கடவுள் போய் சூறாவளி ஆகிட்டாங்க போல.. வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலாவின் தாறுமாறு வீடியோ!
மும்பை: படு கவர்ச்சியான உடையில் ஸ்லோ மோஷனில் நடைபோடும் ஊர்வசி ரவுத்தேலாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
லாக்டவுன் நேரத்தில் வீட்டில் இருந்தபடியே படுகவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களுக்கு தினமும் ஹாட் விருந்து வைத்து வருகிறார்.
கடந்த 2013ல் வெளியான சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா.

கடவுள் என அழையுங்கள்
இந்த லாக்டவுனில் வீட்டில் ரொம்ப போர் அடிக்கிறது என்றால், ஒருமுறை ஊர்வசி ரவுத்தேலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு போய் பார்த்துட்டு வாங்க, அப்புறம் போரே அடிக்காது. அந்த அளவுக்கு அழகு கவர்ச்சி பொங்கும் புகைப்படங்களை களமிறக்கி வருகிறார். சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் தன்னை கடவுள் என அழைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.

இப்போ சூறாவளி
சில நாட்கள் முன்னதாக தன்னை பெண் கடவுள் என அழைக்க வேண்டும் என கேப்ஷன் போட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதால், தற்போது, சூறாவளி ஊர்வசி ரவுத்தேலா களம் இறங்கிட்டாருன்னு, தனக்குத் தானே பப்ளிசிட்டி படுத்திக் கொள்ளும் அளவுக்கு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
ஏற்கனவே பிலிம்ஃபேர் விருதை போல கருப்பு உடையில், உச்சக்கட்ட கவர்ச்சியைக் காட்டி ஊர்வசி ரவுத்தேலா பதிவிட்ட போட்டோ இணையத்தை இந்த ஏப்ரல் வெயிலை விட அதிகமாகவே சூடாக்கியது. இந்நிலையில், மொத்த அழகும் அப்படியே தெரியும் வண்ணம் கருப்பு நிற கிளிட்டர் உடையில் நடந்து வரும் வீடியோவை போட்டு, நெட்டிசன்களை வாயை பிளக்க வைத்துள்ளார்.

விர்ஜின் பானுப்பிரியா
கடந்த ஆண்டு ஜான் ஆபிரகாம், இலியானா, ஊர்வசி ரவுத்தேலா நடிப்பில் வெளியான பாகல் பன்ட்டி திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடி வரை பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் செய்து சாதனை படைத்தது. அடுத்ததாக அஜய் லோகன் இயக்கத்தில் விர்ஜின் பானுப்பிரியா எனும் விவகாரமான படத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடிக்க உள்ளார்.

அழகுப் புயல்
இப்படி இஷ்டத்துக்கு பிகினி உடையணிந்து கவர்ச்சி காட்டி நடித்தாலும், ஊர்வசி ரவுத்தேலாவின் அழகுக்கு 25 மில்லியன் ரசிகர்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களாக இருப்பதற்கு காரணம் அவரது பேரழகு தான். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை என்றாலும், தனது கவர்ச்சிப் புயலால் பாலிவுட் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் ஊர்வசி.


Click it and Unblock the Notifications











