ஒரு வருடம் டேட்டிங்.. அப்படி ஆகும்னு நினைக்கல.. அட்வான்சை திருப்பி கொடுத்தேன்.. மாளவிகா பேட்டி!
சென்னை: 90கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகையாக இருந்தவர் மாளவிகா. ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றி கொடி கட்டு, திருட்டு பயலே என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து வந்த இவர், திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகினார். அதற்கான காரணத்தை மாளவிகா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், நான் சினிமாவை விட்டு விலகுவேன் என நினைக்கவே இல்லை. ஆனால் சினிமாவை விட்டு விலகும் படி ஆகிவிட்டது. நானும் என் கணவரும் நல்ல நண்பர்களாக தான் முதலில் பழகிக்கொண்டிருந்தேன். எப்போதும் நாங்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்போம். ஆனால், ஒருநாள் திடீரென அவர் என்னை காதலிப்பதாக கூறினார். இதைக்கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், நான் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், அடுத்த நாள், அவருக்கு ஃபோன் செய்து, உண்மையாகவே நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா என கேட்டேன்.

மாளவிகா பேட்டி: அவர் உடனே இல்லை... இல்லை... சும்மா விளையாட்டுக்காக பேசினேன் என சமாளித்தார். அதன் பிறகு நானும் அவரும் ஒரு வருடம் டேட்டிங் பண்ணோம். அதன் பிறகு ஒரு நாள் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என நானே கேட்டேன். உடனே அவரும் விருப்பம் என சொன்னார். உடனே பெற்றோரிடம் சொல்லி நிச்சயதார்த்தமும் நடந்து, 2007ஆம் ஆண்டு திருமணமும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தான் நிற்க கூட நேரமெல்லாம் மிகவும் பிசியாகி விட்டேன். அடுத்தடுத்து படங்கள் கைவசம் இருந்தன. ஆனால், திடீரென கர்ப்பமாகி விட்டதால் மூன்று படத்திற்கு வாங்கிய அட்வான்சை திருப்பிக் கொடுக்கப்படி ஆகிவிட்டது. நான் அதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அப்படி நடந்து விட்டதால் சினிமாவை விட்டு விலக வேண்டியதாகி விட்டது என மாளவிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
LIK படத்தில்: நடிகை மாளவிகா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சூர்யா நடித்த பேரழகன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கும், சித்திரம் பேசுதடி படத்தில் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடலுக்கும் நடனமாடினார். அந்த பாடல் இப்போது வரைக்கும் டிரெண்டிங்கில் உள்ளது. தற்போது மாளவிகா பிரதீப் ரங்கநாதன் நடித்த எல்.ஐ.கே படத்தில் கீர்த்தி ஷெட்டியின் அம்மாவாக நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications