ரெண்டாவது ஷெட்யூல் ஓவராம்.. கையில் ஸ்க்ரிப்ட் பேப்பருடன் நிற்கும் லெஜண்ட் சரவணா ஹீரோயின்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஸ்க்ரிப்ட் பேப்பருடன் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழில் லெஜண்ட் சரவணா நடிக்கும் அறிமுக படத்தில் நாயகியாக நடித்து வரும் ஊர்வசி ரவுத்தேலா, பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

மணாலியில் படப்பிடிப்பில் இருந்த ஊர்வசி ரவுத்தேலா, அதனை தொடர்ந்து வெப்சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஹாட் குயின்

ஹாட் குயின்

பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் என கலக்கி வருகிறார் ஊர்வசி ரவுத்தேலா. இன்ஸ்டாகிராமில் மட்டுமின்றி தான் நடித்து வரும் படங்களில் தாராளமான கவர்ச்சியை காட்டி இளைஞர்களை கவர்ந்திழுத்து வருகிறார் இந்த ஹாட் குயின். விர்ஜின் பானுப்பிரியா படத்தைத் தொடர்ந்து பிளாக் ரோஸ், லெஜண்ட் சரவணா படம் மற்றும் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

பிசி பேபி

பிசி பேபி

சமீபத்தில் லெஜண்ட் சரவணா படத்திற்காக மணாலியில் படப்பிடிப்பு நடந்த நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடாவின் வெப்சீரிஸில் கலந்து கொண்டு இருக்கிறார் ஊர்வசி ரவுத்தேலா. அந்த வெப்சீரிஸின் இரண்டாவது ஷெட்யூல் தற்போது முடிவடைந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை போட்டு அறிவித்துள்ளார்.

ஸ்க்ரிப்ட் பேப்பர்

ஸ்க்ரிப்ட் பேப்பர்

தோர் நடிகருடன் நெட்பிளிக்ஸின் எக்ஸ்ட்ராக்ஷனில் இணைந்து நடித்த பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா அடுத்ததாக நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுடன் இணைந்து இன்ஸ்பெக்டர் அவினாஷ் எனும் வெப் தொடரில் நடித்து வருகிறார். அந்த வெப் தொடரின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கையில் ஸ்க்ரிப்ட் பேப்பருடன் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, ரந்தீப் ஹூடா அருகில் நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

20 பவுண்ட் எடை

20 பவுண்ட் எடை

மேலும், பிலிம்ஃபேர் அட்டை படத்துக்காக நடிகை ஊர்வசி ரவுத்தேலா அணிந்திருக்கும் பிரம்மாண்ட ஆடை பலரது பார்வைகளையும் கவர்ந்துள்ளது. அந்த உடையுடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஊர்வசி ரவுத்தேலா, டிரெஸ் நல்லா தான் இருக்கு, ஆனால், 20 பவுண்ட் எடை கொண்டது என ஃபீல் பண்ணி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X