தெய்வம்னு குறிப்பிடணுமாம்ல..! பிகினியில் கிளாமர் ஹீரோயின்... கண்டபடி விளாசித் தள்ளும் ரசிகர்கள்!

By

மும்பை: பிரபல ஹீரோயின் வெளியிட்டுள்ள பிகினி போட்டோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

செம்ம ஹாட்டாக வீடியோ வெளியிட்ட ஊர்வசி ரவ்தெலா .. இன்ஸ்டாவில் ஹார்ட் விட்டுத் தள்ளிய ரசிகர்கள் - வீடியோ

கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

சீனாவில் உருவான இந்த உயிர்கொள்ளி வைரஸ், மற்ற நாடுகளுக்கும் பரவிவிட்டது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள்

உலக நாடுகள்

அமெரிக்காவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால், 12,380 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

படப்பிடிப்பு இல்லை

படப்பிடிப்பு இல்லை

மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவு என்றாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. படப்பிடிப்புகள் இல்லை என்பதால், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சில நடிகர், நடிகைகள் தாங்கள் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றனர்.

ஊர்வசி ரவ்தெலா

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகை ஊர்வசி ரவ்தெலா கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்த பிகினி ஸ்டில் வைரலானது. இப்போது மேலும் ஒரு பிகினி டிரெஸ் போட்டோவை பதிவிட்டுள்ளார். வெளிநாட்டு பீச் ஒன்றில் சன் கிளாஸ் அணிந்தபடி, ஸ்டைலாக பிகினி உடையில் நிற்கும் ஊர்வசி, 'என்னை தெய்வம் என்று குறிப்பிடுங்கள்' என்று இதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

என்ன கிடைக்குது

என்ன கிடைக்குது

இந்த போட்டோ வேகமாக பரவி வருகிறது. இதற்கு ரசிகர்கள் பலர் கண்டபடி தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு நெட்டிசன், எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். எல்லா நடிகைகளுமே இப்படி போட்டோ போடறீங்களே? இதனால உங்களுக்கு என்னங்க கிடைக்குது? என்று விளாசியுள்ளார். இன்னும் சிலர் அவரது அழகை வர்ணித்துள்ளனர்.

என்னது தெய்வமா?

என்னது தெய்வமா?

'ஊர்வசி நீங்க தெய்வம் மட்டுமல்ல, தேவதை. கடல் தேவதை' என்று சிலர் குறிப்பிட்டுள் ளனர். இன்னொரு நெட்டிசன், என்னது தெய்வமா? எப்படி இதை சொல்லலாம்? தெய்வங்கள் இந்த மாதிரி நடந்துகொள்ளாது' என்று சிலர் சாடியுள்ளனர். 'இதெல்லாம் சரியா எழுதறீங்க, கேப்ஷனை மட்டும் காப்பி பேஸ்ட் பண்ணிடுங்க? என்று சிலர் கலாய்த்துள்ளனர். (கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்க எழுத்தாளரின் போஸ்ட்டை, இவர் அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணியதாக சர்ச்சை எழுந்தது).

தெலுங்கு படம்

தெலுங்கு படம்

நடிகை ஊர்வசி ரவ்தேல, 'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X