5 கோடி.. இனி நீங்க ஜிம்முக்கும் போகலாம்.. கிளாமராவும் டிரெஸ் பண்ணலாம்.. ஊர்வசியை கொண்டாடும் ஃபேன்ஸ்!
மும்பை: பாலிவுட்டின் ஹாட் குயின் ஊர்வசி ரவுத்தேலா ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
மும்பையிலும் லாக்டவுன் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வு செய்யப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேல் ஊரடங்கு அமலில் இருந்ததால், பிரபலங்கள் யாரும் வெளியேறாமல் இருந்த நிலையில், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தலை காட்டத் துவங்கி உள்ளனர்.

ஜிம் போட்டோ
இந்நிலையில், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவுத்தேலா, படு கவர்ச்சியாக உடலை ஒட்டியபடி செம ஃபிட்டாக ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், தன்னைப் போலவே தனது ரசிகர்களும் உடல் ஆரோக்கியத்தை அனைவரும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

குவிகிறது பாராட்டு
செம செக்ஸியாக ஊர்வசி ரவுத்தேலா போட்டோ போட்டாலும், இந்த முறை அவரது கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்யாமல் பாராட்டி வருகின்றனர். எல்லாத்துக்கும் காரணம் கொரோனா நிவாரண நிதியாக ஊர்வசி ரவுத்தேலா கொடுத்த 5 கோடி ரூபாய் தானாம்.

என்ன வேணா பண்ணுங்க
இனி நீங்க ஜிம்முக்கு போகலாம்.. எப்படி வேணாலும் கவர்ச்சியா டிரெஸ் பண்ணலாம்.. நாங்க யாரும் உங்களை கலாய்க்கவோ, திட்டவோ மாட்டோம். மக்களுக்காக இத்தனை கோடி ரூபாயை பாலிவுட்டின் முன்னணி நடிகைகளே வழங்க வராத நிலையில், நீங்க கொடுத்திருப்பது சூப்பர் என ரசிகர்கள் ஊர்வசி ரவுத்தேலாவை கொண்டாடி வருகின்றனர்.

பீச் பிரியை
பீச் மற்றும் நீச்சல் குளம் என்றால் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு கொள்ளை இஷ்டம். நாடு முழுவதும் வரும் மே 17க்கு பிறகு லாக்டவுன் முற்றிலுமாக நீக்கப்படும் என்றே தெரிகிறது. அப்படி லாக்டவுன் நீக்கப்பட்டால், முதல் வேலையாக பீச்சுக்கு சென்று பிகினியில் உங்க புதிய புகைப்படங்களை பதிவிடுங்கள் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் இஷ்டத்துக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அள்ளுது லைக்ஸ்
நடிகை ஊர்வசி ரவுத்தேலா சுமார் 2 மணி நேரத்துக்கு முன்பு பதிவிட்ட இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு 3 லட்சத்திற்கும் மேலான பாலிவுட் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். ஊர்வசி ரவுத்தேலாவின் தாராள மனசையும், உதவும் மனப்பான்மையையும் பாராட்டியே பல ஆயிர கமெண்ட்டுகள் குவிந்து கிடக்கின்றன.


Click it and Unblock the Notifications











