60 கிலோ எடையை தூக்கிக் கொண்டு.. 500 ரெப்ஸ் அடிக்கும் பிரபல நடிகை.. வேற லெவல் வொர்க்கவுட் வீடியோ!

சென்னை: டோட்டலாக தென்னிந்தியா பக்கம் திரும்பி உள்ள பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் வெறித்தனமான வொர்க்கவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் பிரம்மாண்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ள ஊர்வசி ரவுத்தேலாவின் இப்படியொரு வொர்க்கவுட் வீடியோவை பார்த்து பலரும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்துள்ளனர்.

திருட்டுப் பயலே இந்தி ரீமேக்கிலும் பிசியாக நடித்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது

தேசிய விருது

சமீபத்தில் மகராஷ்ட்ரா ஆளுநர் கைகளால் ஸ்ரீசக்தி தேசிய விருதை வென்றார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. கவர்ச்சி நடிகையாக சினிமாவில் கலக்கி வரும் இவர், பொது சேவை செய்வதிலும் அதிகளவில் தன்னை ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் படத்தில்

லெஜண்ட் படத்தில்

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நாயகனாக அறிமுகமாவுள்ள பிரம்மாண்ட படத்தில் இவர் தான் நாயகி. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள அந்த படத்தில் லெஜண்ட் எனும் பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாம். படத்திற்கும் லெஜண்ட் என்றே டைட்டில் வைக்கப்பட வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

செம்ம ஹாட்டாக வீடியோ வெளியிட்ட ஊர்வசி ரவ்தெலா .. இன்ஸ்டாவில் ஹார்ட் விட்டுத் தள்ளிய ரசிகர்கள் - வீடியோ
வெறித்தனமான உடற்பயிற்சி

வெறித்தனமான உடற்பயிற்சி

தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. குறிப்பாக பாலிவுட் நடிகைகளுக்கு நல்ல ஆப்ஸ் இருந்தால் தான் படத்தில் சான்ஸே எனும் நிலையில் அதிக அளவு ஆப்ஸ்க்கு வொர்க்கவுட் செய்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா.

500 ரெப்ஸ்

60 கிலோ எடை கொண்ட வெயிட் லிஃப்ட் ராடை பிடித்துக் கொண்டு ஒரு முறை ஆப்ஸ்க்கான உடற்பயிற்சி செய்தாலே அண்டசராசரமும் ஆட்டம் கண்டு விடும். இதில், இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகா சிங் போல 500 தடவை இப்படி வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து அனைவரையும் வியர்க்க வைத்துள்ளார் ஊர்வசி.

திருட்டுப் பயலே

திருட்டுப் பயலே

இயக்குநர் சுசி கணேசன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா நடிப்பில் வெளியான திருட்டுப் பயலே படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. தற்போது அந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். தெலுங்கில் பிளாக் ரோஸ், தமிழில் லெஜண்ட் சரவணா படம் மற்றும் இந்தியில் திருட்டுப் பயலே ரீமேக் என செம பிசியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X