For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கிராமர் மிஸ்டேக்கை கூட சரிபண்ணாம அப்படியே ஈயடிச்சான் காப்பி.. பிரபல ஹீரோயினை வசமாக விளாசிய ஃபேன்ஸ்!

  By
  |

  மும்பை: தனது ட்விட்டை, பிரபல நடிகை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து பதிவிட்டதால் எழுத்தாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

  இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  மேலாடையை கழட்டி வீடியோ போட்ட ஊர்வசி.. ஆபாச படத்துல நடிக்கிறீங்களா என வெளுத்த நெட்டிசன்கள்!மேலாடையை கழட்டி வீடியோ போட்ட ஊர்வசி.. ஆபாச படத்துல நடிக்கிறீங்களா என வெளுத்த நெட்டிசன்கள்!

  ஊர்வசி ரவ்தெலா

  ஊர்வசி ரவ்தெலா

  இதனால், நடிகர், நடிகைகளில் சிலர் வீட்டில் இருந்தபடி, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களில் வீடியோ மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ஊர்வசி ரவ்தெலா, கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்த பிகினி ஸ்டில் வைரலானது.

  பகல்பந்தி

  பகல்பந்தி

  இவர், 'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரபல மாடல் ஊர்வசி ரவ்தெலா. இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

  காப்பி பேஸ்ட்

  காப்பி பேஸ்ட்

  இவர், தனது சமூக வலைத்தளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடிப்பது வழக்கம். இந்நிலையில் இவர் பிரபல அமெரிக்க எழுத்தாளரின் ட்விட்டை அப்படியே காப்பியடித்து பதிவிட்டதாதாக பரபரப்பு சர்ச்சை கிளம்பி இருக்கிறது, சமூக வலைத்தளங்களில்.

  பாரசைட்

  நியூயார்க்கை சேர்ந்த எழுத்தாளர் ஜேபி பிரம்மெர். இவர் சமீபத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற கொரிய திரைப்படமான 'பாரசைட்' பற்றி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் சில ஆங்கில இலக்கணப் பிழைகள் இருந்தன. அதைக் கூட சரி பண்ணாமல், அதை அப்படியே காப்பி செய்து தனது கருத்துபோல் பதிவிட்டுள்ளார், நடிகை ஊர்வசி ரவ்தெலா.

  கிராமர் மிஸ்டேக்

  இதைக் கண்டுபிடித்து ஒருவர் இரண்டையும் அருகருகே வைத்து பதிவிட்டிருந்தார். மற்றவர்களின் ட்வீட்டை காப்பி பேஸ்ட் பண்ணும்போது, குறைந்தபட்சம் கிராமரையாவது சரி பண்ணியிருக்கலாம்?' என்று அவர் கூறியிருந்தார். இதை டேக் செய்து பதிவிட்டுள்ள எழுத்தாளர் ஜேபி பிரம்மெர், ஏன் அவர் என் கிராமர் மிஸ்டேக்கை சரி செய்யவில்லை. என் மோசமான கிராமரை? அதுவும் அதிர்வின் ஒரு பகுதியா? என்று கிண்டலாகக் கேட்டுள்ளார்.

  முதன்முறை இல்லை

  முதன்முறை இல்லை

  இதையடுத்து ரசிகர்கள் அவரை கண்டபடி விளாசி வருகின்றனர். 'இப்படியொரு பப்ளிசிட்டி தேவையா? என்று சிலர் கேட்டுள்ளனர். ஊர்வசி இப்படி, ட்விட்டர் பதிவை அப்படியே காப்பி அடிப்பது இது முதன்முறை இல்லை. ஏற்கனவே, நடிகை ஷபானா ஆஸ்மி விபத்தில் காயமடைந்தபோது, பிரதமர் மோடி ஜனவரி மாதம் போட்ட ட்வீட்டையும் அப்படியே காபி பேஸ்ட் செய்து தனது ட்வீட்டாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

  English summary
  Urvashi Rautela copy-pastes US writer’s tweet on Parasite, he asks, ‘why didn’t she at least correct the grammar?’
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X