6 நாளில் 1000 கோடி வசூல்.. அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கொடுங்கன்னு சொல்லும் பாலிவுட் ஹீரோயின்!

மும்பை: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் வெறும் ஆறு நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை வெளியான எந்த ஒரு படமும் முதல் வாரத்திலேயே ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனையை படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கே ஜி எஃப் 2, ஜவான், பதான், தங்கல் மற்றும் இந்த ஆண்டு வெளியான கல்கி 2898 ஏடி என இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படங்கள் எத்தனை நாட்களில் வசூல் செய்தன என்றும் புஷ்பா 2வின் புல்லட் வேக பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை எப்படி இருந்தது என ரசிகர்கள் #PUSHPA2HitsFastest1000Cr ஹாஷ்டேக்கை டிரெண்டு செய்து வருகின்றன்ர்.

pushpa 2 allu arjun urvashi rautela

இந்நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தெல்லா தனது instagram பக்கத்தில், வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

6 நாளில் 1000 கோடி: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் முதல் பாகம் அளவுக்கு இல்லை என்றும் சுமாரான திரை கதையை சுகுமார் எடுத்து வைத்து சொதப்பியுள்ளார் என கடுமையான விமர்சனங்கள் குவிந்தாலும் ரசிகர்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த கங்கம்மா போர்ஷனை மட்டுமே தியேட்டரில் பார்த்து சாமி வந்தது போல ஆட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

1000 கோடி வசூல் செய்த படங்கள்: ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை வசூல் செய்து இந்திய சினிமாவை அதிர வைத்தது. கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர் மற்றும் இந்த ஆண்டு வெளியான கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்கள் 16 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையை சாதித்தன. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் 18 நாட்களிலும், பதான் திரைப்படம் 27 நாட்களிலும் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன. ஆனால், அதிரடியாக அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் 6 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும், திரைத்துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

pushpa 2 allu arjun urvashi rautela

2வது தேசிய விருது கொடுங்க: ஒட்டுமொத்த தேசமே புஷ்பா 2 திரைப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், லெஜெண்ட் சரவணா நடிப்பில் உருவான லெஜன்ட் படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா சமீபத்தில் புஷ்பா 2 திரைப்படத்தை திரையரங்குக்கு சென்று பார்த்த வீடியோவை ஷேர் செய்து, அதில் இரண்டாவது முறையாக அவருக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அல்லு அர்ஜுன் படத்தில் ஒரு ஐட்டம் பாடலாவது ஊர்வசி ரவுத்தேலா ஆட வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

pushpa 2 allu arjun urvashi rautela

ராம்சரணுக்கு நெருக்கடி: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில், புஷ்பா 2 வசூலை முந்த வேண்டும் என்கிற நெருக்கடி அந்த படத்துக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் இப்போதே அல்லு அர்ஜுன் ரசிகர்கள் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X