முதன் முதலாக கிளாமர் இல்லாத கேரக்டர்.. தமிழ் ரீமேக்கில் நடிக்கும் பிரபல ஹீரோயின் மகிழ்ச்சி!

By

மும்பை: தமிழ் படத்தின் ரீமேக்கில் முதன்முறையாக கிளாமர் இல்லாத கேரக்டரில் நடிக்கிறேன் என்று பிரபல ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

சுசி கணேசன் இயக்கி தமிழில் ஹிட்டான படம், திருட்டுப் பயலே 2. இதில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, ரசிகர்களால் பேசப்பட்டது. இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

ஊர்வசி ரவ்தெலா

ஊர்வசி ரவ்தெலா

தமிழில் இயக்கிய சுசி கணேசன், இந்தியில் தயாரித்து இயக்குகிறார். பாபி சிம்ஹா நடித்த கேரக்டரில் வினீத்குமார் சிங், அமலா பால் கேரக்டரில் ஊர்வசி ரவ்தெலா, பிரசன்னா நடித்த கேரக்டரில் அபிஷேக் ஓபராய் நடிக்கின்றனர். தமிழில், சுசி கணேசன் நடித்த கேரக்டரில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார்.

லாக்டவுன்

லாக்டவுன்

இதன் ஷூட்டிங் லக்னோ மற்றும் வாரணாசியில் நடந்துள்ளது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் ரிலீஸ், லாக்டவுன் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில், முதன் முறையாக கிளாமர் இல்லாத கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார், நடிகை ஊர்வசி ரவ்தெலா. அவர் கூறியிருப்பதாவது:

எனக்கே வித்தியாசம்

எனக்கே வித்தியாசம்

நான் காமெடி, திகில், ரொமான்டிக் படங்களில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிக்கிறேன். இது எனக்கே வித்தியாசமாக இருந்தது. மற்ற படங்களில் என்னை பார்த்ததை விட, இதில் குர்தா, சேலை அணிந்தே நடித்திருக்கிறேன். கிளாமர் இல்லாத கேரக்டர். ஷூட்டிங், வாரணாசி, லக்னோவில் நடந்தது. இது தமிழில் ஹிட்டான படம்.

நம்பிக்கை அதிகம்

நம்பிக்கை அதிகம்

இந்தப் படத்தின் கதை எல்லா மொழிக்குமானது. இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் இந்தக் கதையை தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். உலகில் எந்த பகுதியிலும் இந்தப் படத்தை உருவாக்கலாம். இந்தி ரசிகர்களும் இந்தப் படத்தை வரவேற்பார்கள் என நம்புகிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் இந்த விஷயத்தை கவனிக்கிறேன்.

இயக்குனர் சுசி கணேசன்

இயக்குனர் சுசி கணேசன்

என் மீது நான் வைத்துள்ளதை விட, என் மீது இயக்குனர்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக இருக்கிறேன். இயக்குனர் சுசி கணேசனும் என் மீது அதுபோன்ற நம்பிக்கை வைத்தே நடிக்க வைத்துள்ளார். இவ்வாறு நடிகை ஊர்வசி ரவ்தெலா கூறியுள்ளார்.

ஷார்ட்கட் ரோமியோ

ஷார்ட்கட் ரோமியோ

இவர், சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். அடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட் ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். 'திருட்டுப் பயலே' படத்தை, ஷார்ட்கட் ரோமியோ என்ற பெயரில் இந்தியில் தயாரித்து, ரீமேக் செய்திருந்தார் சுசி கணேசன். இதில் பிரபல இந்தி நடிகை அமிஷா படேல், நீல் நிதின் முகேஷ் நடித்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X