கருப்பு உங்களுக்கு எடுப்பு.. பிகினி நடிகையின் தாறுமாறு தத்துவம்.. அந்த கோரிக்கை வைக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள வித்தியாசமான கருப்பு பிகினி ஸ்டில் வைரலாகி வருகிறது.
அழகி போட்டிகளில், அதிக டைட்டிலை வென்றவர் என்ற அறிமுகத்துடன் பாலிவுட்டுக்குள் என்ட்ரியானவர், ஊர்வசி ரவ்தெலா.
அதனால்தானோ என்னவோ, போட்டோக்களின் மீதும் போட்டோஷூட் மீதும் ஊர்வசிக்கு அப்படியொரு ப்ரியம்.

போட்டோஷுட்
பிகினி, கிளாமர், ஒர்க் அவுட் என வகை வகையான போட்டோஷுட் நடத்தியுள்ள ஊர்வசி, அவற்றை தனது இன்ஸ்டாகிராமில் நிரப்பி வருகிறார். தினமும் ஒன்று அல்லது இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒன்று என புகைப்படங்களை பதிவிட்டு வருகிறது ஊர்வசியின் சோசியல்
மீடியா டீம்! இதைப் பார்ப்பதற்காகவே அவரது இன்ஸ்டா பக்கத்துக்கு வரும் ரசிகர்கள் அதிகம்.

பாலிவுட் படம்
அவர்களை ஏமாற்றாத பணியையை எப்போதும் செய்துவருகிறார், ஊர்வசி. பிரபல மாடலான அவரது முதல் பாலிவுட் படம், சிங் சாப் த கிரேட்'. சன்னி தியோல் ஹீரோவாக இந்தப் படத்தின் மூலம் கவனிக்கப்பட்ட ஊர்வசிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. அடுத்து, புல்கிட் சாம்ராட், யாமி கவுதமுடன் இணைந்து, ஷனம் ரே என்ற படத்தில் நடித்தார்.

திருட்டுப் பயலே 2
விஷால் பாண்டியாவின் ஹேட் ஸ்டோரி 4, அனில் பாஸ்மியின் பகல்பன்டி உட்பட சில படங்களில் நடித்துள்ள ஊர்வசி, இப்போது 'திருட்டுப் பயலே 2' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். அஜய் லோஹன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 'விர்ஜின் பானுப்பிரியா' என்ற படம் லாக்டவுனால் ஒடிடியில் வெளியானது.

கைகளில் தம்புள்ஸ்
பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில், அவர் ஜோடியாக நடிக்க, இவரிடம் பேசிவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இதற்கிடையே, இவர் இப்போது வித்தியாசமான பிகினி புகைப்படம் ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கைகளில் தம்புள்ஸை வைத்துக்கொண்டு அவர் நிற்கும் போட்டோவுக்கு ஏராளமான லைக்ஸ்.

மகிழ்ச்சி என்பது
வழக்கமாக அழகழகான கேப்ஷன்களை பதிவிடும் ஊர்வசி ரவ்தெலா, இப்போது தத்துவ கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதாவது, மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது அல்ல, உங்களிடம் உள்ள அனைத்தையும் அனுபவிப்பது என்று பதிவிட்டுள்ளார். ஒருவர், கருப்பு டிரெஸ் உங்களுக்கு எடுப்பா இருக்கு என்று கூறியுள்ளார்.
Recommended Video

கல்யாண கோரிக்கை
சில நெட்டிசன்ஸ், மேடம் கல்யாணம் பண்ணிக்குறீங்களா? என்று கோரிக்கை வைத்துள்ளனர். உங்க ஸ்மைல் மயக்குது என்று சிலர் கூறியுள்ளனர். பலர் அவர் அழகை அப்படி இப்படி என்று வர்ணித்துள்ளனர். நடிகை ஊர்வசியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











