பாத்ரூம் வீடியோவை தொடர்ந்து லீக்கான போன் கால்.. உச்சகட்ட அதிர்ச்சியில் ஊர்வசி ரவுத்தேலா!
மும்பை: லெஜண்ட் சரவணா ஹீரோவாக நடித்த தி லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா அவரது பாத்ரூம் வீடியோ சோஷியல் மீடியாவில் லீக்கான நிலையில், அடுத்ததாக தற்போது தனது மேனேஜருடன் நடிகை பேசும் ஆடியோ ஒன்றும் லீக்காகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2013 ஆம் ஆண்டு வெளியான சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அந்தப் படத்தை தொடர்ந்து கன்னடத்தில் வெளியான மிஸ்டர் ஐராவத் படத்தில் நடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

பாக் ஜானி, சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில், ஹேட் ஸ்டோரி 4, வெர்ஜின் பானுப்பிரியா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த ஊர்வசி ரவுத்தேலா 2022 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தி லெஜன்ட் படத்தில் நடித்திருந்தார்.
கிரிக்கெட் வீரருடன் சண்டை: பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் முன்னாள் காதலி என கிசுகிசுக்கப்பட்ட இவர், மறைமுகமாக சோஷியல் மீடியா சண்டையை போட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாத்ரூம் வீடியோ லீக்: 30 வயதான இளம் நடிகை ஊர்வசி ரவுத்தேலா படங்களிலேயே கவர்ச்சியான உடைகளை அணிந்து நடித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். சனம் ரே படத்தின் பாடல் காட்சியில் டாப்லெஸ்ஸாக இவர் குளிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில், லேட்டஸ்டாக இவரது பாத்ரூம் வீடியோ ஒன்று ரிலீசாக இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
போன் கால் லீக்: அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இது ஏதோ புரமோஷனல் ஸ்டன்ட் என்றும் சீப் பப்ளிசிட்டியை ஊர்வசி ரவுத்தேலா ஆரம்பித்து விட்டார் என்றும் விளாசி வரும் நிலையில், தனது வீடியோ எப்படி லீக்கானது என்றும் உடனடியாக இணையத்திலிருந்து அதை தூக்க நடவடிக்கை எடுங்க என தனது மேனேஜரை விளாசும் ஆடியோ ஒன்றும் தற்போது லீக்காகி இருக்கிறது.
தொடர்ந்து டார்கெட்: நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் பிரைவசிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் தொடர்ந்து அவரை டார்கெட் செய்து அவரது பாத்ரூம் வீடியோ, போன் கால் என அனைத்தையும் லீக் செய்து வருகின்றனர் என்றும் ஊர்வசி ரவுத்தேலாவுக்கு சைபர் செக்யூரிட்டி கொடுக்க வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











