Uorfi Javed: எங்களுக்கு ஒரு பீஸ்.. பீட்ஸாவையே ஆடையாக்கிய பிக் பாஸ் பிரபலம்.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
மும்பை: பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த டிவி நடிகை உர்ஃபி ஜாவேத் வெறும் 2 பீஸ் பீட்ஸாவை உடையாக கொண்டு தனது முன்னழகை மறைத்துள்ளார்.
எந்தவொரு பொருளை பார்த்தாலும், அதனை கொண்டு எப்படி ஆடையாக வடிவமைத்து அணியலாம் என்கிற சிந்தனையுடனே அடிக்கடி டிரெண்டாகி வருகிறார் உர்ஃபி ஜாவேத்.
இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள பீட்ஸா உடை போஸுக்கு பலான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
எதை பார்த்தாலும்: பிக் பாஸ் ஓடிடியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த நடிகை உர்ஃபி ஜாவேத் எதை பார்த்தாலும் அதை வைத்து புதிதாக கவர்ச்சி உடையை உருவாக்கி அதை அணிந்து கொண்டு நகர் வலம் சுற்ற கிளம்பி விடுவார்.

பாலிவுட்டில் இவர் என்ன டிரெஸ் போட்டு வருகிறார் என்று பார்க்கவே ஒரு கூட்டம் ரொம்பவே ஆர்வத்துடன் காத்திருக்க தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஃபேமஸ் ஆகி விட்டார் உர்ஃபி ஜாவேத்.
க்ரீன் டீ உடை: சமீபத்தில் க்ரீன் டீ குடித்துக் கொண்டிருந்த உர்ஃபி ஜாவேத். அதிலிருந்த டீ பேக்கை கீழே போடாமல் ஏகப்பட்ட டீ பேக்குகளை ஒன்றாக ஒட்டி உருவாக்கப்பட்ட உடையை அணிந்து கொண்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இந்நிலையில், அதை விட அடுத்தக் கட்டத்திற்கு சென்று பீட்சா உடையை உருவாக்கி போஸ் கொடுத்து லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகிறார்.
முதுகு சொரியும் குச்சி: கை போன்ற டிசைன் கொண்ட முதுகு சொரியும் குச்சி இரண்டையும் வைத்துக் கொண்டு மேலாடை அணியாமல் தனது இரு மார்பகங்களையும் மறைத்தபடி பிடித்துக் கொண்டு ஆபாசத்தின் உச்சமாக எடுக்கப்பட்ட வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பகீர் கிளப்பி இருந்தார் உர்ஃபி ஜாவேத்.
இந்நிலையில், 2 பீஸ் பீட்ஸாக்களை மேலாடையாக மாற்றி நடிகை உர்ஃபி ஜாவேத் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட ஆரம்ப்த்துள்ளனர். மேலும், எங்களுக்கு ஒரு பீட்ஸா என விவகாரமான கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











