யம்மாடி.. பாக்கவே தலை சுத்துதே.. கடற்கரையில் தலைகீழ் ஆசனம்.. மாளவிகா போட்டோஸ்!

சென்னை: 'உன்னைத்தேடி' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகை மாளவிகா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் மீண்டும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறார். கடற்கரை விடுமுறையை கொண்டாடி வரும் அவர், அங்கிருந்து பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

90களின் இறுதி மற்றும் 2000களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக விளங்கிய மாளவிகா. ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, திருட்டு பயலே போன்ற படத்தில் நடித்துள்ளார். தமிழில் படவாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்ற மாளவிகா ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழில், சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார். அதன் பின், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். அதேபோல, சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். பின் படவாய்ப்பு இல்லாததால், சித்திரம் பேசுதடி படத்தில் படத்தில் வாள மீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் பாடலில் ஆடி பட்டையை கிளப்பியிருந்தார்.

malavika photos Yoga
Photo Credit:

நடிகை மாளவிகா: 2007ஆம் ஆண்டு தொழிலபிதி சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவருக்கு, ஆரவ் என்கிற ஒரு ஆண் குழந்தையும் அன்யா என்கிற ஒரு பெண்குழந்தையும் உள்ளனர். நடிகை மாளவிகா திரைப்படங்களில் இருந்து ஓரளவு விலகி இருந்தாலும், சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது இவர் தனது, லைஃப்ஸ்டைல், ஃபிட்னஸ் மற்றும் பயண அனுபவங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தலைகீழாக : முதல் புகைப்படத்தில், படகு மீது மஞ்சள் நிற உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் அமைதியாக அமர்ந்து கடலை ரசிக்கும் மாளவிகா, முழுக்க ரிலாக்ஸ் மூடில் காணப்படுகிறார். அதைத்தொடர்ந்து, கடற்கரையில் நீல நிற ஸ்விம் உடையில் யோகா ஆசனங்களை செய்யும் வீடியோவை வெளியிட்டுளள்ர். அதில், தலைகீழாக நின்று அவர் கொடுத்துள்ள போஸ், அவரது ஃபிட்னஸ் மற்றும் சமநிலையை வெளிப்படுத்துகிறது. கடற்கரை மணலில் யாருடைய துணையும் இல்லால் அவராகவே தலைகீழா இரண்டு கால்களை தூக்கிபடி நின்றுள்ளார். இந்த பார்த்த ரசிகர்கள், இந்த வயசிலும் இப்படி ஒரு யோகாசனமா என அவரது துணிச்சலான இந்த போஸ்டை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X