Just In
- 2 min ago
பாலிவுட் மெகா ஸ்டார்களுடன் கைகோர்க்கும் பிரபாஸ்...பிரம்மாண்டமாக தயாராகும் அதிரடி
- 1 hr ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 1 hr ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- 2 hrs ago
இணையத்தை தெறிக்க விடும் லெஜன்ட் சரவணனின் மாஸ் ஆக்ஷன் போட்டோஸ்
Don't Miss!
- News
இந்திய விவசாயிகள் ஒடுக்கப்படுவது கவலையளிக்கிறது.. மலாலா யூசுப்சாய் பேச்சு
- Finance
9 மாத சரிவில் சீன உற்பத்தி துறை.. கடும் பாதிப்பில் வேலைவாய்ப்பு சந்தை..!
- Automobiles
அப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே?... நம்ம ரோடு தாங்குமா?
- Lifestyle
2020 ஆம் ஆண்டில் சாதித்த மிகவும் சக்தி வாய்ந்த இந்திய பெண்கள்!
- Education
பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Sports
4வது டெஸ்ட்ல பிட்ச் எப்படி இருக்கும்னு பாக்க ஆவலா இருக்கு... களத்தில் இறங்கிய ரோகித் சர்மா!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நரம்புல குளிர்தாம்ல... எக்குத்தப்பான போட்டோ... எடக்குமடக்கு கேப்ஷன்... இது ரிஷப் காதலியின் பிங்க்!
மும்பை: நடிகை ஊர்வசி ரவ்தெலா பிங்க் நிற உடை அணிந்து வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரபல மாடல் ஊர்வசி ரவ்தெலா. இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ரிஷப் பன்ட் காதலி
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ரிஷப் பன்ட்டை இவர் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை என்று ஊர்வசி மறுத்தாலும் இந்த கிசு கிசு பாலிவுட்டில் தொடர்ந்து பரவி வருகிறது. இவர், தனது சமூக வலைத்தளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடிப்பது வழக்கம்.

பிங்க் நிற உடை
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பக்க கால் முழுவதும் தெரியும்படி, உடையை உடுத்தி பரபரப்பைக் கிளப்பி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரை செக்ஸியாக வர்ணித்திருந்தனர். அந்த போட்டோ இணையத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில் இப்போது புதிய பிங்க் நிற உடையணிந்த புகைப்படங்களை அவர் இப்போது வெளியிட்டு ள்ளார்.
லெபனான் டிசைனர்
இந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் இந்தப் புகைப்படங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேலான கமென்ட்களையும் அள்ளித் தெளித்துள்ளனர். ஊர்வசி அணிந்துள்ள இந்த உடைகளை லெபனானைச் சேர்ந்த டிசைனர் ஜெமி மாலோஃப் வடிவமைத்துள்ளார்.
|
நரம்புகளில் குளிர்ச்சி
இதில் ஒரு போட்டோவுக்கு, 'என் நரம்புகளில் குளிர்ச்சி' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ஊர்மிளா. இந்த படத்துக்கும் அந்த கேப்ஷனுக்கும் என்னங்க அர்த்தம்? என்று கேட்டுள்ளனர் சில ரசிகர்கள். ஒரு ரசிகர், உங்களை மட்டும் ஏன் கடவுள் இவ்வளவு அழகாக படைத்திருக்கிறான் என்று ஏக்கமாகக் கேட்டுள்ளார். இந்த விஷயம் பன்ட்டுக்கு தெரியுமா? என்று கிண்டலடித்துள்ளார் ஒரு ரசிகர்.

புதிய செருப்பு
இன்னொரு புகைப்படத்தில், ஒரு புதிய ஜோடி செருப்பு உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு சின்ட்ரெல்லா சாட்சி என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதை, 'செருப்புக்கு விளம்பரமா?' என்று ரசிகர்கள் கேட்டுள்ளனர். ஒரு ரசிகர், வர வர ரொம்ப அழகா ஆயிட்டே போறீங்களே? எப்படி என்று கேட்டுள்ளார். 'சின்ட்ரெல்லாங்கறது ஒரு விசித்திர கதை. அது உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார் மற்றொரு ரசிகர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.