மூஞ்சி பூரா வைர மாஸ்க்.. லெஜண்ட் சரவணா ஹீரோயினுக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா.. இது வேற மாறி!
சென்னை: நடிகை ஊர்வசி ரவுத்தேலா வைரத்தால் ஆன ஃபேஸ் மாஸ்க்கை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் வாயை பிளக்க வைத்திருக்கிறது.
லெஜண்ட் சரவணன் அருள் நடித்து வரும் புதிய படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி உள்ளவர் ஊர்வசி ரவுத்தேலா.
பிரபல பாலிவுட் கிளாமர் குயினான இவர் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.

பாக்தாத் குதிரை
ஈராக் நாட்டில் வெளியாகும் பிரபல பாக்தாத் டைம்ஸ் அட்டைப் படத்தை அலங்கரித்த முதல் இந்திய நடிகை என்கிற பெருமையை சமீபத்தில் பெற்றார் ஊர்வசி ரவுத்தேலா. குதிரையுடன் பாக்தாத் இளவரசி போல காட்சி தரும் தனது புகைப்படங்களை வரிசையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.

லெஜண்ட்டுக்கு ஜோடியாக
இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இணைந்து 200 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமாக இயக்கி வரும் லெஜண்ட் சரவணா படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ள இவருக்கு இந்த படம் தான் முதல் தமிழ்ப் படம்.

மணாலியில் ஷூட்டிங்
லெஜண்ட் சரவணா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மணாலியில் நடைபெற்றது. அந்த படத்தில் ஐஐடி மாணவியாக நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலாவுக்கும் லெஜண்டுக்கும் இடையே ஒரு சூப்பரான ரொமாண்டிக் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வைர மாஸ்க்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலையுயர்ந்த வைரங்களினால் ஆன முக மாஸ்க்கை அணிந்து கொண்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு பாலிவுட் பிரபலங்களையும் ரசிகர்களையும் வியப்பில் வாய் பிளக்க வைத்துள்ளார் ஊர்வசி ரவுத்தேலா.
செம வெயிட்
மேலும், இந்த வைர மாஸ்க் மிகவும் வெயிட்டாக இருக்கிறது என்றும், இதை அணிந்து கொண்டு இருப்பதற்காக என்னை யாரும் திட்ட வேண்டாம் என்றும் கேப்ஷன் கொடுத்து வெறுப்பேற்றி வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. விரைவில் இவர் நடிப்பில் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் உருவாகி வரும் பிளாக் ரோஸ் படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











