'உங்க வீட்டுல வேலைக்குச் சேர்த்துக்கோங்களேன், ப்ளீஸ்..' பிரபல நடிகையிடம் கெஞ்சும் பாசக்கார ரசிகர்!

By

மும்பை: உங்க வீட்டுல என்னை வேலைக்காரனா சேர்த்துக்கோங்க என்று ரசிகர் ஒருவர் பிரபல நடிகையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்தியாவிலும் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நிவாரண நிதி

நிவாரண நிதி

இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடிவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதை எதிர்த்து போராடவும் உதவி செய்யவும் பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் உதவிகளை வழங்கி வரும் நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவும் வழங்கினார்.

அனைவரும் உதவுங்கள்

அனைவரும் உதவுங்கள்

அவர், ரூ.5 கோடி நிதி வழங்கி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். டிக்டாக்கில் ஜூம்பா, உடற்பயிற்சி வகுப்புகளை இலவசமாகக் கற்றுக் கொடுத்து அதன் மூலமாக 5 கோடி ரூபாய் திரட்டி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதோடு, 'எந்த உதவியும் சின்ன உதவியில்லை. அனைவரும் உதவுங்கள்' என்று கூறியிருந்தார்.

புதிய போட்டோ

புதிய போட்டோ

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டு வருபவர் ஊர்வசி ரவ்தெலா. அதற்காகவே பல ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் இப்போது புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்தப் போட்டோவை ரசிகர்கள் பலர் லைக் செய்துள்ளனர்.

இதற்காகவே

இதற்காகவே

ஒவ்வொரு போட்டோவுக்கும் வழக்கமாக, அழகான கேப்ஷன் கொடுக்கும் ஊர்வசி, இந்தப் படத்துக்கு கேப்ஷன் ஏதும் கொடுக்கவில்லை. இதை கவனித்த நெட்டிசன்கள் சிலர், இன்னைக்கு ஏன் கேப்ஷன் போடறதுக்கு மறந்தீங்க? என்று கேட்டுள்ளனர். ஒருவர், நிவாரண நிதியாக, ரூ.5 கோடி கொடுத்ததற்கு நன்றி. இதற்காகவே உங்கள் அனைத்து படங்களையும் இனி பார்க்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளனர்.

கவர்ச்சியாக

கவர்ச்சியாக

ஒரு ரசிகை, நான் உங்களை விட அழகு. ஆனா, என்னை யாரும் கண்டுக்க மாட்டேன்கிறாங்க என்று கவலையாகத் தெரிவித்துள்ளார். 'உங்க போன்ல இருக்கிற போட்டோ யாருடையது?ன்னு உற்று உற்றுப் பார்க்கிறேன், தெரியலை? என்று சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர் அவரது அழகை கவிதையாகவும் கவர்ச்சியாகவும் வர்ணித்துள்ளனர். 'உங்க வீட்டுல என்னை வேலைக்காரனா சேர்த்துக்கோங்க என்று ஒரு ரசிகர் கெஞ்சி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X