பின்னாடி அடிவாங்கியே பிரபலமாகிட்டாரே.. கியாரா அத்வானியை ஓரங்கட்டிய ஊர்வசி ரவுத்தேலா.. 105 கோடியா?

ஹைதராபாத்: இந்த ஆண்டு சங்கராந்திக்கு டோலிவுட்டில் கியாரா அத்வானி, மீனாட்சி சவுத்ரி மற்றும் ஊர்வசி ரவுத்தேலா உள்ளிட்ட நடிகைகளின் கவர்ச்சி போட்டி கன்னாபின்னாவென இருந்தது. ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் படத்தில் பாடல்களில் கியாரா அத்வானி அணிந்து நடித்த காஸ்ட்யூம்களுக்கான தொகையிலேயே லப்பர் பந்து போன்ற படங்களையே எடுத்திருக்கலாம் எனக்கூறுகின்றனர்.

விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து மன உளைச்சலுக்கு ஆளான மீனாட்சி சவுத்ரி இந்த சங்கராந்திக்கு சங்கராந்தி வஸ்துனம் என சீனியர் நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக மாறிவிட்டார். அவருக்கும் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை என்றும் ரசிகர்களையும் மீனாட்சி சவுத்ரி கவரவில்லை என்றும் கூறுகின்றனர்.

urvashi rautela daaku maharaaj balakrishna

கடந்த ஆண்டு சங்கராந்திக்கு மகேஷ் பாபுவின் ஸ்ரீலீலா படத்தில் எப்படி டம்மி ரோலில் வந்தாரோ அதே கதை தான் இந்த ஆண்டும் என கலாய்த்து வருகின்றனர்.

105 கோடி ஊர்வசி ரவுத்தேலா: பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தமிழில் லெஜண்ட் சரவணா நடித்த தி லெஜண்ட் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், தமிழில் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

urvashi rautela daaku maharaaj balakrishna

அந்த படமும் ட்ரோல் மெட்டீரியலாக மாற தெலுங்கிற்கு சென்ற ஊர்வசி ரவுத்தேலா தற்போது 105 கோடி ரூபாய் ஹீரோயின் என #Urvashi105Crore ஹாஷ்டேக்கை பாலிவுட் முதல் டோலிவுட் வரை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

urvashi rautela daaku maharaaj balakrishna

பாலகிருஷ்ணாவை விடுங்க: பாபி கொலி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தேலா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்த டாக்கு மகராஜ் திரைப்படம் பொங்கல் பந்தயத்தில் 3 நாட்களில் 105 கோடி வசூல் தாண்டியதாக ஊர்வசி ரவுத்தேலாவே போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ள நிலையில், பாலகிருஷ்ணாவை விடுங்க ஊர்வசியை பார்க்கத்தான் ரசிகர்கள் தியேட்டருக்கு போறாங்க என சோஷியல் மீடியாவே குதூகலம் ஆகியுள்ளது.

urvashi rautela daaku maharaaj balakrishna

கியாரா அத்வானியை ஓரங்கட்டிவிட்டார்: ராம் சரணுக்கு ஜோடியாக நடித்த கியாரா அத்வானியை இந்த சங்கராந்திக்கு டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடவில்லை என்றும் ஊர்வசி ரவுத்தேலா தான் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார் என்றும் ஏகப்பட்ட ட்வீட்டுகளும் ஊர்வசி ரவுத்தேலாவின் கவர்ச்சி புகைப்படங்களும் இணையத்தில் வலம் வருகின்றன. தனக்கு கிடைத்த வெற்றிக்கு ரசிகர்க்ளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஊர்வசி ரவுத்தேலா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X