படம் பார்க்க வரீங்களா.. இல்லை படம் காட்ட வரீங்களா.. பிவிஆருக்கு அப்படியொரு உடையில் வந்த உர்ஃபி!

மும்பை: இந்தி டிவி சீரியல் நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான உர்ஃபி ஜாவேத் தனது அதீத கவர்ச்சி உடைகளால் சோஷியல் மீடியா சென்சேஷன் ஆகி வருகிறார்.

உள்ளாடை அணியாமல் சமீபத்தில் படு கவர்ச்சியான உடை அணிந்து வந்த உர்ஃபி ஜாவேத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அவர்கள் மீது ஆவேசமாக பாய்ந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், பிவிஆர் தியேட்டருக்கு உள்ளாடைகள் வெளியே தெரியும்படி ரொம்பவே மோசமாக உடை அணிந்து படம் பார்க்க வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

டிவி நடிகை

டிவி நடிகை

கடந்த 2016ல் சோனி டிவியில் ஒளிபரப்பான படே பையா கி துல்ஹனியா எனும் டிவி தொடர் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் உர்ஃபி ஜாவேத். சந்திர நந்தினி, மெரி துர்கா, ஜீஜி மா, தாயன் உள்ளிட்ட ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து வந்த உர்ஃபி ஜாவேத் சமீப காலமாக ஹாட் உடைகளை அணிந்து கொண்டு சோஷியல் மீடியாவையே மெர்சலாக்கி வருகிறார்.

பிக் பாஸ் ஓடிடி

பிக் பாஸ் ஓடிடி

பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகு தான் உர்ஃபி ஜாவேத் உடையணிவதில் இத்தனை வித்தியாசங்களை காட்டத் தொடங்கி உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து கழுவி ஊற்றி வருகின்றனர். படு மோசமாக உடை அணிந்து இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களையும் ரீல் வீடியோக்களையும் பதிவிட்டு ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்து வருகிறார்.

செய்தியாளர்களுடன் சண்டை

செய்தியாளர்களுடன் சண்டை

பிரபலங்களை புகைப்படம் எடுக்கும் செய்தியாளர்களில் சிலர் சமீபத்தில் நடிகை நிகழ்ச்சி ஒன்றுக்கு அணிந்து வந்த படு மோசமான உடையை பார்த்து கமெண்ட் அடிக்க, உடனடியாக அவருடன் வம்புக்கு சென்று என் உடையை பற்றியெல்லாம் கமெண்ட் செய்யக் கூடாது என பெரிய சண்டையே போட்டு இருந்தார்.

பிவிஆருக்கு இப்படியா வருவது

பிவிஆருக்கு இப்படியா வருவது

இந்நிலையில், சமீபத்தில் பிவிஆர் தியேட்டரில் புதிய படம் பார்க்க வந்த உர்ஃபி ஜாவேத் கிராப் டாப் அணிந்து கொண்டு உள்ளாடை தெரிய கவர்ச்சி தரிசனம் கொடுத்து ரசிகர்களை பதற செய்திருந்தார். மேலும், சூப்பர் மேன் போல பேன்ட்க்கு மேலே ஜட்டி தெரிய அவர் கொடுத்த ஹாட் போஸ் நெட்டிசன்களை ட்ரோல் செய்ய வைத்திருக்கிறது.

நல்லா படம் காட்டுறீங்க

நல்லா படம் காட்டுறீங்க

பிவிஆருக்கு படம் பார்க்க வந்தது போல தெரியல, நல்லா படம் காட்ட வந்ததை போலத் தெரிகிறது என உர்ஃபி ஜாவேத்தின் போட்டோக்களை போட்டு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். எல்லை மீறி பொது இடங்களுக்கு இவ்வளவு ஆபாசமாக வரும் இவரை யாருமே தடுக்க மாட்டார்களா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X