Uorfi Javed: ரெண்டே ரெண்டு ஹார்ட் ஸ்டிக்கர் தான் டிரெஸ்ஸா.. எல்லை மீறிய பிக் பாஸ் பிரபலம்!
மும்பை: பிக் பாஸ் ஓடிடி சீசன் 2 தற்போது ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முன்னதாக ஒளிபரப்பான பிக் பாஸ் ஓடிடி முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட உர்ஃபி ஜாவேத் இணையத்தில் படு ஆபாசமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு திணறடித்து வருகிறார்.
வேஸ்ட்டான பொருட்களை டிரெஸ்ஸாக்கி போட்டுக் கொள்வது போல ஃபேஷன் துறையில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை ரொம்ப அதிகமாகவே காட்டி வருகிறார் உர்ஃபி ஜாவேத்.

டாப்லெஸ் ஆகவும், மோசமான உடைகளையும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வந்த உர்ஃபி ஜாவேத் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் இரண்டு ஹார்ட்டின் ஸ்டிக்கரை மட்டும் மார்பக பகுதிகளில் ஒட்டிக் கொண்டு வெளியே சுற்றி வருகிறார்.
ஆடையான ஹேண்ட்பேக்: டிவி சீரியல் நடிகையான உர்ஃபி ஜாவேத் இளம் வயதிலேயே தனது தந்தையின் அடி தாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடி மும்பைக்கு வந்து விட்டார். தினமும் பயன்படுத்தும் பொருட்களை எப்படி டிரெஸ்ஸாக மாற்றி அணிந்து போஸ் கொடுப்பது என்கிற வித்தையை கற்றுக் கொண்ட உர்ஃபி ஜாவேத் போட்டோக்களை ஆடையாக்கியும், க்ரீன் டீ பேக்கை ஆடையாக்கியும், நகங்கள், வாட்ச்கள், பீட்ஸா என பல பொருட்களை டிரெஸ்ஸாக மாற்றி அணிந்து கொண்டு வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில், ஹேண்ட் பேக் ஒன்றை அப்படியே ஆடையாக மாற்றிக் கொண்டு அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் தீயாக பரவியது. ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் உர்ஃபி ஜாவேத்தின் அந்த பலே ஐடியாவுக்கு குவிந்தது.
ஹார்ட்டின் ஸ்டிக்கர்: இந்நிலையில், அதை விட மோசமாக வெறும் ரெண்டே ரெண்டு ஹார்ட்டின் ஸ்டிக்கரை வைத்து தனது முன்னழகை மறைத்தபடி உருவாக்கப்பட்ட உடையை அணிந்து கொண்டு உர்ஃபி ஜாவேத் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது.
இதே உடையை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கும் ஜிம் உள்ளிட்ட இடங்களுக்கும் உர்ஃபி ஜாவேத் சென்றுள்ள வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளன. உர்ஃபி ஜாவேத்தின் இந்த போல்ட்னஸை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், உனக்கு வேற வேலையே இல்லையாம்மா என நெட்டிசன்கள் வழக்கம் போல கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











