தலைகீழா நின்னு என்ன செய்றார் மாளவிகா..ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த வீடியோ!

சென்னை: தல அஜித்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகை மாளவிகா, தமிழ் திரைப்படங்களைத் தவிர தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி என 5 மொழி படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்த விலகி இருக்கும் இவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

மாடல் அழகியான மாளவிகா தமிழ் , தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1999ம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

Unnai thedi movie heroine malavika vera level workout video trending on social media

நடிகை மாளவிகா: மாநிறமாக இருந்தாலும், வசீகரிக்கும் காந்தக் கண்களும், சற்றேறக்குறைய நடிகை ரோஜாவின் சாயலில் இருப்பவர் தான் நடிகை மாளவிகா. அழகும் திறமையும் இருந்த போதும் அவருக்கு ஏனோ படவாய்ப்பு சரியாக அமையவில்லை.தமிழில் படவாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்ற மாளவிகா ஒரு சில படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.

Unnai thedi movie heroine malavika vera level workout video trending on social media

சூப்பர் ஹிட் பாடல்: சூர்யா நடித்த பேரழகன் படத்தில் அம்புலி மாமா அம்புலி மாமா பாடலுக்கு வந்து சென்றார். இதையடுத்து, வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் படத்தில் வாள மீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் பாடலில் பட்டையை கிளப்பியிருந்தார். இந்த பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

Unnai thedi movie heroine malavika vera level workout video trending on social media

மும்பையில் செட்டில்: இந்த திரைப்படத்தை அடுத்து ஜீவாவுடன் திருட்டுபயலே திரைப்படத்தில் ஒருவித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து 2007ல் சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட மாளவிகா, தற்போது ஜீவாவின் கோல்மால் படத்தில் நடித்துள்ளார்.

Unnai thedi movie heroine malavika vera level workout video trending on social media

பாராட்டும் பேன்ஸ்: இவருக்கு படவாய்ப்பு இல்லை என்றாலும்,இருக்கவே இருக்கும் சோஷியல் மீடியா என இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோஷூட்டுகளை பகிர்ந்து அலப்பறை கொடுத்து வருகிறார். 44 வயதிலும் சும்மா சிக்குனு இருக்கும் மாளவிகா, தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான மாளவிகா உடலை செம ஃபிட்டாக வைத்திருக்கிறார் என்று அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X