that Shruti revealed is that having been born and brought up in Chennai she has never ever visited the neighboring Pondicherry and has gone there for the first time recently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil