கேப்ஷன்லாம் நல்லாதான் இருக்கு...முதல்ல டிரெஸ்சை போடுங்க... பிரபல ஹீரோயினை விளாசும் நெட்டிசன்ஸ்!
மும்பை: நடிகை ஊர்வசி ரவ்தெலா பிங்க் நிற உடை அணிந்து வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரபல மாடல் ஊர்வசி ரவ்தெலா. இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ரிஷப் பன்ட் காதலி
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ரிஷப் பன்ட்டை இவர் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை என்று ஊர்வசி மறுத்தாலும் இந்த கிசு கிசு பாலிவுட்டில் தொடர்ந்து பரவி வருகிறது. இவர், தனது சமூக வலைத்தளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடிப்பது வழக்கம்.

பிகினி போட்டோ
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பக்க கால் முழுவதும் தெரியும்படி, உடையை உடுத்தி பரபரப்பைக் கிளப்பி இருந்தார். அதை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். சிலர் அவரை செக்ஸியாக வர்ணித்திருந்தனர். அந்த போட்டோ வைரலானது. இந்நிலையில் இப்போது புதிய பிகினி போட்டோவை இப்போது வெளியிட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ், இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டி இருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
விமர்சனம்
ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நடிகர், நடிகைகளில் சிலர் வீட்டில் இருந்தபடி, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை தங்கள் சமூக வலைத்தளப்பக்கங்களில் வீடியோ மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஊர்வசி ரவ்தெலா, பிகினி உடையை வெளியிட்டு இருப்பதை ரசிகர்கள் சிலர் விமர்சித் துள்ளனர்.

கிருமிகளை அல்ல
இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, 'புன்னகையை பரப்புங்கள், கிருமிகளை அல்ல' என்று குறிப்பிட்டுள்ளார். 'நாடு லாக் டவுன்ல அடங்கி போய் கிடக்கு, இந்த நேரத்துல இப்படியொரு போட்டோ தேவையா?' என்று சிலர் கேட்டுள்ளனர். இன்னும் சிலர், இதுதான் புன்னகையை பரப்புற வழியா? என்று கிண்டலடித்துள்ளனர். இன்னும் சிலர், கேப்ஷன்லாம் நல்லாதான் இருக்கு...முதல்ல துணிய உடுத்திட்டு நில்லுங்க' என்று கூறியுள்ளனர்.

நீங்கதான் அழகு
'இது பழைய போட்டோ, இதை ஏன் இப்ப போஸ்ட் பண்ணணும்? என்று சிலர் விளாசி யுள்ளனர். 'உங்ககிட்ட ஏற்கனவே பிங்க் கலர்ல ஒரு பிகினி போட்டோ இருக்குமே, அதை போஸ்ட் பண்ணுங்க என்று சிலர் கேட்டுள்ளனர். 'இந்த உலகத்துலயே நீங்கதான் அழகு என்றும் உங்கள் முன் மலர்கள் கூட தோற்றுப்போகும் என்று சிலரும் சிலர் ஆபாசமாகவும் வர்ணித்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











